அக்டோபர் 16 உரையாடல்

அக்டோபர் 16 உரையாடல்:

8:00:58 PM <•Guest56975> வணக்கம்
9:01:45 PM <shrini> வணக்கம்
9:01:59 PM <shrini> வருக Guest56975
9:02:15 PM <shrini> வணக்கம் prnakkeeran
9:02:15 PM <•Guest56975> எதைப் பற்றிப் பேசப் போகிறோம்?
9:02:55 PM <shrini> தமிழுக்காக நாம் செய்யும் செயல்கள் பற்றி
9:03:35 PM <•Guest56975> ரொம்ப பொதுவா இருக்கே! 🙂
9:04:43 PM <shrini> அவரவர் செய்யும் செயல்களை பட்டியலிட்டு
9:04:50 PM <thangamani_arun> வணக்கம்
9:04:57 PM <shrini> அவற்றின் வளர்ச்சியை பேசலாம்
9:05:12 PM <•Guest56975> தமிழுக்காக என்பதைவிட தமிழர்க்காக என்றால் சரியாக இருக்கும்…
9:05:45 PM <shrini> அதுவும் சரியே
9:05:52 PM <thangamani_arun> 🙂
9:06:26 PM ⇐ prnakkeeran quit: Page closed
9:07:05 PM <•Guest56975> நக்கீரன் ஐயா போயிட்டாரே?
9:07:09 PM <•Guest56975> ஹ்ம்ம்..
9:07:33 PM <thangamani_arun> இணைப்பு துண்டிப்புனு நினைக்கிறேன்
9:08:00 PM <•Guest56975> அப்படியிருந்தா நல்லதுதான்…
9:08:04 PM <•Guest56975> 🙂
9:08:24 PM <thangamani_arun> ஒ ஓ
9:08:30 PM <•Guest56975> எங்க நம்ம அழச்சவரைக் காணலையே!
9:09:09 PM <•Guest56975> இரவி வராறா?
9:09:10 PM <gurulenin> மாலை வணக்கம்..
9:09:16 PM <shrini> அவர் இன்று விடுமுறை
9:09:20 PM <•Guest56975> வணக்கம்.
9:09:25 PM <shrini> வணக்கம் இலெனின்
9:09:55 PM <shrini> அருண்
9:10:16 PM <shrini> Guest56975: தங்கள் பெயர் என்ன?
9:10:20 PM → prnakkeeran joined
9:10:26 PM <thangamani_arun> அனைவருக்கும் வணக்கம்
9:10:49 PM <thangamani_arun> @Guest56975 — இரவி
9:10:53 PM <thangamani_arun> ?
9:11:09 PM <prnakkeeran> vanakkam
9:11:21 PM <shrini> வணக்கம் ஐயா
9:11:54 PM <•Guest56975> இன்று அனானி.
9:12:44 PM <shrini> சரி
9:12:45 PM <prnakkeeran> tamil valarchikku seiyavendia panigal enna
9:13:29 PM <thangamani_arun> @Guest56975: எனக்கு தெரியும், மலேசியா நண்பருனு நினைக்கிறேன்
9:14:36 PM <shrini> அனானியாகவே இருக்கட்டுமே
9:14:51 PM <thangamani_arun> ம்ம்
9:14:57 PM <prnakkeeran> oru pattiyal thayaarippoma
9:14:59 PM <•Guest56975> தமிழ் வளர்ச்சி என்று பேசினால், நாம் குழுவாக என்ன செய்யலாம் என்றுபற்றிதான் பேச வேண்டி வரும். அது உத்தமம் போன்ற அமைப்புகளின் செயல்பாட்டில் போய் நிற்கலாம்…
9:15:44 PM <shrini> சென்ற மாத அமர்வில்
9:15:56 PM <shrini> peyar.in தளத்தை
9:16:00 PM <prnakkeeran> illai,enna thevai enbathai mudalil ariyavendum
9:16:21 PM <thangamani_arun> சீனி சொன்னபடி, அவரவர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என் கூறவும்
