தமிழ்க்கணிமை IRC உரையாடல் – அக்டோபர் 16 2015 – ஆவணம்

<Prem> அனைவருக்கும் வணக்கம்!
<Kalarani> வணக்கம்!
<Kalarani> இன்று இணைப்பில் பலரைக் காணவில்லையே!!
<shrini> வணக்கம்
<shrini> Prem: Kalarani வணக்கம்
<Kalarani> வணக்கம் ஶ்ரீனி!
<Kalarani> தமிழுலகில் புதிதாக என்ன நடக்கிறது?
<shrini> நாம் இன்னும் சிறந்த முறையில் இந்த உரையாடல் பற்றிய அறிவிப்பை பலருக்கும் கொண்டுசெல்ல வேண்டும்
<shrini> 😉
<shrini> தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கணித்தமிழ் பேரவை அமைப்புகள் பல்வேறு இடங்களில் தொடங்கப் படுகின்றன
<shrini> பல்வேறு தனியாரும் அமைப்புகளும் தமிழ்க்கணிமையில் ஆர்வம் காட்டுகின்றனர்
<shrini> http://www.ssn.edu.in/Speech_Lab/Demo.html
<shrini> ssn கல்லூரியின் உரை ஒலி மாற்றி பார்த்தீர்களா?
<Kalarani> ஆம். சிறு சிறு வாக்கியங்களை சோதித்துப்பார்த்தேன்.
<Kalarani> நல்ல முயற்சி.
<shrini> இது போன்ற முயற்சிகள் கட்டற்ற மென்பொருட்களாக வர வேண்டும்
<Kalarani> எப்படி செயல்படுத்தினர் என்ற விவரங்கள் கூட இந்த தளத்தில் தரப்படவில்லை.
<Kalarani> Publications – இல் உள்ள பிரசுரங்களைத்தேடி தான் படித்துப்பார்க்கவேண்டும்.
<shrini> இது போன்ற பல செயல்பாடுகள் பல இடங்களில் பல முறை
<shrini> முதலில் இருந்து செய்யப்படுவதே வேதனை
<shrini> Prem: உங்களைப் பற்றிய அறிமுகம் சொல்ல இயலுமா?
<shrini> கணியம் இதழுக்கான உங்கள் பங்களிப்புகளுக்கு மிக்க நன்றி Kalarani
<shrini> தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்களுக்காக apache foundation போல ஒன்று உருவாக்குதல் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்
<shrini> பயன் இருக்குமா? உங்கள் கருத்து என்ன?
<Kalarani> கணியத்தில் எழுதுவது குறித்து எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஶ்ரீனி.
<Kalarani> apache foundation பற்றி இதுவரை அறிந்ததில்லை.
<Kalarani> இப்போது தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.
<shrini> தமிழா குழு உள்ளது
<shrini> அதை அமைப்பாக வளர்க்கலாம்
<shrini> பல்வேறு பணிகளைச் செய்ய ஒரு 10 பேராவது தேவை
<shrini> ஆவணமாக்கல், பொதியாக்கம், சோதனை, பரப்புரை, நிரலாக்கம்
<shrini> என பல்வேறு பணிகள்
<Kalarani> நல்லது
<shrini> மேலும் பிற தரமான தமிழ்க்கணிமை சார் மென்பொருட்களை இணைக்கலாம்
<Kalarani> ஆங்காங்கே தனித்தனியாக நடக்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்க உதவும்.
<shrini> அமைப்புகான தேவை, நோக்கம், பற்றி விரிவாக இன்னும் யோசிக்க வேண்டும்
<shrini> அப்போதுதான் பிற திட்டங்களை இணைக்க ஏதுவாக இருக்கும்
<Kalarani> நிச்சயமாக.
<shrini> உங்களுக்கு இந்த யோசனை சரியாக இருந்தால் தேவை, நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என மின்னஞ்சல் அனுப்புங்கள்
<shrini> ஏற்கெனவே பல அமைப்புகள் உள்ளன
<shrini> உத்தமம், கணித்தமிழ்ச்சங்கம்
<shrini> கணித்தமிழ்ப்பேரவை
<shrini> ஆனால் இவை கட்டற்ற மென்பொருட்களுக்கானவை அல்ல
<shrini> வணிக நோக்கம் கொண்டவை
<shrini> எனவே நன்கு யோசித்து செயல்பட வேண்டும்
<Kalarani> நிச்சயமாக. தமிழுக்கான கட்டற்ற மென்பொருட்களுக்கான அமைப்பின் நோக்கம் பற்றி சிந்தித்து மின்னஞ்சல் அனுப்புகிறேன்.
<shrini> நன்றி
<shrini> அமைப்பின் அங்கமாக கணியத்தையும் இணைக்கலாம்
<Kalarani> நல்ல திட்டம் தான்!
<Prem> ஸ்ரீனி – முன்பு சொன்னதுதான் 🙂
<Kalarani> கணியத்தில் இன்னும் பல தலைப்புகள் குறித்து எழுதப்படவேண்டும்.
<Prem> நான் ஒரு GNU  Linux ஆர்வலன்.. கடந்த 8-9 வருடங்களாக மடிக்கணினியில் Linux பயன்படுத்தி வருகிறேன்.. IT துறையில் பணிபுரிந்து வருகிறேன்.
<shrini> நன்றி     Prem 🙂
<Prem> GIMP     பற்றி எழுத வேண்டும்
<shrini>  ஆம். கணியத்தில் எழுத பலரையும் ஊக்குவிக்க வேண்டும்
<shrini> சென்னையில் பயிற்சிப் பட்டறை நடந்ந இயலுமா?
<Kalarani> வலைப்பதிவுகளாக மட்டும் இல்லாது, screencast / podcast போன்றவையும் இடம்பெறவேண்டும்.
<shrini> ஆம்
<Prem> கொஞ்சம் வேலைப் பளு.. குறைந்ததும் தொடங்குகிறேன்
<shrini> கணியம் ஆர்வலரகள் சென்னையில் ஒரு சந்திப்பு நடத்த முடிந்தால், நிறைய பேரை உற்சாகப் படுத்தலாம்
<Kalarani> கணியத்தை நான் படித்த கல்லூரி மாணவரிகளிடம் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.
<shrini> நானும் எனது பைதான் தொடரை தொடர்கிறேன்
<shrini> மகிழ்ச்சி
<shrini> இதழ் நிறைய பேரை அடைகிறது
<Kalarani> எது குறித்த பயிற்சிபட்டறை நடத்தவேண்டும்?
<shrini> technical writing
<shrini> பற்றி
<shrini> நுட்ப விசயங்களை தமிழில் எழுதுவது பற்றி ஒரு நாள் பயிற்சி
<shrini> பயிற்சியாகவோ அல்லது ஒரு சந்திப்பாகவோ அல்லது ஒரே இடத்தில் கட்டுரைகள் எழுதுவதாகவோ இருக்கலாம்
<Kalarani> நுட்பம் பற்றி எழுதுவதி உள்ள சிக்கல்களை பட்டியலிடலாம்.
<Kalarani> *எழுதுவதில்
<shrini> காஞ்சிபுரத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒன்றாக அமர்ந்து உபுண்டு ஆவணத்தை மொழிபெயர்த்தோம்
<shrini> அது போலவும் செய்யலாம்
<shrini> மகிழ்ச்சி
<shrini> ஒரு குழுவாக இயங்கினால், உற்சாகத்துடன் நிறைய தலைப்புகளில் படைப்புகள் கொண்டுவரலாம்
<Kalarani> தமிழில் கலைச்சொற்களை திரட்ட வேண்டும்.
<shrini> ஆம்
<Kalarani> ஆம். சென்றமாதத்தை விட இந்த மாதம் அதிக கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
<shrini> சென்னையில் உள்ள கணியம் பங்களிப்பாளர்களை சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய இயலுமா என்று பார்ப்போம்
<Kalarani> நல்லது.
<shrini> thoughtworks ல் இடம் கிடைக்குமா?
<Kalarani> முடியும் என்று தான் நினைக்கிறேன்.
<shrini> கேட்டு சொல்லுங்கள்
<shrini> அரைநாள் கூடப் போதும்
<shrini> அல்லது
<shrini> அரைநாள் உரையாடல், அரைநாள் கூட்டாக எழுதுதல் என்றும் இருக்கலாம்
<Kalarani>  Null chennai. chennai.rb போன்ற பல சந்திப்புகள் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
<Kalarani> கேட்டு சொல்கிறேன்.
<Kalarani> அலுவலக நண்பர்கள் சேர்ந்து, தமிழ் வார்த்தை விளையாட்டு ஒன்று ஆண்டிராயிடு இயங்குதளத்திற்கு (2011-ல்) உருவாக்கினோம்.
<Kalarani> தற்போது அது செயல்பாட்டில் இல்லை.
<shrini> ம்
<Kalarani> மீண்டும் அதை play store-இல் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கிறேன்.
<shrini> மகிழ்ச்சி
<shrini> http://tshrinivasan.blogspot.in/2015/03/blog-post_9.html
<shrini> இதற்கு யாராவது உதவ இயலுமா?
<shrini> இதற்கான தேவை பெருமளவில் உள்ளது
<shrini> வெளிநாட்டு தமிழ்ப்பள்ளிகள் சில இந்த செயலிக்காக காத்திருக்கின்றன
<shrini> பங்களிப்பாளர்கள் இருந்தால் இணையுங்கள்
<Kalarani> செயலி நிரலாக்கம் ஆரம்பித்துவிட்டதா?
<shrini> இதற்காக சில முயற்சிகள் பாதியில் உள்ளன
<shrini> இருவர் தொடங்கினர்
<shrini> தொடரவில்லை
<Kalarani> github இணைப்பு இருந்தால் அநுப்புங்கள்
<shrini> சரி
<Kalarani> இவர்களுக்கு கதம்பம்-உம் பயன்படலாம்.
<Kalarani> github.com/rekhas/Kadhambam
<shrini> https://github.com/Jetsonpaul/Learn-TaMil
<shrini> https://rawgit.com/Jetsonpaul/Learn-TaMil/master/index.html
<Kalarani> தற்போது வெறும் 200 சொற்களே உள்ளன. மேலும் சொற்களைச்சேர்க்கவேண்டும்.
<shrini> கதம்பம் செயலியாகக் கிடைக்குமா?
<Kalarani> வெளியிடலாம்.
<Kalarani> மேலும் பல சொற்களைச்சேர்த்துவிட்டு வெளியிடலாம் என நினைத்தேன்.
<shrini> https://github.com/navinspm/tamizham_android_app
<Kalarani> மின்னகராதி மூலம் api கொண்டு சொற்களை பெறும் வசதி உள்ளதா?
<Kalarani> தங்களுக்கு ஏதும் தெரியுமா?
<shrini> விக்கிசனரி api
<shrini> பயன்படுத்தலாம்
<shrini> கதம்பம் விரைவில் வெளியிடுக
<shrini> பல்வேறு கட்டங்களாக வார்த்தைகள் சேர்க்கலாம்
<shrini> release quick; release often
<shrini> 🙂
<Kalarani> சரி தான். thoughtworks-இன் தாரக மந்திரம் 🙂
<Kalarani> விரைவில் கதம்பத்தை வெளியிடுகிறேன்.
<shrini> நன்றி
<shrini> வேறு ஏதாவது உரையாடல் உண்டா?
<Kalarani> இல்லை
<shrini> சரி. இப்போது விடைபெறுவோம்
<Kalarani> அடுத்த சந்திப்பில் பார்க்கலாம். விடைபெறுகிறேன்.
<shrini> இந்த உரையாடலை தளத்தில் பதிவேற்றுகிறேன்
<shrini> நன்றி Kalarani Prem
<shrini> நல்லிரவாகுக
<Kalarani> வணக்கம்!

