செப்டம்பர் 16 உரையாடல்

[21:00] <+ravishankar> வணக்கம் சண்முகம், சாம் விசய், மணிவண்ணன்
[21:01] <+ravishankar> பாலா, சிவா, சாந்தக்குமார்
[21:01] <+ravishankar> இது எந்த சிவா 🙂
[21:01] <+ravishankar> இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்கு வரவேற்கிறேன் 🙂
[21:01] வணக்கம் 🙂
[21:01] வணக்கம் நண்பர்களே…
[21:02] == samvijay has quit [Quit: Page closed]
[21:02] <+ravishankar> முதலில், இந்த உரையாடலின் நோக்கத்தைச் சொல்லி விடுகிறேன்.
[21:02] <+ravishankar> தமிழ் மொழி வளர வேண்டும் என்று பலர் உழைக்கிறார்கள். இவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல், என்ன செய்கிறார்கள் என்று மற்றவர் அறியாமல் இருக்கிறார்கள். அதே வேளை, தமிழ் ஆர்வம் உடைய பலருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாக ஓர் உரையாடலை முன்னெடுக்க விரும்புகிறேன். இது தங்கள் எண்ணங்கள், செயற்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து தங்கள் முன்னேற்றங்களை அறியத் தரும் வளர்முகக் களமாக இருக்கும்.
[21:02] <+ravishankar> ஓரிரு நாள் முன்பு தமிழ் வளர்ச்சி தொடர்பாக முகநூலில் ஒரு குழு உரையாடல் ஓடியது. அதன் தொடர்ச்சியாகவே இந்த உரையாடல்
[21:02] == gurulenin has joined #tamilirc
[21:03] <+ravishankar> இன்று சரியாக 9 தொடங்கி 10 மணி வரை உரையாடுவோம். மாதம் ஒரு நாள் இப்படிக் கூடலாம். இதே 16ஆம் தேதி கூடலாம். அல்லது இரண்டாவது, மூன்றாவது சனி இப்படி ஏதாவது ஒரு நாள்
[21:03] 😐
[21:03] <+ravishankar> உங்கள் கருத்து என்ன?
[21:03] == mayu has joined #tamilirc
[21:03] <+ravishankar> வெவ்வேறு நேர வலயங்களில் இருப்பவர்கள் வசதிக்காக ஒரு சில மாதங்கள் காலை வேளையிலும் கூடலாம்
[21:03] வணக்கம்.
[21:04] == shrini has joined #tamilirc
[21:04] இத்தகைய உரையாடலை ஆவணப்படுத்துவோம்.
[21:04] ஸ்ரீனி
[21:04] <+ravishankar> ஆம், குறிப்பிட்ட ஒரு மணி நேர உரையாடலை மட்டும் படியெடுத்து வலையில் ஓர் இடத்தில் ஆவணப்படுத்துவோம். வெளிப்படைத்தன்மை, வரலாற்றில் இருந்து கற்றல் ஆகியவை அவசியம்.
[21:05] <+ravishankar> ஒவ்வொரு மாதமும் கூடும் இலினக்சு பயனர் குழுமங்கள் போல் இது தொடர்ந்து பல ஆண்டுகள் செல்ல வேண்டும் என்பதே கனா 🙂 தலைவர், செயலாளர், பதவிகள், அமைப்பு இல்லாத மெய்நிகர் கூடல் 🙂
[21:06] <+ravishankar> ஒவ்வொருவரும் நாளைய தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்கிறோம் என்று பகிர்ந்து கொள்ளலாம். உதவிகள் தேவைப்படின் கோரலாம். பயனுள்ள தகவலைப் பரிமாறலாம்.
[21:06] தொடர்ந்து செயல்படுவோம். எத்தகைய முடிவை எட்டப் போகிறோம் எம்மாதிரி செயல்பட வேண்டும் போன்றவற்றைப் பேசலாம்.
[21:06] <+ravishankar> எடுத்துக்காட்டுக்கு, தமிழ் வளர்ச்சி என்றால் தமிழ் வழிக் கல்வி என்பது தவிர்க்க முடியாத ஒரு புலம். ஆனால், பலரும் குடும்பச் சூழல், வாழிடம் காரணமாக தங்கள் பிள்ளைகளைத் தமிழ் வழியில் சேர்க்க முடியாது என்று மயங்குகிறார்கள்.
[21:07] <+ravishankar> ஆனால், இவர்களும் தமிழ் வழிக் கல்விக்கு உதவ முடியும். தமிழ் வழிப் பிள்ளைகளுக்கான செயலிகள், நூல்கள் முதலியவற்றை உருவாக்கி உதவ முடியும்.
[21:07] <+ravishankar> இது போன்று பரந்துபட்ட, hub and spoke மாதிரிகளை உருவாக்க வேண்டும்.
[21:08] <+ravishankar> அதே போல் பொத்தாம் பொதுவாக பேசிக் கலையாமல் ஏதேனும் ஒரு சிறு பணியைப் பொறுப்பேற்று அடுத்த கூடலில் என்ன முன்னேற்றம் என்று இற்றைப்படுத்தலாம்
[21:08] வணக்கம்
[21:08] ஏற்கனவே இதுபோன்ற கற்றல் செயலிகள் தமிழில் இருக்கிறதா இரவி?
