மே 2015 உரையாடல்

இன்று இரவு (மே 16, 2014) 9 மணிக்கு

http://webchat.freenode.net/

வாருங்கள்.

irc-demo

Nickname என்பதில் உங்கள் உண்மையான பெயர் அல்லது வலையில் நீங்கள் பயன்படுத்தி வரும் பெயரைத் தாருங்கள்.

Channels என்பதில் tamilirc என்று தாருங்கள்.

படத்தில் காணும் எண்ணை அதன் கீழ் உள்ள புலத்தில் இட்ட பிறகு Connect பொத்தானை அழுத்துங்கள்.

ஒவ்வொரு மாதமும் ஒரு தேதியில் இது போல் உரையாடலாம்.

சரியாக ஒரு மணி நேரம் உரையாடிக் கலைவோம். இந்த உரையாடல்களைப் படியெடுத்துப் பாதுகாத்தும் வைப்போம்.

மற்ற விவரங்களைக் கூடி முடிவெடுப்போம்.

நன்றி.

Advertisements

ஏப்ரல் 16 உரையாடல்

(UTC நேரத்தில்)

[2015-04-16 16:14:14] வணக்கம் சீனி
[2015-04-16 16:31:36] வணக்கம் .
[2015-04-16 16:34:08] வணக்கம்
[2015-04-16 16:34:25] மகி்ழ்ச்சி
[2015-04-16 16:35:33] அனைவருக்கும் வணக்கம்…!!
[2015-04-16 16:35:35] வணக்கம்
[2015-04-16 16:36:02] பழனியப்பன், செகதீசன், நரசிம்மா, சங்கர் – வருக
[2015-04-16 16:36:24] நன்றி…!!
[2015-04-16 16:37:31] புதிதாக வந்துள்ளவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்
[2015-04-16 16:38:58] எனது பெயர் சங்கரநாராயணன். நான் ‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகத்தை நடத்தி வருகிறேன்.
[2015-04-16 16:39:30] மகிழ்ச்சி
[2015-04-16 16:39:47] முகநூலில் உங்கள் குழுவின் பேட்டி கண்டேன்
[2015-04-16 16:40:31] மிக்க மகிழ்ச்சி 🙂
[2015-04-16 16:41:49] எனது பெயர் செகதீசன்..!! நான் இறுதி ஆண்டு முதுகலை படிக்கும் மாணவன்..!! இப்போது நான் நாக்பூர் இருக்கிறேன்… 🙂
[2015-04-16 16:43:50] மகிழ்ச்சி செகதீசன்
[2015-04-16 16:44:13] இந்த மாதாந்த உரையாடலை செப்டம்பர் 2014 தொடங்கி சில மாதங்கள் செய்தோம்
[2015-04-16 16:44:22] இதன் குறிப்புகளை https://tamilirc.wordpress.com/ பக்கத்தில் காணலாம்
[2015-04-16 16:44:32] இடையில் ஒரு சிறு தொய்வு விட்டு இம்மாதம் மூலம் மீண்டும் தொடங்குகிறோம்
[2015-04-16 16:44:38] இதில் புதிய நண்பர்களைக் காண மகிழ்ச்சி
[2015-04-16 16:44:56] அனைவருக்கும் வணக்கம்
[2015-04-16 16:45:03] ஏனெனில், ஒருவர் சார்ந்தோ கடமைக்கோ என்று கூட்டாமல் தாமாக ஆர்வத்துடன் இக்கூட்டங்கள் ஒருங்கிணைப்பட வேண்டும் என்பது என் அவா
[2015-04-16 16:45:14] tzf;fk; ez;gu;fsB
[2015-04-16 16:45:17] வணக்கம். இப்பொழுது தெரிந்து கொண்டேன், எப்படி இதில் உரையாடுவது என்று
[2015-04-16 16:45:26] வணக்கம் நண்பர்களே 🙂
[2015-04-16 16:45:30] நான் இங்கே முதல் முறையாக இருக்கிறேன்..!! மிக்க மகிழ்ச்சி 🙂
[2015-04-16 16:45:31] வாங்க அருட்
[2015-04-16 16:45:34] அருண்
[2015-04-16 16:45:40] அடடா, அப்படியா பழனியப்பன்
[2015-04-16 16:45:59] ircஐப் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கிறதா
[2015-04-16 16:46:16] அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி
[2015-04-16 16:46:22] சில நண்பர்கள் கூகுள் ஆங்கவுட்டில் பேசலாம் என்று கோரினார்கள். ஏதாவது ஒரு மாதம் முனைவோம். எழுதுவதில் சில வசதிகள் இருக்கின்றன 🙂
[2015-04-16 16:46:29] இல்லை… 😉
[2015-04-16 16:46:38] நாம் இங்கு
[2015-04-16 16:47:19] பதிவு செய்யும் டப்பாவை பெரிதாக்க ஏதேனும் வழி உண்டா?
[2015-04-16 16:48:47] பதிவு செய்வதில் சிரமம் ஒன்றும் இல்லை
[2015-04-16 16:48:55] பெரிசாத்தானே இருக்கு
[2015-04-16 16:49:28] நான் டைப் செய்யும் இடம் மிகவும் சிறிதாக உள்ளது. அது பற்றி கேட்டேன்