Advertisements

தமிழ் IRC – அக்டோபர் 16, 2015 சந்திப்பு

தமிழ் IRC – அக்டோபர் 16, 2015 அன்று இந்திய நேரம் இரவு  9 மணிக்கு (9 PM IST) நடைபெறும்

கணிணித் தமிழ் தொடர்பான உங்கள் பங்களிப்பு விவரங்கள், புது முயற்சிகள், திட்டங்கள், புது திட்ட வேண்டுகோள்கள் ஆகியன பற்றி உரையாடலாம்.

http://webchat.freenode.net/

அனைவரும் வாருங்கள்.

irc-demo

Nickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள்.

Channels என்பதில் tamilirc என்று தாருங்கள்.

படத்தில் காணும் எண்ணை அதன் கீழ் உள்ள புலத்தில் இட்ட பிறகு Connect பொத்தானை அழுத்துங்கள்.

ஒவ்வொரு மாதமும் ஒரு தேதியில் இது போல் உரையாடலாம்.

சரியாக ஒரு மணி நேரம் உரையாடிக் கலைவோம். இந்த உரையாடல்களைப் படியெடுத்துப் பாதுகாத்தும் வைப்போம்.

மற்ற விவரங்களைக் கூடி முடிவெடுப்போம்.

நன்றி.

தமிழ் IRC – செப்டம்பர் 16, 2015 சந்திப்பு

தமிழ் IRC – செப்டம்பர் 16, 2015 அன்று இந்திய நேரம் இரவு  9 மணிக்கு (9 PM IST) நடைபெறும்

கணிணித் தமிழ் தொடர்பான உங்கள் பங்களிப்பு விவரங்கள், புது முயற்சிகள், திட்டங்கள், புது திட்ட வேண்டுகோள்கள் ஆகியன பற்றி உரையாடலாம்.

http://webchat.freenode.net/

அனைவரும் வாருங்கள்.

irc-demo

Nickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள்.

Channels என்பதில் tamilirc என்று தாருங்கள்.

படத்தில் காணும் எண்ணை அதன் கீழ் உள்ள புலத்தில் இட்ட பிறகு Connect பொத்தானை அழுத்துங்கள்.

ஒவ்வொரு மாதமும் ஒரு தேதியில் இது போல் உரையாடலாம்.