[21:08] == jophine has joined #tamilirc
[21:09] வணிக முறையில் அமைக்கப்பட்ட சில ஐபாட் செயலிகளைக் கண்டிருக்கின்றேன்
[21:09] == senni has joined #tamilirc
[21:10] <+ravishankar> வணக்கம் சாம் விசய், சீனி.
[21:10] <+ravishankar> கற்றல் செயலிகள் நிறைய உள்ளன. என் மகளுக்கு ஆண்டிராய்டு, ஐபேடில் போட்டுத் தந்துள்ளேன்
[21:11] <+ravishankar> இதையே கூட ஒரு பக்கத்தில் ஆவணப்படுத்தலாம். பயனுள்ள 10 தமிழ் கற்றல் செயலிகள் என்பது போன்று. செய்வோம்.
[21:11] <+ravishankar> இலவச செயலிகளே நிறைய கிடைக்கின்றன
[21:11] அவற்றைப் பற்றிப் பதிய வேண்டும்
[21:11] <+ravishankar> ஒன்றாம் வகுப்பு படிக்கும் அக்கா மகனுக்கு இவற்றைப் பயன்படுத்திய பிறகு தமிழ் பாடத்தில் நல்ல முன்னேற்றம்
[21:11] வணக்கம்
[21:11] அமெரிக்காவில் மலிவு விலையில் கல்வி குப்புசாமி என்பவர் நிறைய செயலிகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். யாரும் வாங்காததால் முடங்கி விட்டது.
[21:12] ஓ
[21:12] தமிழ் என்றாலே இலவசம் என்ற கருத்தும் மாறவேண்டும்.
[21:12] எனது மகளுக்கும் ஐபேடில் போட்டுத் தந்துள்ளேன். ஆனால் சமீபகாலங்களில் எதையும் பார்க்கவில்லை நான்.
[21:12] என்ன மாதிரி மென்பொருள் வேண்டும்
[21:12] தமிழில் சந்தைகள் உருவாகாமல் தமிழ் சோறு போடாது.
[21:12] == Dineshkumar has joined #tamilirc
[21:12] என்று பட்டியலிட்டால்
[21:13] கட்டற்ற மென்பொருட்களாக உருவாக்கலாம்
[21:13] == esakkiraj has joined #tamilirc
[21:13] ஆங்கில இலக்கணம் கற்க பல செயலிகள் இலவசமாகவும் விலைக்குறிப்போடும் கிடைக்கின்றன. அது போல தமிழ் இலக்கணம் எளிமையாகக் கற்க செயலிகள் உருவாக்கப்பட்ட வேண்டும்
[21:13] தமிழ் சோறு போடவில்லையென்றால் தமிழில் ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழும்.
[21:13] பொதுவாக இந்தச் செயலிகள் என்ன செயற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன?
[21:13] <+ravishankar> சீனி, நிறைய விளையாட்டுகள் தமிழ் இடைமுகப்புடன் வேண்டும்
[21:13] கட்டற்ற மென்பொருள்கள் சந்தையின் ஒரு பகுதி மட்டுமே.
[21:13] நான் அறிய எழுதுதல் உச்சரிப்பு அடக்கம்
[21:13] <+ravishankar> உடனே பல்லாங்குழி போன்று தமிழர் விளையாட்டு தான் என்றில்லை. உலகம் முழுக்க பித்துப் பிடிக்கிற angry birds மாதிரி விளையாட்டுகளைத் தமிழ் இடைமுகப்புடன் உருவாக்கினால்
[21:13] என்னென்ன விளையாட்டுகள்?
[21:14] <+ravishankar> தமிழருக்கு வணிகமும் ஆச்சு, தமிழுக்குப் பயன்பாடும் ஆச்சு
[21:14] முழு தேவைகளை விளக்கி பட்டியலிட்டால்
[21:14] சில யூடியூப் வீடியோக்கள் மற்றும் ஐடியூன்ஸில் சில விளையாட்டுகள் கற்றல் தொடர்பாக சில மட்டுமே நான் அறிந்தது. விளையாட்டுகள் தமிழில் மிகச் சரியான உச்சரிப்போடு குழà®
[21:14] கட்டற்ற மென்பொருட்களாகவோ
[21:14] விலைக்கோ
[21:14] உருவாக்க முடியும்
[21:15] ரஜினி படத்தோடு முத்து போன்ற படத்தின் அடிப்படையில் விளையாட்டுகளைத் தமிழ் இடைமுகத்தோடு செய்தால் ஜப்பானிலும் விற்கலாம்.
[21:15] <+ravishankar> ஆம், தேவை உள்ளது. எப்படி உருவானாலும் சரி
[21:15] கட்டற்ற மென்பொருளெனில் பரவலாகச் சேரும்.
[21:15] == thamiziniyan has joined #tamilirc
[21:15] <+ravishankar> வருக தமிழினியன்
[21:15] நன்றி
[21:15] <+ravishankar> இசக்கிராசு, குரு இலெனின்
[21:16] ஆண்ட்ராய்டில் தமிழ் விக்கிப்பீடியா/விக்கிமேற்கோள் ஆகியவற்றில் பங்களிக்க எதாச்சும் செயலிகள் இருக்கின்றனவா?