9:16:26 PM <shrini> மென்பொருளாக மாற்ற
9:16:37 PM <shrini> முயற்சி செய்கிறோம்
9:16:40 PM <thangamani_arun> *என
9:17:02 PM <prnakkeeran> athan pirage yar enna seiyya vendum enbathai theermanikkalam
9:17:06 PM <shrini>  https://build.phonegap.com/apps/1124758/share
9:17:20 PM <shrini> இங்கு பதிவிறக்கம் செய்யலாம்
9:17:32 PM <shrini> மெதுவாகவே வேலை செய்கிறது
9:17:40 PM <shrini> இன்னும் திருத்த வேண்டும்
9:17:43 PM <thangamani_arun> ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கா சீனீ
9:17:46 PM <thangamani_arun> ?
9:18:06 PM <shrini> ஆம்
9:18:15 PM <shrini> இணைப்பை பார்க்கவும்
9:19:05 PM → manikk joined
9:19:52 PM <thangamani_arun> பதிவிறக்கம் செய்துவிட்டேன்
9:19:56 PM <•Guest56975> இன்று தமிழகத்தில் உள்ள பல பல்கலைகளின் வலைத்தளங்களுக்குச் சென்று சில தகவல்களைத் தேட வேண்டியிருந்தது. எல்லாத் தளங்களும் ஆங்கிலத்திலேயே இருக்கக் கண்டேன். ஏன்?
9:20:20 PM <shrini> வருக மாணிக்கம்
9:20:39 PM <prnakkeeran> tva site is in tamil
9:20:45 PM <shrini> ஆம் Guest56975
9:21:07 PM → KishoreMR joined
9:21:21 PM <•Guest56975> அரசு பல்கலைகள்கூட ஆங்கில மொழியிலான தளங்களையே வைத்திருக்கின்றனர். இது அறியாமை. இன்னும்கூட 20ஆம் நூற்றாண்டில் இத்தளங்கள் வாழ்கின்றன.
9:21:23 PM <manikk> வணக்கம் தல
9:21:33 PM <shrini> அவற்றை தமிழில் மாற்ற அவர்களை கேட்க வேண்டும்
9:21:58 PM <•Guest56975> இதற்கு த.வ.க. ஒரு விதிவிலக்கு.
9:22:02 PM <thangamani_arun> இது அந்தந்த நிர்வாகம் உணர்ந்து செயல்படு வேண்டும்
9:22:42 PM <shrini> பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்கலாம்
9:23:30 PM <•Guest56975> தமிழ்நாட்டு மாணவர்களை மட்டும் நம்பியிருக்கும் பல்கலைகள் இதற்கு பொருத்தமானதாக இருக்கும்.
9:23:51 PM <shrini> Guest56975: நீங்கள் இந்த பணியை மேற்கொள்ள முடியுமா?
9:23:55 PM <thangamani_arun> கல்வி நிலையங்களே ஆர்வப்பட வேண்டும் இல்லையென்றால் இது மீண்டும் ஆங்கில வழியிலே மாற வாய்ப்புண்டு
9:24:09 PM <thangamani_arun> Guest56975: சரியே
9:24:19 PM <•Guest56975> ஒரு சில பல்கலைகள் தமிழில் தளங்களை அமைக்கத் தொடங்கிவிட்டால், காலப்போக்கில் பல முன் வரலாம்.
9:24:31 PM <shrini> ஆம்
9:24:53 PM <thangamani_arun> அதற்கான தேவையை உருவாக்க வேண்டும்
9:25:04 PM <thangamani_arun> எனவே நிலையான மாற்றம் உண்டாகும்
9:25:24 PM <shrini> குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர ஒரு மென்பொருள் வேண்டும்