சரியாக ஒரு மணி நேரம் உரையாடிக் கலைவோம். இந்த உரையாடல்களைப் படியெடுத்துப் பாதுகாத்தும் வைப்போம்.

மற்ற விவரங்களைக் கூடி முடிவெடுப்போம்.

நன்றி.

தமிழ் IRC – ஆகத்து 16, 2015 – உரையாடல் தொகுப்பு

[16:31] == Selin_ [5e0e2666@gateway/web/freenode/ip.94.14.38.102] has joined #tamilirc
[16:32] <ravidreams> வணக்கம்
[16:33] <Selin_> வணக்கம் நண்பர்களே..
[16:35] <Selin_> இரவி, சண்முகம்..வணக்கம் _/\_
[16:35] <Selin_> எல்லாம் எப்படி செல்கிறது?
[16:38] <ravidreams> சண்முகம் எப்போதும் பல்வேறு ஓடைகளில் இருப்பவர்
[16:38] <ravidreams> வேறு நண்பர்கள் யாரும் இணைப்பில் இருக்கிறார்களா பார்க்கிறேன்
[16:40] <Selin_> AZ Screen Recorder என்ற செயலியை ஆன்ட்ராய்டில் தமிழில் மொழிபெயர்த்துவிட்டோம்.
[16:41] <Selin_> தமிழ் இந்திய மொழி மட்டும் அல்ல. ஆகவே, இந்தியக் கொடியை வைப்பதை விட, தமிழுக்காய் ஒரு கொடி தயாரிப்போமா?
[16:42] <ravidreams> மகிழ்ச்சி
[16:43] <ravidreams> தமிழுக்கு என்று பொதுவான ஏற்புடைய கொடி இல்லை
[16:43] <ravidreams> என்பதால் அ, த போன்ற எழுத்துகளை ஒரு படிமம் செய்து முகப்புப் படமாக வைக்கலாம்
[16:44] <ravidreams> இன்றைய நிகழ்வில் சென்ற வார தமிழ் இணையக் கல்விக் கழக நிகழ்வு பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணினேன்
[16:47] <Selin_> சரி இரவி
[16:47] == ta_dinesh [6a33e870@gateway/web/freenode/ip.106.51.232.112] has joined #tamilirc
[16:47] <Selin_> தமிழ் கணிணி பற்றிக் கூறுங்கள்
[16:47] <ta_dinesh> வணக்கம்
[16:48] <Selin_> வணக்கம் Dinesh
[16:49] <ta_dinesh> இன்றைய தலைப்பு என்ன ?
[16:49] <ta_dinesh> எதைப்பற்றி விவாதம் சென்று கொண்டிருக்கிறது?
[16:51] <ravidreams> வணக்கம் தினேசு
[16:51] <ravidreams> ஒவ்வொரு மாதமும் 16ஆம் தேதி கூடுகிறோம்
[16:51] <ravidreams> சென்ற செப்டம்பர் முதல் இவ்வாறு செய்கிறோம்
[16:52] <ravidreams> பொதுவாக, தமிழ் பற்றி ஆர்வமுள்ள நண்பர்கள் இணைந்து பேசும் உரையாடல்
[16:52] <ta_dinesh> நன்றி
[16:52] <ta_dinesh> இன்றைய தலைப்பு ?
[16:53] <ravidreams> தலைப்பு என்று ஏதும் இல்லை தினேசு.. உரையாடலில் உள்ள நண்பர்கள் தாங்கள் செய்யும் பணிகளையும் அண்மைய தமிழ் சார் செய்திகளையும் பகிர்ந்து கொள்வர்
[16:53] <ravidreams> தற்போது துவிட்டரில் அறிவித்திருக்கிறேன்
[16:54] <ravidreams> செலின், நேற்று இந்தித் திணிப்பை எதிர்த்து இந்திய அளவில் பல்வேறு மொழியினர் துவிட்டரில் பரப்புரை செய்தனர்
[16:54] <ravidreams> இது ஒரு நல்ல மாற்றம்.
[16:54] <ravidreams> ஏனெனில், தமிழர்களை மட்டும் இந்திக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் போக்கு இருந்தஅது
[16:54] <ta_dinesh> ஆம். நானும் அதில் பங்கு கொண்டேன்.
[16:54] <ravidreams> தற்போது இந்நிலைப்பாட்டுக்குப் பரவலான அடையாளப் கிடைத்திருக்கிறது
[16:55] == viruba [b641d0bb@gateway/web/freenode/ip.182.65.208.187] has joined #tamilirc
[16:55] <ta_dinesh> ஒரு இருநூறு செய்திகளை பகிர்ந்தேன்.
[16:55] <ta_dinesh> நல்லதொரு தொடக்கம்.
[16:55] <Selin_> ஆமாம், எதிர்பார்த்ததை விட பெரிய வெற்றி.. பெங்களூர் மக்கள் முன்னெடுத்த இந்த பரப்புரை, இந்தியா முழுவதும் ஆதரவைப் பெற்றது.
[16:55] <ravidreams> வணக்கம் குமரேசன்
[16:55] <viruba> அனைவருக்கும் வணக்கம்
[16:55] <ta_dinesh> வணக்கம் viruba
[16:56] <viruba> வணக்கம் இரவி, தினேஸ்
[16:56] <Selin_> வணக்கம்
[16:57] <ta_dinesh> இன்றும் கூட துவித்தரில் புரட்சி தொடர்ந்தது
[16:57] == khaleel [6539caa3@gateway/web/freenode/ip.101.57.202.163] has joined #tamilirc
[16:58] <ravidreams> வருக கலீல்
[16:58] <Selin_> அருமை.. தாய்மொழி உரிமை என்பது ஐக்கிய நாடுகளின் அடிப்படி மொழியுரிமைக் கொள்கை.. அதன் அனைத்து உறுப்பு நாடுகளும் அதனைப் பின்பற்ற வேண்டும்.
[16:59] <Selin_> இந்தியா விதிவிலக்கல்ல
[16:59] <Selin_> வணக்கம் கலீல்.
[16:59] <ta_dinesh> வணக்கம் khaleel
[17:00] <ravidreams> முன்னேறிய நாடுகளில் இன்னும் பல விசயங்களில் முன்னேறிய பார்வை உண்டு
[17:00] <Selin_> ஆமாம்.
[17:00] <ravidreams> ஐக்கிய இராச்சியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இரு நாறு ஆண்டுக்கு மேற்பட்ட அரசியல் முதிர்ச்சி இருக்கிறது
[17:00] <ravidreams> நாம் அந்த நிலையை எட்ட காலம் எடுக்கும்
[17:01] <ravidreams> அல்லது, சிங்கப்பூர் மாதிரி தொடக்கத்திலேயே சரியாக அமைந்திருக்க வேண்டும் (மொழியுரிமை தொடர்பாக மட்டும்)
[17:01] <Selin_> ஆமாம்
[17:01] <ta_dinesh> இனிமேல் துவங்க முடியாது.. ஆனால் மாற்றத்தை கொண்டு வரலாம்.
[17:02] <ta_dinesh> தொடர் போராட்டங்கள் மட்டுமே இதற்கு ஒரு முடிவு கட்டும்.
[17:02] <khaleel> அனைவருக்கும் வணக்கம்
[17:02] <Selin_> இப்போதாவது இந்த அடிப்படை அரசியல் புரிதல் மக்களிடையே பரவத் தொடங்கியிருப்பது மிகவும் வரவேற்கத் தக்க விசயம்
[17:05] <ta_dinesh> இது தொடரனும்
[17:05] <Selin_> இரவி, தமிழ் இணையக் கல்வி திட்டத்தில் என்னென்ன நடைபெற்றது என்று கூறுவீர்களா?
[17:06] <ravidreams> கணித்தமிழ் பற்றிய இரு நாள் உரையாடல், செயற்றிட்டம் தயாரிக்கும் நிகழ்வாக அமைந்தது
[17:07] <ravidreams> நீங்கள் அனுப்பி வைத்த விக்னேசுவர ராசு தான் நிகழ்ச்சியின் நாயகன் 🙂
[17:07] <viruba> அன்றைய கூட்டத்தின் அறிக்கை விரைவில் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வலைப்பக்கத்தில் இணைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள்
[17:07] <ravidreams> 5 நிமிடப் பேச்சில் பலரையும் கவர்ந்து விட்டார்
[17:07] <Selin_> அருமை..
[17:09] <ta_dinesh> நானும் விக்னேஷுடன் சிறிது நேரம் பேசும் வாய்ப்பு கிடைத்தது..
[17:09] <ta_dinesh> ஒரு வழியா, என்னோட உச்சரிப்பை மாத்திக்கணும் புரிய வெச்சுட்டார்..
[17:09] <Selin_> 🙂
[17:10] <ravidreams> இங்கேயே இருக்கும் போது ஏற்படுத்திக் கொள்ளும் சமரசம், சோம்பலை வெளியில் இருந்து வருவோர் மிக இலகுவாகச் சுட்டிக் காட்ட முடிகிறது