[21:16] சங்கப்பாடல்களை படக்கதையாக செய்தால் மாடு மேய்க்கிற மாதிரியும் ஆச்சு மச்சானுக்குப் பெண்ணு பார்க்கிற மாதிரியும் ஆச்சு. குறிப்பாய் தமிழர் தொன்மை பேசும் பாடல்கள்.
[21:17] == siva has quit [Quit: Page closed]
[21:17] விக்கி காமன்ஸ் இருக்கிறது. நான் பயன்படுத்துகிறேன். தமிழ் தொடர்பாய் தெரியவில்லை.
[21:17] <+ravishankar> விக்கிப்பீடியாவுக்கான பொதுவான ஆண்டிராய்டு, ios செயலி உள்ளது.
[21:17] <+ravishankar> அதில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தாவி தொகுக்கலாம்.
[21:18] <+ravishankar> சிறு தொகுப்புகள் செய்ய எளிமையான இடைமுகப்பு உண்டு.
[21:18] <+ravishankar> https://www.youtube.com/watch?v=F3xBP9Smfdw&list=PLdHjGnZiGV2Xb6VRNss1CsDgBUz6j452S பார்த்தீர்களா?
[21:18] <+ravishankar> எழுத்தாளர் சொக்கன் தன் மகளுக்கு இந்திய விடுதலைப் போரைப் பற்றித் தமிழில் விளக்குகிறார்
[21:18] <+ravishankar> khan academy போல இத்தகைய ஆக்கங்களை தமிழிலும் தரலாம்
[21:19] <+ravishankar> பாலா, சங்கப்பாடல்கள் தொடர்பாக.. உண்மையில் தமிழார்வத்தில் புகும் பலர் இவ்வாறு தமிழர் ஆர்வப் புலங்களில் தான் செயற்படுகின்றனர்.
[21:19] இப்போது தான் பார்க்கிறேன். நல்ல முயற்சி இரவி.
[21:20] <+ravishankar> என்னுடைய ஆசை என்னவென்றால், தமிழ் ஒரு இடைமுக மொழியாக இருக்கிறதே என்பதே உறுத்தாமல் எல்லா அறிவும் தமிழ் வழியாகப் பெற வேண்டும்
[21:20] ஆம். பல வகை mindmap வேண்டும்
[21:20] == ninju has joined #tamilirc
[21:20] khan academy போல இத்தகைய ஆக்கங்களை தமிழிலும் தரலாம் !
[21:21] வணக்கம். தாமதத்திற்கு மன்னிக்கவும்
[21:22] <+ravishankar> ஆண்டிராய்டு ஒன் போன்ற மலிவு விலைக் கருவிகள் வருகை கடைக்கோடி மனிதன் வரை நுட்பத்தைக் கொண்டு சேர்க்கும். அவர்கள் அன்றாடத் தேவைக்கான செயலிகள், அறிவு மூலங்களை உருவாக்க வேண்டும்
[21:22] khan academy தமிழிலும் மொழிபெயர்த்து வருகிறார்கள்.
[21:22] <+ravishankar> எடுத்துக்காட்டுக்கு, என் மாமா விக்சனரி பக்கமே வராதவர். ஆனால், அவரது செல்பேசியில் விக்சனரி செயலியை வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்
[21:22] <+ravishankar> khan academy தமிழில் வருவது நல்ல செய்தி
[21:22] <+ravishankar> வணக்கம் நிஞ்சு
[21:23] இன்று தான் விக்சனரியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன்.
[21:23] <+ravishankar> சீனி, mindmap விசயத்தைக் குறித்துக் கொள்வோம். நிச்சயம் இதனைச் செய்ய வேண்டும்.
[21:23] இரவி விக்சனரி செயலிக்குத் தொடுப்புத் தர முடியுமா?
[21:23] அதிக அளவு தமிழ்ச் செயலிகளை உருவாக்க வேண்டும் என்கிறீர்கள். யாரைக் குறிவைத்து இரவி? தெளிவாகச் சொன்னால் மேற்கொண்டு இன்னும் குறிப்பாய் உரையாடலாம்.
[21:23] வணக்கம் ரவி.
[21:24] விக்கிப்பீடியா செயலியில் இருந்து விக்கிமேற்கோளில் தொகுப்புகளைச் செய்ய முடியவில்லை. அதற்கும் ஏதேனும் குறுக்கு வழி இருக்கா?
[21:24] தமிழ் கூறும் இளைய உலகத்தை குறி வைத்து உருவாக்க வேண்டும்.
[21:25] <+ravishankar> மயூ, விக்சனரி செயலிக்கான இணைப்பு – https://play.google.com/store/apps/details?id=com.sathish.TamilWiki
[21:25] <+ravishankar> இணையம் இருந்தால் தான் வேலை செய்யும். அலுவல் முறை சாரா செயலி.