9:25:40 PM <•Guest56975> தமிழக அரசால் நடத்தப்படும் பல்கலைகளைக் கேட்க முடியுமா?
9:25:41 PM <thangamani_arun> இல்லையென்றால் இது ஒரு பயனற்ற செயல்திட்டமாகிவிடும்
9:25:41 PM <shrini> அருண் மாணிக்கம்
9:25:54 PM <shrini> செய்ய இயலுமா ?
9:26:05 PM <shrini> அணில்
9:26:14 PM <shrini> ஆடு
9:26:14 PM <shrini> இலை
9:26:28 PM <shrini> இவற்றின் படங்கள்
9:26:28 PM <shrini> ஒலிகள்
9:26:54 PM <shrini> சேர்க்க வேண்டும்
9:27:16 PM <shrini> html5
9:27:16 PM <shrini> கொண்டு செய்யலாமா?
9:27:16 PM <thangamani_arun> சீனி ஓசியார் திட்டத்திற்கா
9:27:37 PM <shrini> இல்லை
9:27:38 PM <manikk> haxe
9:27:49 PM <shrini> குழந்தைகள் தமிழ் கறக
9:27:51 PM <manikk> and openfl
9:28:08 PM <shrini> ஒரு பள்ளி ஆசிரியர் கேட்டுருக்கிறார்
9:28:27 PM <manikk> செய்யலாம் தல
9:28:40 PM <shrini> இணைய தளமாகவும்
9:29:03 PM <shrini> zip கோப்பாகவும் தரலாம்
9:29:04 PM <manikk> haxe and openfl மூலமாக செய்யலாம்
9:29:06 PM <prnakkeeran> tva kalvi thittangalai paarungal.enna maatram seiyalam enru kurungal
9:29:44 PM <shrini> ஆம். த.இ.க தளத்தை மாதிரியாகக் கொள்ளலாம்
9:30:10 PM <manikk> த.இ.க?
9:30:14 PM <shrini> manikk: தாங்கள் இதை வழிநடத்துமாறு வேண்டுகிறேன்
9:30:39 PM <shrini> தமிழ் இணையக் கல்விக் கழகம்
9:31:08 PM <shrini> வணக்கம் KishoreMR
9:31:55 PM <shrini> Guest56975: பல்கலைக்கழகங்களுக்கு மடல் அனுப்பும் பணியை தாங்கள் செய்ய இயலுமா ?
9:32:48 PM <KishoreMR> வணக்கம்!
9:33:15 PM <shrini> gurulenin: வரைகலையில் ஏதேனும் செய்யலாமா?
9:33:35 PM <prnakkeeran> thamizh kalvi,min noolagam.tamil software development,tamil computing enra panigalai tva seithukondirukkirathu
9:33:39 PM <shrini> தமிழில் நிறைய meme
9:34:12 PM <gurulenin> வரைகலையில் எந்த மாதிரி ?
9:34:37 PM <shrini> தற்போது நிறைய குட்டி குட்டி படங்கள்
9:35:07 PM <shrini> ஆங்கில எழுத்துகளில் தமிழ் வார்த்தைகளை எழுதி வருகின்றன
9:35:29 PM <shrini> அதே போல் தமிழில் நிறைய உருவாக்கி உலாவ விடலாம்
9:36:10 PM <gurulenin> முயற்சிக்கலாம்..
9:36:27 PM <shrini> prnakkeeran: ஐயா. தமிழில் உள்ள வேர்ச்சொற்கள் தொகுப்பு கிடைக்குமா?
9:36:33 PM <manikk> தல குட்டி படங்கள்னா? எந்த மாதிரி சொல்லுரீங்க?
9:37:14 PM <shrini> Tamil meme என்று தேடுக
9:37:14 PM <thangamani_arun> அரட்டை செயலிகளில் உள்ள மாதிரி சில படங்கள்
9:37:20 PM <prnakkeeran> tva sol pirappu agara mudaliyai parungal
9:37:22 PM <shrini> ஆம்
9:38:48 PM <shrini> prnakkeeran: பார்க்கிறேன்