[17:11] <ta_dinesh> வெளியே இருந்து வருவபர்கள் சொன்னால் தான் ஏற்றுக்கொள்கிறார்கள்
[17:11] <ta_dinesh> உள்ளிருந்து சொன்னால் மதிப்பதில்லை
[17:12] == Prem [4924af8d@gateway/web/freenode/ip.73.36.175.141] has joined #tamilirc
[17:13] <ta_dinesh> வணக்கம் பிரேம்
[17:14] <Prem> வணக்கம்..
[17:14] <ravidreams> நமது சீனி கூட மலேசியா சென்று வந்த பிறகு கூடுதலாக நல்ல தமிழ் பேசத் தொடங்கினார்
[17:15] <ta_dinesh> ம்..
[17:15] <ravidreams> இன்று இந்தித் திணிப்பு தொடர்பாக வரும் விழிப்புணர்வு கூட உலகப் பார்வை வருவதன் காரணமாகவே
[17:15] <ravidreams> ta_dinesh: நான் அதிகாரவர்க்கத்தைப் பற்றிக் கூறவில்லை
[17:15] <ta_dinesh> ஆம்
[17:15] <ravidreams> நம்மைப் போன்ற நண்பர்களைத் தான் சொன்னேன்
[17:16] <ravidreams> தமிழ் கற்றல் கற்பித்தல், எண்மியமாக்கம், மொழிக் கணிமை, விக்கிப்பீடியா, கட்டற்ற மென்பொருள் என்று பல்வேறு தலைப்புகளில் விரிவாகப் பேசினோம்
[17:16] <ta_dinesh> நாம் விதிவிலக்கு
[17:17] <ravidreams> தமிழ் விக்கி, கட்டற்ற மென்பொருள் உரையாடல்கள் குறித்த விவரங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் பார்க்கலாம்
[17:18] <ravidreams> கலீல் இருக்கீங்களா
[17:18] <ravidreams> கல்லூரி மாணவர்கள் உடனடியாகச் செயற்படுத்துவது போன்று தமிழ் சார் கணிமைத் திட்டங்கள், செயலிகள் உருவாக்கத்துக்கு ஆலோசனை தேவை
[17:21] <viruba> இரவி விளக்கமாகச் சொல்லமுடியுமா ?
[17:21] == khaleel [6539caa3@gateway/web/freenode/ip.101.57.202.163] has quit [Ping timeout: 246 seconds]
[17:22] <viruba> கல்லூரி மாணவர்களுக்குத் தேவையானதா அல்லது கல்லீரி மாணவர்களின் உழைப்பில் உருவாக்கப்படவுள்ளதா ?
[17:22] == khaleel [6539caa3@gateway/web/freenode/ip.101.57.202.163] has joined #tamilirc
[17:22] <ravidreams> திருவண்ணாமலையில் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டுத் திட்டத்துக்குத் தமிழ்க்கணிமை சார் பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்
[17:22] <ravidreams> எடுத்துக்காட்டுக்கு, corpus உருவாக்கும் பணியில் ஈடுபடலாம்
[17:23] <khaleel> மன்னிக்கவும்… இணைப்பில் கோளாறூ ஏற்ப்பட்டுவிட்டது…
[17:23] <ravidreams> இது போல் வேறு என்ன திட்டங்கள் செய்யலாம்
[17:23] <ravidreams> எடுத்துக்காட்டுக்கு, corpus உருவாக்கும் பணியில் ஈடுபடலாம்
[17:24] <viruba> corpus உருவாக்கும் பணி என்னால் குறித்த corpus இல் சொற்களை உள்ளிடுவதற்கு மாணவர்களின் உதவி தேவையா ?
[17:25] <viruba> corpus இற்கான செயலி எங்குள்ளது ?
[17:25] <ravidreams> எல்லாமே அடி முதல் இனி தான் உருவாக்க வேண்டும்
[17:25] <ravidreams> தரவு உள்ளிடும் வேலை இல்லை
[17:25] <ravidreams> அதற்குத் தேவையான நிரல்களை எழுதுவார்கள்
[17:26] <viruba> இதற்கு மாணவர்கள் உகந்த திறனுடையவர்களாக இருப்பார்களா ?
[17:26] <khaleel> திருவண்ணாமலை SKP பொறியியல் கல்லூரியில் மாணவர்களுடன் எனக்கு தொடர்பு உள்ளது. அடுத்த மாதம் உள்ளூராக்கம் குறித்து ஒருநாள் பயிற்சிமுகாமும் திட்டமிட்டுள்ளேன்.
[17:26] == shrini [uid38773@gateway/web/irccloud.com/x-cwkbpbpbkechzqrs] has joined #tamilirc
[17:27] <khaleel> வணக்கம் சீனி..
[17:27] <shrini> வணக்கம்
[17:27] <Selin_> வணக்கம் சீனி
[17:27] <shrini> இப்போதான் இணைய இணைப்பு கிடைத்தது
[17:27] <ravidreams> திறமையான தேர்ந்தெடுத்த மாணவர்கள் தாம்
[17:27] <ta_dinesh> வணக்கம் shrini
[17:27] <ravidreams> சரியான வழிகாட்டலையும் பயிற்சியையும் அளிக்கலாம்
[17:27] <ravidreams> மகிழ்ச்சி, கலீல்
[17:27] <ravidreams> நான் சொல்வதும் அதே கல்லூரி தான்
[17:28] <khaleel> 🙂
[17:28] <viruba> corpus என்பது பற்றிய புரிதல் மாணவர்களுக்கு இருக்குமா ?
[17:28] <khaleel> தெரிந்திருக்க வாய்ப்பில்லை…
[17:30] <viruba> தமிழ்க் கணிமை தொடர்பில் நீண்ட காலமாக இயங்கி வரும் இரவி நீங்களே ஒன்றை இதுவரை உருவாக்கவில்லை, மாணவர்களால் முடியுமா ?
[17:30] <shrini> சொல்லிக் கொடுத்தால் கற்றுக் கொள்வார்கள்
[17:31] <shrini> தமிழ்க்கணிமையில் ஆர்வம் இருப்பதால் மட்டுமே ஒரு corpus செய்ய வேண்டுமா என்ன?
[17:31] <khaleel> +1 சீனி
[17:31] <ravidreams> குமரேசன, நான் தமிழ் ஆர்வலன். நுட்பியல் வல்லுநர் இல்லை. மாணவர்கள் நுட்ப ஆர்வமுள்ளவர்கள்
[17:31] <ravidreams> நெறிப்படுத்தலாம்
[17:32] <ravidreams> மன்னிக்கவும், விடைபெறும் நேரம். மற்றவர்கள் தொடர்ந்து பேசுங்கள்
[17:32] <ravidreams> பிறகு ஆவணப்படுத்துகிறேன்
[17:33] <viruba> சிறீனி, நீங்கள் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும், பின்னர் அவர்கள் உருவாக்க வேண்டும்.  இது நீண்ட காலம் எடுக்கும். இரவியோ நீண்ட கால அனுபவம் மிக்கவர்ஞ
[17:34] <Selin_> இது மாணவர்களால் தொடரும் பணியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
[17:35] <Selin_> அவர்கள் துவங்கி, அவர்கள் செயல்படுத்தியதில் இருந்து மற்றவர்கள் துவங்குவார்கள்
[17:35] <khaleel> செப் 27, பயிற்சி முகாம் ஏற்பாடு செய்துள்ளேன்… அன்று corpus பற்றிய அறிமுகம் கொடுக்கலாமே?
[17:35] <viruba> மிகவும் திறன் மிக்கதான பணியை ஏன் மாணவர்களைக் கொண்டு செய்ய முனைகிறீர்கள் என்பது ஏன் ?
[17:35] <khaleel> மேலும் தொடர் பயிற்சிகள் மூலம் இதை சாத்தியமாக்கலாம்….
[17:35] <Selin_> மேலும், மானவர்கள் செய்யும் போது அது எழிதில் பிற மாணவர்களையும் சென்றடையும்.
[17:36] <khaleel> அதாவது மாணவர்களின் பங்களிப்பு
[17:36] <khaleel> +1 Selin_
[17:37] <ravidreams> குமரேசன், மேற்கண்ட இணைப்பில் விவரங்கள் உள்ளன
[17:41] == viruba [b641d0bb@gateway/web/freenode/ip.182.65.208.187] has quit [Quit: Page closed]
[17:43] <ravidreams> சரி
[17:44] <ravidreams> விடைபெறுகிறேன்
[17:44] <ta_dinesh> சரி
[17:46] <shrini> Selin_: உரையாடலை தளத்தில் பதிவு செய்க
[17:47] <shrini> நன்றி
[17:47] <ta_dinesh> மாணவர்களைக் கொண்டு செய்வது சிறப்பாக இருக்கும்.
[17:48] <Selin_> s
[17:48] <Selin_> சீனி.. சரி