[21:25] babycenter.com போல தமிழில் ஒரு தளம் வேண்டும்
[21:26] நன்றி இரவி
[21:26] <+ravishankar> பாலா, குறிப்பாக யாரைக் குறி வைத்தும் என்றில்லை. தமிழை மட்டுமே வைத்துச் செயற்படக்கூடிய சாமானியர்களின் அன்றாடத் தேவைகள் என்ன என்று இனங்கண்டு அதற்கு முன்னுரிமை தரலாம்
[21:26] <+ravishankar> ஏன் எனில் ஆங்கிலமும் நன்றாக அறிந்தும் தமிழ் பக்கம் போகிறவர்கள் நம்மைப் போல் சிலர் தான் 😦
[21:26] == senni [Quit: Page closed]
[21:27] ஓ.. சரி.
[21:27] <+ravishankar> கண்டிப்பாக சீனி. http://hwgo.com/intl/ta/index.html தளம் மகளிரின் வழமையான (stereotype என்றாலும்) தேவைகளில் இருந்து தொடங்குகிறது
[21:28] சாமானியர்களின் தேவை என்னென்ன?
[21:28] இரவி என்ன மாதிரியான செயலிகள் தேவையென்று பட்டியல் போட முடியுமானால் தன்னார்வல செயலி வடிவமைப்பாளர்களை கேட்டுப்பார்க்க முடியும்.
[21:28] <+ravishankar> ஆங்கிலம் – தமிழ் அகராதி நிச்சயம் ஒரு சாமானியனின் தேவை
[21:28] குறிப்பாக அண்மையில் விவசாயிகளுக்கான செயலி ஒன்றை தயாரித்தார்
[21:28] அது போல
[21:28] <+ravishankar> அதற்கு உருப்படியான செயலி இல்லை. விக்சனரிக்கு அலுவல் முறை செயலி கொண்டு வர விக்கிமீடியா மூலம் முனையலாம்
[21:29] <+ravishankar> சீனி சுட்டிக்காட்டிய மகப்பேறு நலத் தகவலும் ஒரு சாமானியரின் தேவை தான்.
[21:30] <+ravishankar> எங்கள் இரு பிள்ளைகளையும் பெற்ற போது நாங்கள் babycentreஏ குடியாக கிடந்தோம். சில வேளை மருத்துவர் கூட இவ்வளவு இணையம் மேயாதீர்கள் என்று திட்டினார் 🙂
[21:30] <+ravishankar> தரமான இத்தகைய தகவல் தமிழில் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்.
[21:30] <+ravishankar> உழவுத் தகவலும் இவ்வாறே
[21:30] தமிழ் சார்ந்த செயலிகளை விரிவான விளக்கங்களுடன் பட்டியலிட வேண்டும்
[21:30] பொதுவாகத் தமிழில் எத்தகைய செயலிகளை சாமானிய மக்கள் எதிர் நோக்குகின்றனர் என்கிற தரவுகள் உண்டா. உண்டெனில் அதன் வரிசைப்படி முக்கியத்துவம் கொடுப்பது நலம்.
[21:30] தமிழில் நல்ல பெயர்கள் சொல்லும் கைப்பேசி செயலியைத் தயாரித்தால் என்ன?
[21:30] <+ravishankar> இப்போதைக்கு நினைவுக்கு வரும் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்தடுத்த கூடல்களில் குறித்த விசயம் பற்றி விரிவாகப் பேசுவோம்.
[21:31] யாராவது பட்டியலிட உதவ முடியுமா?
[21:31] <+ravishankar> http://www.peyar.in/
[21:31] நல்ல தமிழ்ப்பெயர்கள் வைக்க வேண்டும் என்று பலர் இப்போது விரும்புகிறார்கள்.
[21:31] <+ravishankar> இது நானும் நண்பன் கார்த்திக்கும் உருவாக்கிய தளம்
[21:32] <+ravishankar> ஆனால், இத்தளத்தை இற்றைப்படுத்த வேண்டும். காலாவதியான பெயர்களை விட்டு இக்காலத்துக்கு ஏற்ற top 10, popular 10 போன்ற பெயர்களை எடுப்பாக காட்ட வேண்டும்,
[21:32] <+ravishankar> கவின், முகில் என்று பலரும் விரும்பி வைக்கும் பெயர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்
[21:32] <+ravishankar> தற்போது ஒவ்வொரு நாளும் என் வலைத்தளத்துக்கு நல்ல தமிழ் பெயர் சொல்லுங்கள் என்று கேட்டு ஆட்கள் வருகிறார்கள்
[21:33] <+ravishankar> சீனி, இந்த உரையாடலை படி எடுத்து ஒரு இடத்தில் போட்டு பணிகளைப் பிரித்துக் கொண்டு அடுத்த கூடலில் முன்னேற்றத்தை அலசுவோம்.
[21:33] <+ravishankar> இன்னொன்று நான் கவனித்தது… மக்கள் நேரடியாக இணையத்தில் இருந்து செயலிகளைப் பதிவிறக்குவதை விட, தங்கள் நண்பர்களின் செயலிகளை அப்படியே அவர்களிடம் இருந்து படி எடுத்துக் கொள்கிறார்கள்
[21:33] ம்
[21:33] ஆமாம். இந்த வழக்கம் தற்போது பல பெற்றோர்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. அதை மையமாகக் கொண்டு ஒரு செயலி உருவாக்கினால் நன்றாக இருக்கும்.