9:39:15 PM <shrini> ஒரு தமிழாசிரியரிடம் பேசினேன்
9:39:44 PM <shrini> தற்கால உரைநடைக்கு corpus
9:40:00 PM <shrini> செய்ய வேண்டினேன்
9:40:36 PM <shrini> சக ஆசிரியருடன் இணைந்து செய்வதாக உறுதி அளித்தார்
9:41:14 PM <shrini> சென்னையில் ஓரிரு நாள் பட்டறை நடத்தலாம்
9:42:00 PM <shrini> corpus-Sathia.rhcloud.com
9:42:23 PM <shrini> இங்கு அதற்கு ஒரு மென்பொருள் உருவாக்கி வருகிறோம்
9:42:41 PM <shrini> பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்
9:45:35 PM <prnakkeeran> sanga ilakkiya corpus onru uruvakka muyandrikondirukkirom
9:46:01 PM •Guest56975 was voiced (+v) by •Guest56975
9:46:45 PM <shrini> ஆம். அதேபோல் தற்கால உரைநடைக்கும் corpus தேவை
9:46:47 PM <shrini> இன்னும் 15 நிமிடங்களே உள்ளன
9:47:03 PM <prnakkeeran> source code-um kodutthirukkirom
9:47:25 PM <shrini> thangamani_arun: நீங்கள் செய்து வரும் பணிகள் பற்றி கூறுக .
9:47:27 PM <•Guest56975> prnakkeeran – தமிழ் மென்பொருள் உருவாக்குவதாகச் சொன்னீர்களே … அவை என்ன?
9:49:01 PM <shrini> பணிகளை பட்டியலிடலாமா?
9:49:18 PM <shrini> peyar.in செயலி – சீனீ
9:49:23 PM ⇐ manikk quit
9:49:42 PM <shrini> 2. corpus மென்பொருள் – சீனி
9:50:04 PM <shrini> 3. meme உருவாக்கம் – gurulenin
9:50:47 PM <prnakkeeran> tamil ocr,text to voice voice to text,translation
9:51:00 PM <shrini> 4. தமிழ் கற்க மென்பொருள் – thangamani_arun மாணிக்கம்
9:51:34 PM <•Guest56975> அவரவர் ஆங்காங்கு செய்து வரும் பணிகளை ஒரு பட்டியலாகத் தயாரித்து அருண் சில காலத்திற்கு முன்னர் தந்தார் அல்லவா?
9:51:49 PM <shrini> 5. பல்கலைக்கழக தளங்களை தமிழில் வெளியிட மடல் அனுப்புதல்
9:52:17 PM <shrini> Guest56975: மடல் அனுப்ப இயலுமா?
9:52:27 PM <•Guest56975> இயலாது 😦
9:52:46 PM <shrini> ஆம். அருண் பட்டியல் தயாரித்தார்
9:52:46 PM <shrini> அதை மேம்படுத்த வேண்டும்
9:53:14 PM <shrini> thangamani_arun: பட்டியலை மேம்படுத்த வேண்டுகிறேன்
9:53:26 PM <shrini> Guest56975: சரி.
9:53:52 PM <•Guest56975> மடல் அனுப்பினால் மட்டும் போதாது என்று நினைக்கிறேன். அவர்களோடு பேசிப் பார்க்க வேண்டும். ஏன் இன்னும் ஆங்கிலத்தில் தருகின்றனர் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
9:54:09 PM <shrini> prnakkeeran: வேர்ச்சொல் பட்டியல் பற்றி தங்கள் தளத்தில் பார்க்கிறேன்
9:54:42 PM <shrini> அங்கு இல்லையெனில் பட்டியல் தயாரிக்க உதவ இயலுமா?
9:55:11 PM <prnakkeeran> aarvamullavargal thangal karuthukalai pathivu seiyya oru thalam erpadutha mudiyuma?