[17:48] <ta_dinesh> ஆர்வம், நுட்பம், நேரம், ஆகியவை இணையும் போது வெற்றி அடையும்.
[17:49] <ta_dinesh> நம்மைப் போன்றோர் இணைவது மிகவும் மகிழ்வான தருணம்.
[17:49] <ta_dinesh> இது போன்ற கூடல்களில் புதிய சிந்தனைகள், கொள்கைகள், முடிவுகள் எட்ட நல்ல தொரு வாய்ப்பு.
[17:49] <ta_dinesh> அடுத்த கூடலில் சந்திப்போம்.
[17:50] <ta_dinesh> நன்றி வணக்கம். _/\_

தமிழ் IRC – ஆகத்து 16, 2015 சந்திப்பு

தமிழ் IRC – ஆகத்து 16, 2015 அன்று இந்திய நேரம் இரவு  9 மணிக்கு (9 PM IST) நடைபெறும்

கணிணித் தமிழ் தொடர்பான உங்கள் பங்களிப்பு விவரங்கள், புது முயற்சிகள், திட்டங்கள், புது திட்ட வேண்டுகோள்கள் ஆகியன பற்றி உரையாடலாம்.

http://webchat.freenode.net/

அனைவரும் வாருங்கள்.

irc-demo

Nickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள்.

Channels என்பதில் tamilirc என்று தாருங்கள்.

படத்தில் காணும் எண்ணை அதன் கீழ் உள்ள புலத்தில் இட்ட பிறகு Connect பொத்தானை அழுத்துங்கள்.

ஒவ்வொரு மாதமும் ஒரு தேதியில் இது போல் உரையாடலாம்.

சரியாக ஒரு மணி நேரம் உரையாடிக் கலைவோம். இந்த உரையாடல்களைப் படியெடுத்துப் பாதுகாத்தும் வைப்போம்.

மற்ற விவரங்களைக் கூடி முடிவெடுப்போம்.

நன்றி.