[21:33] இத்தகைய தளங்களுக்கு எவ்வளவுபேர் வருகிறார்கள்? எங்கிருந்து வருகிறார்கள்?
[21:33] <+ravishankar> எனவே, அதிகம் இணையம் தேவைப்படாதவாறும் செயலிகள் இருக்க வேண்டும்,
[21:34] தமிழ் பெயர்கள் தொடர்பான செயலிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் எனத் தோன்றுகிறது.
[21:34] <+ravishankar> எந்தத் தளத்தைக் கேட்கிறீர்கள் மணிவண்ணன்
[21:34] ஒவ்வொருவரும் ஒரு பணியை செய்வதாக அறிவிக்கலாம்.
[21:34] <+ravishankar> என் தளத்துக்கு வருபவர்களின் தரவுகளில் இருந்து tamil baby names என்பது அதிகம் தேடப்படும் ஒரு சொல்.
[21:35] பெயர் மற்றும் தமிழ்ச் செயலிகள் தளங்கள்
[21:35] <+ravishankar> ஆனால், உருப்படியாய் வழி காட்ட தளம் இல்லை. வடமொழிப் பெயர்களையும் சேர்த்து தமிழ் பெயராக பரிந்துரைக்கும் தளங்களே நிறைய
[21:35] அடுத்த சந்திப்பில் பணிகளின் நிலையை பேசலாம்
[21:35] == pattapeyar has joined #tamilirc
[21:35] இரவி ‘ட்வீட்டர்’ மாதிரி தட்டச்சிடுங்கள். அடிக்கடி உங்கள் வாக்கியத்தின் வாலைக் காணவில்லை. 🙂
[21:35] <+ravishankar> தமிழ் செயலிகளுக்கான வரவேற்பை கூகுள் play store தரவுகளைப் பார்த்தால் தெரியும்,
[21:36] <+ravishankar> மொக்கையான செயலிகள் கூட ஆயிரக்கணக்கில் நிறுவப்பட்டுள்ளன
[21:36] <+ravishankar> காசு கேட்டால் பக்கம் வர மாட்டார்கள் என்பது வேறு செய்தி 🙂
[21:36] 🙂
[21:36] தமிழை ஊடுமொழியாகக் கொண்டு சில விளையாட்டுகளைத் தயாரிக்க வேண்டும். டெம்பிள் ரன், காண்டி கிரஷ் போல
[21:36] <+ravishankar> ஓ.. சிறிய சொற்றொடர்களாக எழுதுகிறேன்
[21:36] <+ravishankar> சரியாகச் சொன்னீர்கள் நிஞ்சு
[21:37] ஆமாம் இந்திய சந்தையைப் பொறுத்தவரையில் பணம் கொடுத்து வாங்கும் செயலிகளை யாரும் நிறுவுவதில்லை
[21:37] <+ravishankar> வாங்க பட்டப்பெயர், jophine
[21:37] இலவச செயலிகளை நிறுவி சாதனை புரிகின்றார்கள்
[21:37] நீங்கள் http://www.peyar.in/ தளத்தை செயலியாக மாற்றி கூகுள் play store இல் வெளியிடலாமே அடுத்த சந்திப்புக்குள். இந்த கூடிப்பேசும் முயற்சிக்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டுமே
[21:37] குழந்தைகளுக்குப் புதிய, வேறுபட்ட முறையில் தமிழைச் சொல்லிக்கொடுக்கும் செயலிகளை உருவாக்கலாம்.
[21:37] விளம்பரம் போடுவதே தமிழ் செயலி மூலம் பணம் செய்ய வழி
[21:37] <+ravishankar> யாராவது செயலி செய்ய உதவினால் தரவுத்தளத்தைத் தருகிறோம்
[21:37] வணக்கம்
[21:37] <+ravishankar> அத்தளம் திறந்த ஆக்க முயற்சி தான்
[21:38] செயலிகள் செய்வோரை நான் பிடித்து தருகிறேன்
[21:38] துவக்கம் என்று சொல்வது தவறு. தொடக்கம் என்பதே சரி. துவக் என்றால் என்று தான் பொருள்.
[21:38] நாம் முயற்சி செய்து பார்க்கலாம்.
[21:38] பட்டியலும் விளக்கமும் வேண்டும்
[21:38] sorry
[21:38] துவக்கம் என்று சொல்வது தவறு. தொடக்கம் என்பதே சரி. துவக் என்றால் “To touch” என்று தான் பொருள்.
[21:38] இனி துவக்கத்தை தொடக்கம் என்று எழுதத் தொடங்கிவிடுகிறேன்
[21:38] 🙂 🙂
[21:39] குழந்தைகளுக்குப் புதிய, வேறுபட்ட முறையில் தமிழைச் சொல்லிக்கொடுக்கும் செயலிகளை உருவாக்கலாம்.
[21:39] <+ravishankar> நன்றி சீனி.
[21:39] பெரும்பாலான இலவசச் செயலிகள் விளம்பரங்களை நம்பியிருக்கின்றன. நம்மை உளவு பார்க்கின்றன.