9:55:13 PM <shrini> Guest56975: ஆங்கிலத்தில் தரட்டும்
9:55:27 PM <shrini> தமிழிலும் தர கேட்க வேண்டும்
9:55:52 PM <shrini> prnakkeeran: செய்யலாம்
9:56:27 PM <shrini> prnakkeeran: தேவை பற்றி விரிவாக தனிமடல் எழுதவும்
9:56:40 PM <shrini> இன்னும் சில நிமிடங்களே உள்ளன
9:57:10 PM <shrini> இங்கு பட்டியலிட்ட பணிகளை செய்து
9:57:13 PM <shrini> அடுத்த மாதம்
9:57:31 PM <shrini> வளர்ச்சி பற்றி விவாதிக்கலாம்
9:57:55 PM <prnakkeeran> antha thalathil,thevaikalai kuralam,thangal panigalai pagiralaam
9:57:56 PM <•Guest56975> prnakkeeran – த.இ.க. தற்போது மேம்படுத்தி வரும் மென்பொருட்களின் பட்டியலையும் அவற்றிற்கான வலைத்தளங்களையும் உங்கள் தளத்தில் தந்தால் சிறப்பாக இருக்கும்.
9:58:58 PM <prnakkeeran> Tharugirom
9:58:58 PM <shrini> அனைவருக்கும் நன்றி
9:59:03 PM <•Guest56975> எ-டு – சொர்ஸ்போர்ஜ்
9:59:11 PM <KishoreMR> we can use change.org to create petition for tamil interface in university website and make people sign the petition which in turn send mails to all vice-chancellors or persons concerned.
9:59:15 PM <prnakkeeran> nanri
9:59:32 PM ⇐ gurulenin quit
9:59:48 PM <shrini> ஒவ்வொரு மாதமும் 16ம் தேதி இரவு 9-10 இங்கு சந்திப்போம்
10:00:22 PM <shrini> KishoreMR: நல்ல யோசனை
10:00:33 PM <•Guest56975> அவ்வாறு தருவதால், ஆர்வலர்கள் அத்திட்டங்களில் இணைந்துகொள்ளலாம்; கருத்துப் பரிமாறிக்கொள்ளலாம்; தேவையற்ற ‘டுப்லிகேஷனையும்’ தவிர்க்கலாம்.
10:00:45 PM ⇐ prnakkeeran quit
10:00:59 PM <•Guest56975> சந்திப்போம்.
10:01:16 PM ⇐ •Guest56975 quit
10:01:19 PM <shrini> நன்றி அனானி Guest56975
10:01:55 PM <shrini> நன்றி thangamani_arun KishoreMR
10:02:10 PM <KishoreMR> நன்றி

கடந்த கால உரையாடல்கள்:

செப்டம்பர் 16 உரையாடல்

Advertisements

2 thoughts on “அக்டோபர் 16 உரையாடல்

 1. எனக்கு ஆஸ்திரேலிய நேரம் சரியாக இரவு 1:30 க்கு இந்த கூட்டம் ஆரம்பிக்கும். நாளை அலுவலகம் இருப்பதால் இன்று கலந்து கொள்வது இயலாது. அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

  அல்லது இந்திய நேரம் மாலை 6:00 மணிக்கு தொடங்க இயலுமா?
  அப்படி இல்லாவிடில் இந்த கூட்டங்களை ஒவ்வோரு மாதமும் இரண்டாவது வெள்ளி அல்லது சனி இரவு என்று வைக்க முயற்சிக்கவும்.

  நன்றி.

  Like

 2. நல்ல முயற்சி, அடுத்த கூட்டத்தில் பங்கேற்க முயற்சிக்கிறேன். corpus-Sathia.rhcloud.com குறித்து ஏதேனும் முயற்சிகள் இருப்பின் பங்கேற்க முயற்ச்சிக்கிறேன். நன்றி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s