ஜூன் 16 2015 IRC உரையாடல்

<shrini> வணக்கம்
<PremAnandh> வணக்கம்!
<shrini> வணக்கம் PremAnandh
<PremAnandh> இந்த முறை வார நாளாக இருக்கிறது?
<PremAnandh> அமெரிக்காவில் அலுவலகத்தில் இருந்து கலந்து கொள்கிறேன்..
<shrini> ஓ. மகிழ்ச்சி
<shrini> GIMP பற்றி எழுதுவதாய்ச் சொல்லியிருந்தீர்
<shrini> நேரம் கிடைத்தால் எழுதி அனுப்புக
<PremAnandh> மே மாதத்து உரையாடல் இன்னும் வலைத்தளத்தில் ஏற்றப்படவில்லை போல இருக்கிறதே
<shrini> ஆம்
<shrini> ஏற்றி விடுகிறேன்
<PremAnandh> ஆமாம். தொடங்குவதில் உள்ள சிறு சிக்கல்..  🙂
<shrini> 😉
<shrini> வாரம் ஒரு அல்லது இரு கட்டுரைகள் கொண்ட தொடராகக்கூட எழுதலாம்
<PremAnandh> ஒரு வரையறை/சட்டத்துக்குள் (template) எழுத ஆரம்பிக்க வேண்டும்.. இது போன்ற கட்டுரைகள் பார்த்து தொடங்குகின்றேன்.
<PremAnandh> GIMP  நான் உபயோகிப்பது முழுவது புகைப்படங்களை மெருகேற்துவதற்கே.. அதைத் தொட்டே எழுதாலாம் என்றிருக்கிறேன்
<shrini> ஆம்
<shrini> அவ்வாறே செய்க
<shrini> இன்னும் யாரையும் காணவில்லை
<shrini> https://tamilirc.wordpress.com/2015/06/16/may-16-2015-irc-discussions/
<shrini> இது போனமாத உரையாடல்
<PremAnandh> நன்றி.. வார நாளாக இருப்பதால் பலருக்கு சிரமமாக இருக்கலாம்
<Suganthi_> ok  Now I am in
<shrini> வணக்கம் Suganthi_
<Suganthi_> வணக்கம் ஶ்ரீனீவாசன் அவர்களே
<PremAnandh> http://freetamilebooks.com/-க்கு,  ஏதேனும் கட்டுரை உள்ளதா எப்படி தமிழில் eBooks உருவாக்குவது என?
<Suganthi_> இந்தக் கலந்துரையாடல் எதைப் பற்றி?
<Suganthi_> புத்தகம் எழுதிக் கொண்டு இருக்கிறேன்’
<shrini> மகிழ்ச்சி
<shrini> மின்னூல் உருவாக்கம் பற்றி காணொளிதான் உள்ளது
<shrini> கட்டுரையாக இல்லை
<Suganthi_> அப்படியா? நிங்கள் உருவாக்கிய காணோளியா?
<shrini> மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்?  –
<shrini> தமிழில் காணொளி – https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs
<shrini> இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook
<shrini> ஆம்
<shrini> பொதுவாக தமிழ்க்கணிமையில் நாம் செய்யும் செயல்களை பற்றிய உரையாடல் இது
<shrini> ஒவ்வொரு மாதமும் 16 ம் தேதி இங்கு பேசுவோம்
<Suganthi_> நினைவில் வைத்துக் கொள்கிறேன்.
<shrini> என்ன புத்தகம் எழுதுகிறீர்?
<Suganthi_> தமிழில் மின்னூல் படிப்பவர்கள் அதிகமாக உள்ளனரா?
<PremAnandh> நன்றி ஸ்ரீனி. பார்கிறேன்..
<shrini> FreeTamilEbooks திட்டத்ததால் அதிகரித்துள்ளனர்
<shrini> ஒவ்வொரு மின்னூலும் குறைந்தது 500 பதிவிறக்கங்கள்
<Suganthi_> கிண்டிலில் வருகிறதா?
<shrini> சில நூல்கள் லட்சங்களைத் தாண்டுகின்றன
<shrini> ஆம்
<shrini> கிண்டிலுக்கான 6 inch pdf வடிவிலும் தருகிறோம்
<Suganthi_> வாழ்த்துக்கள் , இலவசம் என்பதாலா? அல்லது கட்டுரைகளை பல முறைகளில் பயன் படுத்துகின்றனரா?
<PremAnandh> கிண்டிலில் தனியாக தரவேற்றம் செய்து படிக்க வேண்டும்.. சரிதானே ஸ்ரீனி?
<Suganthi_> முக்கியமாக ஆண்றாய்ட் தளத்தில்தாஅன் உள்ளதா?
<shrini> ஆம்
<shrini> 4 வடிவங்களில் தருகிறோம்
<shrini> epub, mobi, 6 inch pdf, a4 pdf
<Suganthi_> epub-ஐ விட குறுஞ்செயலியாக தர்வது நலம் என்கிறார்களே
<Suganthi_> தனிழ் படிக்க வைக்கும் குறும்ஜ்செயல்கள் செய்து தருகிறேன். வெளியிட முடியுமா
<shrini> செயலிகள் செய்வது கடினம்
<shrini> ஒவ்வொரு இயக்கு
<shrini> ள
<shrini> தளத்திற்கும் தனியாக செய்ய வேண்டும்
<PremAnandh> சீனி – கணிணி தமிழை எந்தந்த வழிகளில் முன்னேடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்கான ஆரம்ப நிலை திட்டங்கள் எங்கேனும் தொகுக்கப்பட்டுள்ளதா?
<shrini> http://kaninitamil.wordpress.com/
<shrini> இங்கே காண்க
<PremAnandh> நன்றி.. வலைத்தளத்தை தொடர்கின்றேன்.
<suganthi_> எல்லா இயங்குதளத்திற்கு ஏற்றதாக  செய்ய முடியும்
<shrini> செயலிகளை அனுப்புங்கள்
<shrini> வெளியிடலாம்
<shrini> விரைவில் 200 மின்னூல்களையும் 2 ஆண்டு நிறைவையும் எட்டப்போகிறோம்
<suganthi_> வாழ்த்துகள்
<suganthi_> நாளை பார்ர்ப்போம்
<suganthi_>  இன்னும் ஒரு மாதத்தில் என்னுடிய படிப்பு முடிந்து விடும்
<PremAnandh> இந்த நன்முயற்சி மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்
<suganthi_> அதஹ்ன் பின் என் சேவையைத் தொடர்கிறேன்
<shrini> நன்றி
<shrini> நம் உரையாடலின் நேரமும் முடிகிறது
<shrini> அடுத்த மாதம் பர்ப்போம்
<shrini> நன்றி PremAnandh
<PremAnandh> கண்டிப்பாக.. நன்றி சீனி

மே 16 2015 உரையாடல்

<selin> வணக்கம் இரவி, சீனி, கருத்தன்
<shrini> வணக்கம்
<ravidreams> வணக்கம்
<ravidreams> கருத்தன், உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே
<ravidreams> செலின், இன்னும் சிறிது நேரம் பார்ப்போம்
<ravidreams> கால் மணி நேரம் கழித்து ஒளி வழி உரையாடலுக்கு மாறுவோம்

<karuthan_> வணக்கம்
<selin> நன்றி இரவி
<karuthan_> என் பெயர் இளந்தென்றல்.இரா
<karuthan_> மென்பொருள் நிரலர்
<ravidreams> மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு மாதமும் புதியவர்கள் இவ்வுரையாடலில் கலந்து கொள்வது உற்சாகமூட்டுகிறது
<karuthan_> தற்போது banbury வசிக்கிறேன்.
<karuthan_> banbury , UK.
<selin> வணக்கம் இளந்தென்றல்
<karuthan_> shrini வழியாகதான் இந்த உரையாடல் நிகழ்வை பற்றி அறிந்தேன். இது என் முதல் கூட்டம்.
<selin> நானும் சீனியும் தற்போது இங்கிலாந்தில் தான் உள்ளோம்
<karuthan_> சிறப்பு
<selin> நான் கென்ட் – ல் வசிக்கிறேன்
<karuthan_> சரி
<ravidreams> நீங்கள் UK என்ற போதே சீனி தான் கடத்தி வந்திருப்பார் என்று எண்ணினேன் 🙂
<ravidreams> சீனி, இன்று எதைக் குறித்துப் பேச உள்ளோம்? கணினித்தமிழ் பற்றி அறிமுகப்படுத்துகிறீர்களா?
<ravidreams> அதன் வழியாக ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா
<shrini> வணக்கம்
<karuthan_> என் ஆர்வம், மென்பொருள்  நிரலாக்கம் பற்றி தமிழ்வழி கற்பிக்க வேண்டும் .
<shrini> பல்வேறு கணித்தமிழ் வளர்ச்சிகளை ஒருங்கிணைக்க
<shrini> Kaninitamil.WordPress.com
<shrini> ,என்ற இணைய இதழ் தொடங்கியுள்ளோம்