[21:39] <+ravishankar> இது வேறயா? 🙂
[21:40] என்ன உளவு?
[21:40] <+ravishankar> செயலிகள் செய்ய போட்டிகள் கூட நடத்தலாம். ஆனால், புரவலர்கள் தேவை. பிற்காலத்தில் பார்க்கலாம். google summer of code மாதிரி தமிழுக்கு என்று கோடைக்கால போட்டி
[21:40] பன்னாட்டு உளவு நிறுவனங்கள் இலவச விளையாட்டுச் செயலிகளைப் பரப்புகின்றன.
[21:40] <+ravishankar> சுவற்றில் எறியும் பந்துகளைப் போல யோசனைகளை விட்டு எறிவோம் 🙂 யாராவது பிடித்து முன் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் 🙂
[21:41] <+ravishankar> என் அனுபவத்தில் பல திட்டங்கள் இவ்வாறு விளையாட்டாக பேசி தொடங்கியவை தாம்
[21:41] இன்னும் 20 நிமிடம் இருக்கிறது. அடுத்த கூடலுக்கு முன் நாம் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட முடியுமா இரவி. நண்பர்களும் அது தொடர்பாய் கருத்துச் சொல்லலாம்.
[21:41] நிறைய நிரலாளர்கள் ஆர்வமாக உள்ளனர்
[21:41] <+ravishankar> 1. mind map. இதனைத் தொடர்ந்து இற்றைப்படுத்தி வரலாம்.
[21:41] <+ravishankar> 2. ஏற்கனவே கிடைக்கும் நல்ல தமிழ் செயலிகள் பட்டியல்
[21:41] <+ravishankar> 3. peyar.in தளத்தைச் செயலியாக தர முனைதல்
[21:41] என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத்தான் ஆள் இல்லை.
[21:42] நாம் பட்டியலிட்டால்
[21:42] போதும்
[21:42] சுவற்றில் அல்ல ரவி. சுவரில்
[21:42] <+ravishankar> சரி, சுவரில் 🙂
[21:42] சொல் விளையாட்டுகளும் தமிழில் தேவை
[21:42] ரவி அல்ல. இரவி 🙂
[21:42] Hangman, crossword puzzle போன்றவை
[21:42] இன்னொரு முக்கியமான செய்தி.
[21:43] <+ravishankar> 4. babycentre, உழவர் தகவல் போல் சாமானியர்களுக்கு அதிகம் அன்றாடம் தேவைப்படும் அறிவுப் புலங்களை இனங்காணல்
[21:43] புதியனவற்றுக்கு எந்தளவுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டுமோ அதே அளவு பழமைக்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும்.
[21:43] <+ravishankar> 5. khan academy தமிழில் கிடைப்பது நல்ல செய்தி. TED கூட இவ்வாறு கிடைக்கிறது. இது போல் என்னென்ன முக்கியமான தளங்கள் தமிழில் கிடைக்கின்றன என்ற பட்டியல் உருவாக்க வேண்டும்
[21:44] peyar.in தளத்தைச் செயலியாக மாற்ற என்ன மாதிரி முன்னெடுக்க வேண்டும். யார் செய்வது?
[21:44] <+ravishankar> இப்போதைக்கு இந்த 5 பணிகள் போதும் என்று நினைக்கிறேன் 🙂
[21:44] <+ravishankar> அதற்குச் சீனி ஆள் பிடித்துத் தருகிறேன் என்றிருக்கிறார் 🙂
[21:44] TED-ல் தமிழ் ஆர்வலர்கள் மொழிபெயர்க்கலாம்.
[21:44] நமது பாரம்பரியத்தை விளக்கிச் சொல்லும் செயலிகளைத் தமிழில் உருவாக்க வேண்டும்.
[21:45] <+ravishankar> நிஞ்சு, இதில் முன்னுரிமை பின்னுரிமை எல்லாம் இல்லை. எல்லாவற்றையும் பேசுவோம். அவரவர் ஆர்வத்துக்கு ஏற்ப திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம்
[21:45] <+ravishankar> திட்டமிட்டு முறையாக எதையும் தவிர்க்கப் போவதில்லை
[21:45] கடைசி 15 நிமிடங்கள்…
[21:45] <+ravishankar> பாலா, குண்டு வெடிக்கப் போற மாதிரி இது என்ன அறிவிப்பு 🙂
[21:46] காலையில் அலுவலகம் பாஸ், மணி இங்கே 12:15 🙂
[21:46] தேர்வு அறையில் கூட இப்படித்தான் சொல்வார்கள்..
[21:46] <+ravishankar> 🙂
[21:46] 🙂
[21:46] <+ravishankar> யாராவது புதிதாக இங்கு வந்திருந்தால் https://www.facebook.com/groups/nugartamil/ உரையாடல்களைத் தொடருங்கள்
[21:47] <+ravishankar> இதன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு, நுகர்வோர் உரிமை, அலுவல் மொழிச் சட்டம் ஆகியவற்றில் அனுபவம், ஈடுபாடு, நம்மைப் போன்ற ஆட்களுக்குக் குறைந்த செலவில் 🙂 வழக்கு நடத்தும் வழக்கறிஞர் விவரங்கள் தேவை
[21:47] <+ravishankar> யாராவது தெரிந்தால் எனக்கு அறிமுகப்படுத்துங்கள்.