<shrini> இதில் உங்கள் படைப்புகளையும் எழுத வேண்டுகிறேன்
<shrini> புது திட்ட வேண்டுகோள்
<shrini> நிகழ்வுகளை தரலாம்
<ravidreams> நல்ல முயற்சி சீனி. உண்மையில், பல்வேறு கணித்தமிழ் செய்திகள், கட்டுரைகளை ஒரு களத்தில் படிக்க இடம் இல்லாமல் இருந்தது
<ravidreams> இதன் மூலம் சில புதிய செய்திகளை அறிந்து கொண்டேன்.
<shrini> நன்றி
<ravidreams> கூடவே, பல புதிய முனைப்பாளர்களையும்..
<shrini> ஆம்
<ravidreams> கூகுள் அரட்டைக்கு மாறுவோமா?
<karuthan_> சிற்றறெம்பாகிய நானும் kanasinapana.wordpress.com என்ற வலைப்பதில் தமிழ்வழி மென்பொருள் அடிப்படை பற்றி எழுதி வருகிறேன் .
<shrini> பலரும் தனித்தனியே
<ravidreams> கருத்தன் நீங்கள் இணைய விரும்புகிறீர்களா?
<selin> ஆமாம்
<shrini> செய்யும் முயற்சிகளை ஒருங்கிணைக்கலாம்
<karuthan_> மாறலாம்.
<karuthan_> தொடுப்பு?
<ravidreams> ஒரு நிமிடம்
<shrini> கருத்தன் நல்ல கருத்துகளை mindmap ஆக உருவாக்குகிறார்
<karuthan_> கூகுள் அரட்டை தொடுப்பு
<shrini> விக்கியிலும் பகிரச் சொல்லியுறளேன்

<selin> கருத்தன், உங்கள் அறிமுகம் மகிழ்ச்சியளிக்கிறது.
<ravidreams> https://plus.google.com/hangouts/_/g3h6qhpotqkwsvz6hni3jqhutya

<PremAnandh> Hi
<selin> வணக்கம் பிரேம்
<ravidreams> வணக்கம் பிரேம்
<ravidreams> உங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளலாமே
<selin> கருத்தன், கூகிள் அரட்டையில் நீங்கள் தொடர்பில் இருக்கிறீர்களா?
<PremAnandh> வணக்கம் ..
<PremAnandh> நான் ஒரு GNU  Linux ஆர்வலன்.. கடந்த 8-9 வருடங்களாக மடிக்கணினியில் Linux பயன்படுத்தி வருகிறேன்.. IT துறையில் பணிபுரிந்து வருகிறேன்.
<ravidreams> மகிழ்ச்சி பிரேம்
<karuthan_> chrome was blocked
<selin> மகிழ்ச்சி பிரேம்
<ravidreams> நாங்களும் கூகுள் அரட்டையை மூடி விட்டு மீண்டும் irc உரையாடலுக்குத் திரும்பி விட்டோம்
<ravidreams> முதல் முறையாக இன்று அவ்வாறு முயன்றோம்
<ravidreams> வழமையாக எழுத்து வழி உரையாடல் தான்
<karuthan_> சரி
<ravidreams> செலின், கிரீன்விச் பல்கலை தமிழ் சார் முயற்சிகளுக்கு ஆதரவு தர விரும்புவதாகச் சொன்னீர்கள்
<ravidreams> இதைப்பற்றி விளக்க முடியுமா
<shrini> பிரேம். கணியம் இதழுக்கு கட்டற்ற மென்பொருள் பற்றிய கட்டுரைகளை எழுதலாமே
<karuthan_> தமிழ் semantic dictionary / etymology தொடர்பான திட்டங்கள் பற்றி தெரியுமா ?
<selin> எனது நண்பரும் தமிழ் ஆர்வலர் திரு பழனி அவர்கள் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக உள்ளார்
<shrini> Kaniyam.com பாருங்க
<selin> அவர், நாம் சந்திக்க ஒரு இடம் வேண்டுமெனில் பெற்றுத் தர முடியும் என்று சொன்னார்.
<ravidreams> நல்லது. அந்த நகர் தமிழ் மக்கள் கூடி ஆக்கப்பூர்வமாக உரையாட உதவும் என்று எண்ணுகிறேன்
<selin> ஆக, இலண்டனில் ஒரு இடத்தில மாதம் ஒரு முறை சந்திக்க முயற்சிக்கலாம்.
<selin> விரைவில் முயற்சிக்கிறோம் இரவி..
<karuthan_> tamilvu நக்கீரன் ஐயாவிடம் பேசினேன் , தமிழ் தொழில்நுட்பம் சொல்லியல் ஒரு webapi
<karuthan_> கிடைத்தால் நல்ல இருக்கும் என்று .
<selin> கருத்தன், அவற்றைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
<karuthan_> அவர் அதில் சில சிக்கல் இருப்பதா சொன்னாரு
<karuthan_> என்னவென்று  தெரியவில்லை
<shrini> Ta.Wiktionary.org ன் தகவல்களைப் பயன்படுத்தலாம்
<PremAnandh> செலின், எனது லினக்ஸ் பயன்பாடு பெருமளவில் தனி நபர் பயன்பாடு அளவிலேயே இருந்துள்ளது.. பெருமளவில் புகைப்படங்கள் சீர்திருத்தும் மென்பொருள்களான  GIMP/UFRaw  பயன்படுத்துகà®
<karuthan_> extraction ஒப
<shrini> என்ன தேவை என்று விரிவாக எழுதினால்
<shrini> நிரலாக்கம் செய்யலாம்
<karuthan_> சரி
<shrini> PremAnandh: gimp பற்றி கணியத்தில் எழுதுக
<shrini> வீடியோ பாடங்களாக உருவாக்கினாலும் சரி
<karuthan_> செலின் : என்னை பற்றி என்ன தெரியவேண்டுகீர் ?
<selin> Etymology பற்றி நீங்கள் சொன்னதும் இது நினைவிற்கு வருகிறது.
<selin> malady –  http://www.oxforddictionaries.com/definition/english/malady?q=Malady

<selin> இந்த சொல்லை ஆங்கில அகராதியில் பிரெஞ்சு மொழி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்
<selin> ஆனால் கம்பராமாயண காலத்திலே இந்த சொல் தமிழில் பயன்பாட்டில் உள்ளது.
<shrini> karuthan_: நீங்கள் செய்யும் mindmap பற்றியும் சொல்லுக
<selin> “குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்; உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள்”
<karuthan_> என்னோட திட்டம் . தமிழ்  ஒரு கட்டுரை எழுதினால் படிக்க யாருக்கும் நேரம் இல்லை .
<selin> கருத்தன்: உங்கள் mindmap பற்றி விளக்குங்கள். உங்கள் தளத்திற்கு சென்று பார்த்தேன். அருமை.
<PremAnandh> shrini – இணையத்தில் GIMP  பற்றி அதிகமான தகவல்கள் கிடைக்கின்றன.. தமிழிழும் கிடைக்கின்றது (Photography-In-Tamil.blogspot.com)..
<karuthan_> 20 வரி தாண்டினால், ஒரு பிழிவு தேவைபடுகிறது .
<karuthan_> அந்த பிழிவை நான் mindmap விழியா
<karuthan_> சொல்ல முடியும் என்று நம்புகிறேன்
<shrini> PremAnandh: அந்த தளக் கட்டுரைகள் காப்புரமை கொண்டவை
<shrini> யாரும் பகிர முடியாது
<shrini> மின்னூலாக்க முடியாது
<ravidreams> செலின், அமெரிக்கத் தமிழர்கள் சங்கம் போன்ற சங்கங்களுடன் தொடர்கள் ஏற்படுத்தி இவ்வுரையாடலுக்கு அழைக்க வேண்டும் என்று கூறி இருந்தீர்கள்.
<ravidreams> புலம்பெயர் தமிழர்கள், தமிழர் வளங்களுள் ஒன்று
<ravidreams> இது போன்று பல்வேறு நாடுகளின் தமிழர் சார்பாளர்களை இனங்கண்டு சிறப்பு அழைப்பாளராக இவ்வுரையாடலுக்கு அழைத்து அவர்கள் செயற்பாடுகள் குறித்து அறியலாம்
<selin> ஆமாம்..
<ravidreams> இது ஒரு வகை ஆவணப்படுத்தலாக இருக்கும்
<ravidreams> நுட்பம் மட்டுமே பேசாமல் பரந்த பரப்பிலும் தமிழரியல் பற்றி அறிய உதவும்
<ravidreams> இங்கிலாந்தில் இது போன்ற நாடு தழுவிய அமைப்பு இருக்கிறதா
<selin> ஐரோப்பிய தமிழ் மொழி ஆராய்சிக் கழகம் என்று ஒரு குழுவை உருவாக்கத் திட்டம்
<selin> FeTAUK.org
<karuthan_> “agile” என்பதற்கு தமிழில் “தகவெளிமை” என்று சொல்லாக்கம்
<karuthan_> செய்திருக்கிறேன்.
<selin> ஐக்கிய இராச்சியத் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு என்று ஒன்று உள்ளது.
<PremAnandh> shrini: அந்தத்  தளம் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது..  ஆனால் மின்னூலாக்கம் கடினம்
<karuthan_> பொருந்துமா ?
<shrini> காப்புரிமையால் பகிர்வது தடைபடக்கூடாது
<karuthan_> shrini  CC-BY-NC-SA
<karuthan_> என்னுடைய படைப்பு எல்லாம்
<karuthan_> அதை பகிரவதில் தடை இருக்கா ?
<shrini> Cc நல்லது
<shrini> தடையில்லை
<karuthan_> சரி
<PremAnandh> shrini: உண்மை.. GIMP  பற்றி தமிழில் எழுத  முயற்சி செய்கிறேன்..
<shrini> நன்றி
<ravidreams> செலின், இணைப்புக்கு நன்றி
<ravidreams> http://www.fetauk.org/
<karuthan_> தமிழ் விக்கியில் , மென்பொருள் பற்றி எழுதும் உறுப்பினார்  விவரம் கிடைக்குமா ?
<selin> விக்கியில் கட்டுரைகளின் பெருக்கத்தை ஏற்படுத்த எனக்கு ஆர்வம். உங்களில் யாருக்கும் ஆர்வம் இருந்தால் சொல்லுங்கள். நாம் ஒரு சிறு குழுவாக இயங்கலாம்.
<ravidreams> இது போன்று ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொடர்புகளைத் திரட்டினால் இது ஒரு மெய்நிகர் தமிழர் தூதரகம் போல் செயல்பட முடியும்.
<ravidreams> கருத்தன், அப்படி மென்பொருள் பற்றி மட்டுமே எழுதும் சிறப்பான பங்களிப்பாளர்கள் என்று யாரும் இல்லை
<ravidreams> ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு வரலாற்றுப் பக்கம் உண்டு
<ravidreams> உங்களுக்குத் தொடர்புடைய கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் பார்த்தால் யார் எழுதி இருக்கிறார்கள் என்று பார்க்கலாம்
<karuthan_> ok
<karuthan_> மென்பொருள் துறை பொறுத்தவரை மு.சிவலிங்கம் எழுதிய சில நூல்கள் உண்டு.
<karuthan_> +11 , +12 பாட புத்தகம் நல்ல முயற்சி .

<karuthan_> எழில் மொழி சொல்லிக்கொடுக்க இணைய வகுப்புகள் நடத்த பட்டவனா ?
<shrini> தெரியாது
<selin> கருத்தன், ஐக்கிய இராச்சியத் தமிழ் குழந்தைகளுக்கு ஒரு பாடத் திட்டம் அமைக்கும் முறையை பெட்டா அமைப்பு முன்னெடுத்திருக்கிறது. உங்களுக்கு இணைந்து பங்காற்ற ஆர்வமா?
<shrini> நித்யா நூல்களையும் விக்கியில் ஏற்ற வேண்டும்
<karuthan_> code.org  translations செய்ய வேண்டும்.
<karuthan_> அதற்கு சொல்லியல் வேண்டும்.
<karuthan_> உதாரணம்  சிலபேர் “function” = செயல்கூறு /  செயல்பாகம்
<karuthan_> என்று மாற்றி எழுதுகிறோம்.
<shrini> சரி
<shrini> நான் கிளம்பறேன்
<shrini> சந்திப்புக்கு நன்றி
<shrini> மகிழ்ச்சி
<selin> கருத்தன் code.org மொழிப்பெயர்பிற்கு எனக்கு ஆர்வம் இருக்கிறது.
<selin> முயல்வோமா?
<shrini> PremAnandh: உங்கள் மின்னஞ்சல் முகவரி தருக
<karuthan_> shrini : பொள்ளாச்சி நசன் ஐயாவின் பாட திட்டத்தை
<karuthan_> கண்டிப்பா
<selin> மகிழ்ச்சி 🙂
<karuthan_> மென்பொருள்  ஆக்கும் திட்டத்தின் நிலை என்ன ?

<PremAnandh> shrini: anandhame at gmail dot com

<ravidreams> சீனி அறியக்கூடும்
<selin> நன்றி நண்பர்களே..உங்கள் அனைவரையும் அடுத்த மாத அழைப்பில் சந்திக்கிறேன். நம் பணி தொடரட்டும்.
<ravidreams> ஆனால், இன்னும் முன்னேற்றம் இல்லை என்று நினைக்கிறேன்
<ravidreams> நானும் விடை பெறுகிறேன்
<ravidreams> அடுத்த மாத உரையாடலில் சந்திப்போம்
<PremAnandh> நன்றி நண்பர்களே!
<karuthan_> நன்றி