[21:48] <+ravishankar> தமிழில் பாடல் வரிகளைத் தாருங்கள் என்ற வேண்டுகோளுக்கு ஏற்ப Think Music, Tiger audios ஆகியவை பாடல்களைத் தமிழில் தரத் தொடங்கியுள்ளன
[21:48] <+ravishankar> https://www.youtube.com/watch?v=O7DFE5ipiRs
[21:48] <+ravishankar> இவற்றைப் பரப்பி உதவுங்கள்
[21:48] நல்வினை வழக்கறிஞர் என ஒரு குழுமத்தைப் பேஸ்புக்கில் பார்த்த நியாபகம். அவர்கள் உதவக்கூடும்.
[21:48] <+ravishankar> இது போல் வேறு எங்கெல்லாம் கேட்கும் வாய்ப்பு இருக்கிறதோ கேளுங்கள்
[21:48] == esakkiraj has quit
[21:49] <+ravishankar> நல்வினை வழக்கறிஞர்.. அடடா என்ன ஒரு பெயர் 🙂
[21:49] == thamiziniyan has quit
[21:49] https://www.facebook.com/groups/453406141356664/?fref=ts
[21:50] <+ravishankar> அடுத்த சந்திப்பை அக்டோபர் 16 இதே நேரம் வைப்போமா இல்லை வார இறுதியில் வைப்போமா.. வார இறுதியில் என்றால் பல்வேறு பொழுதுபோக்கு, ஊர் பயணங்களும் இருக்கும்
[21:50] Sony நிறுவனம் இன்னும் அசைந்து கொடுக்கவில்லை.
[21:51] வாட்ஸ் ஆப் போன்ற அரட்டைச் செயலிகளைப் போன்று தமிழிலும் செயலி உருவாக்கினால்?…
[21:51] இடையே இரண்டு வாரம் கழித்து வைத்தால் என்ன?
[21:51] <+ravishankar> சோனியும் விரைவில் மாறக்கூடும். சில உறுதிப்படுத்தாத தகவல்கள் கிடைத்துள்ளன. பொறுத்திருப்போம் 🙂
[21:51] வாரம் ஒருமுறை இந்தக் கலந்துரையாடல் நடக்கக் கூடாதா?
[21:52] <+ravishankar> whatsapp போன்ற செயலி உருவாக்குவது எளிது. பரவலாக்குவது தான் கடினம். network effect
[21:52] அட நல்ல செய்தி 🙂 நானும் சோனி நிறுவனப் பக்கங்களில் பின்னூட்டமிட்டுள்ளேன். பார்க்கலாம்.
[21:52] <+ravishankar> அது போன்ற பரவலான செயலிகளில் தமிழ் இடைமுகப்பு பெறக் கோரலாம்.
[21:52] <+ravishankar> மாதம் ஒரு முறை என்றால் நாம் பேசிய செயற்பாடுகளைச் செய்ய நேரம் கிடைக்கும்
[21:52] அருமை பார்ப்போம் என்ன செய்கின்றார்களென
[21:52] <+ravishankar> இல்லாவிட்டால் தொடர் அரட்டையாகுமோ என்று அச்சம்.
[21:52] ஓ சரி.
[21:53] <+ravishankar> ஏற்கனவே இங்கு உள்ள எல்லாரும் பல பணிகளில் தலையை விட்டுக் கொண்டிருப்பவர்கள் தாம். எனவே, போதிய கால இடைவெளி இருப்பது நன்று.
[21:53] ம்ம்ம்…
[21:53] பட்டியலிட்ட பணிகளுக்கு
[21:53] <+ravishankar> நல்வினை குழுவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. தொடர்பு கொள்கிறேன்
[21:53] இந்த உரையாடலின் படியை எங்கு ஆவணப்படுத்துவீர்கள் இரவி? அதன் உரலி என்ன?
[21:54] ஆட்கள் பட்டியில் தேவை
[21:54] <+ravishankar> ஒரு wordpress.com தளத்தில் போட்டு விட்டுச் சொல்கிறேன்.
[21:54] யார் யார் என்னென்ன பணிகளை
[21:54] நல்லது. நுகர் தமிழ் குழுவில் அதன் இணைப்பைக் கொடுங்கள்.
[21:54] செய்யப் போகிறோம்
[21:54] <+ravishankar> 2, 5 நான் பொறுப்பு
[21:55] <+ravishankar> peyar.in செயலி குறித்து நானும் சீனியும் தொடர்பு கொள்கிறோம்
[21:55] == pattapeyar has quit
[21:55] <+ravishankar> மணிவண்ணன், நீங்கள் தமிழுக்கான தேவைகள் தொடர்பான mindmap உருவாக்க முடியுமா
[21:55] ஒரு சிறு கேள்வி. ted மொழிபெயர்ப்பு என்பது வாய் மொழியாகவா உல்லது எடுத்துகளாகவா?
[21:55] <+ravishankar> tedல் எழுத்து தான்
[21:55] எழுத்துகளாக..
[21:56] Ted ஐத் தமிழாக்கம் செய்ய மலேசியத் தமிழர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்.
[21:56] மலேசியத் தமிழர் அறக்கட்டளை ஒன்று செய்கிறது
[21:56] <+ravishankar> எடுத்துக்காட்டுக்கு, http://www.ted.com/talks/derek_sivers_how_to_start_a_movement?language=ta
[21:56] <+ravishankar> பாருங்கள்
[21:56] இந்த உரையாடல் தொடர்பான ஐ எல்லோருக்கும் அனுப்புங்கள்
[21:56] அது போலத் தமிழகத்திலும் செய்யலாம்.
[21:56] <+ravishankar> காசு கொடுக்கிறார்கள் என்றால் நல்ல விசயம் தான். இந்த பணி வாய்ப்பை ஆவணப்படுத்தலாம்
[21:57] http://www.ted.com/talks/browse?language=ta
[21:57] <+ravishankar> மணிவண்ணன் mindmap பொறுப்பேற்க முடியுமா
[21:57] @ravi இந்த உரையாடல் தொடர்பான MOM ஐ எல்லோருக்கும் அனுப்புங்கள்
[21:57] முயல்கிறேன். யாராவது துணை இருந்தால் நல்லது.
[21:57] <+ravishankar> மயூ, மகப்பேறு, உழவு போன்று பரவலாக தேவைப்படும் உள்ளடக்கங்கள் என்ன என்று நீங்கள் ஒரு பட்டியல் தர முடியுமா
[21:57] <+ravishankar> நீங்கள் தொடங்குங்கள்
[21:57] <+ravishankar> நாங்கள் தொடர்கிறோம் 🙂
[21:57] == Selin has joined #tamilirc
[21:58] <+ravishankar> இன்னும் இரு நிமிடங்களே
[21:58] <+ravishankar> இப்போதைக்கு அடுத்த சந்திப்பு அக்டோபர் 16 இரவு 9 மணி என்று வைத்துக் கொள்வோம்
[21:58] வணக்கம். செலின், இலண்டனில் இருந்து 🙂
[21:58] <+ravishankar> மற்ற விவரங்களை முகநூலில் ஒருங்கிணைக்கலாம்
[21:58] <+ravishankar> வணக்கம் செலின்
[21:58] நல்லது. உடன்படுகிறோம்.
[21:58] நன்றி ரவி இந்த முயற்சியை துவங்கியமைக்கு.
[21:58] <+ravishankar> வேறு யாரேனும் கூட இந்த உரையாடலை ஒரு படியெடுத்துக் கொள்ளுங்கள்
[21:58] <+ravishankar> சாளரத்தை மூடும் முன்
[21:58] <+ravishankar> நன்றி செலின்
[21:58] <+ravishankar> நான் விடைபெறுகிறேன்
[21:59] <+ravishankar> எல்லாருக்கும் இரவு, மாலை, காலை வணக்கங்கள் 🙂
[21:59] ravishankar: i will have a copy always
[21:59] <+ravishankar> நன்றி, சண்முகம்
[21:59] நன்றி
[21:59] சரி இரவி நான் அதை செய்கின்றேன்
[21:59] வணக்கம்
[21:59] நானும் தான் 🙂 விடைபெறுகிறேன் நண்பர்களே..
[21:59] hangout முறையில் தொடர்பு கொள்வோம்
[21:59] நன்றி இரவி
[21:59] ravi send the MOM
[21:59] அடுத்த முறை
[21:59] to all
[21:59] இரவு வணக்கங்கள்
[21:59] இரவு வணக்கத்தை நெடுந்துயிலாள் ஆட்கொள்க எனலாம்
[21:59] == gurulenin has quit [Quit: Page closed]
[21:59] my ID niranjanbharathi@gmail.com if needed

Advertisements

6 thoughts on “செப்டம்பர் 16 உரையாடல்

 1. தெரிந்திருந்தால் இணைந்திருப்பேன்…அடுத்த கநிகழ்வை தெரியப்படுத்தவும்…

  Like

  1. அருண், முதல் உரையாடல் என்பதால் தனிப்பட யாருக்கும் தகவல் தரவில்லை. இது ஒரு சோதனை ஒட்டமே 🙂 அடுத்த முறை கண்டிப்பாக நினைவூட்டுகிறேன் 🙂

   Like

 2. தமிழா முகநூல் பக்கத்தில் அறிவித்துவிட்டேன். எல்லோருக்கு தெரிவித்தால் அனைவரும் கலந்துக்கொள்வார்கள் அதான்…

  Liked by 1 person

 3. நண்பர்களே,
  நாளை அக்டோபர் 16, இந்த மாதக் கூட்டம் எப்போது திட்டமிட்டுள்ளீர் ? தேதி மற்றும் நேரத்தை முடிவு செய்தவுடன் தெரிவிக்கவும். தமிழா குழுவின் பக்கத்திலும் அறிவிக்கவும்.

  Like

 4. முகுந்த், ஒவ்வொரு மாதமும் அதே நாள், அதே நேரம் தான் ! அக்டோபர் சந்திப்பு பற்றிய விவரங்கள் http://wp.me/p54dmy-4 பக்கத்தில் உள்ளன.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s