[2015-04-16 16:50:29] பரவாயில்லை. நமது இந்த சந்திப்பு துவங்கும் முன், ஏற்கனவே மின்னசல் அல்லது கூகிள் க்ரூப்ஸ் மூலம் இணைந்து ஒரு அஜெண்டா முடிவு செய்து கொள்வது நல்ல யோசனையா?
[2015-04-16 16:50:47] ஆம் அது சற்று சிறிய பகுதி தான்
[2015-04-16 16:50:48] அடுத்த முறை இருந்து நாம் கூகிள் Hangout உரையாடலை வை த்தாள் அரும‌ையாக இருக்கும்…!!
[2015-04-16 16:51:13] இன்று எதனை பற்றி விவாதிக்க போகிறோம் என்பது போன்று
[2015-04-16 16:51:34] சரி, மாற்று வழிகளையும் தேடுவோம். செல்பேசி மூலம் வந்தால் உரை எழுதும் பெட்டி கண்ணுக்கே தெரியாத அளவில் இருப்பது உண்மை தான்
[2015-04-16 16:52:39] freetamilebooks.com க்கு மின்னூலாக்கம் செய்ய உதவி தேவை
[2015-04-16 16:52:54] http://dev.freetamilebooks.com/?resolved=unresolved&order=DESC
[2015-04-16 16:53:07] இன்று புதிதாக வந்துள்ள நண்பர்கள் தாங்கள் பகிர விரும்பும் செய்திகளைப் பகிரலாம்
[2015-04-16 16:53:08] பல மின்னூல்கள் காத்திருப்பில் உள்ளன
[2015-04-16 16:53:17] முதல் மாத உரையாடலில் தமிழுக்கு ஒரு மனவரைபடம் உருவாக்க பொறுப்பேற்றிருந்தேன்
[2015-04-16 16:53:20] அதனை இங்கு காணலாம்
[2015-04-16 16:53:21] https://coggle.it/diagram/54f064a49c2e5e4529dc0852/8a73a66004ad809ed4b85aafac001e45b3b0d3d5157bfc2035d3377215ef1c18
[2015-04-16 16:53:33] மேலும் இதனை மேம்படுத்த ஆர்வலர்கள் இணைந்து உதவலாம்
[2015-04-16 16:54:58] @ஸ்ரீனி – நானும் இணைய முயற்சி செய்கிறேன்
[2015-04-16 16:55:42] நன்றி சங்கர்
[2015-04-16 16:55:57] உங்களது தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகள் பற்றிய நாள்காட்டி குறித்து கேள்விப்பட்டேன். அதனைப் பற்றி முகநூலில் பகிரலாமே.
[2015-04-16 16:56:05] இரவி – நன்றாக உள்ளது
[2015-04-16 16:56:42] @ஸ்ரீனி அந்த .pub பிழை தீர்ந்துவிட்டது…??
[2015-04-16 16:56:55] மனவரைபடம் நன்றாக உள்ளது. எதில் தாயாரித்தீர்கள்?
[2015-04-16 16:57:11] http://chennaieventscalendar.wordpress.com/
[2015-04-16 16:57:23] coggle.it தளத்தில் தான். இலவணமாக உருவாக்கலாம்
[2015-04-16 16:57:34] இதற்கும் உதவி தேவை
[2015-04-16 16:58:11] எந்த மாதிரியான உதவி ? நான் கண்டிப்பாக பங்கு கொள்வேன்
[2015-04-16 16:58:18] சீனி, நூலாசிரியர்கள் மடற்குழு இருந்தால் ஒன்றிரண்டு நூல்களுக்கு மேல் போட்ட ஆசிரியர்களையே தன்னார்வமாக உதவச் சொல்லிக் கோரலாம்.
[2015-04-16 16:58:49] நான் அடுத்து ஈடுபட எண்ணியுள்ளதைப் பகிரும் முன் பிரதிலிபி முயற்சி எப்படிப் போகிறது என்று அறிய விரும்புகிறேன்.
[2015-04-16 16:58:53] வணக்கம் நண்பர்களே.
[2015-04-16 16:59:06] ஏனெனில் இதே போல் நான் துவங்கிய நூல் இனி முயற்சிக்குப் போதிய ஆதரவு இல்லாததால் நிறுத்தி வைத்துள்ளேன்
[2015-04-16 16:59:14] மின்னூல்கள் உருவாக்க நாம் Libre Office with an ePub Add-on உபயோகித்தால் எளிதாக உள்ளது
[2015-04-16 16:59:56] அரும‌ை…!!
[2015-04-16 17:00:00] ஸ்ரீனி எனது முயற்சி பற்றி அறிந்தவர். மற்றவர்களுக்காக – நான் அவரைப் போன்று, தமிழ் எழுத்தாளர்களை தொடர்பு கொண்டு அவர்களின் படைப்புகளை இலவச மின் புத்தகங்களாக பதà®
[2015-04-16 17:00:30] எங்கள் தளம் வெறும் இலவச மின் புத்தகங்கள் குறித்த தளமாக இருக்காது.
[2015-04-16 17:01:06] முதலில் வாசகர்கள் நிறைய பேர் சேரும் வரை நாங்கள் இலவச படைப்புகளை மட்டுமே ஆதரிக்கிறோம்.
[2015-04-16 17:01:52] பின்னர், payment gateway வை சேர்த்து, எழுத்தாளர்கள், அவர்கள் விரும்பும் விதத்தில், இலவசமாகவோ, தாங்கள் விரும்பும் விலையிலோ வெளியிட உதவுவோம்.
[2015-04-16 17:02:05] எப்பொழுதுமே இலவசமாக கொடுக்க முயற்சிக்கலாம்
[2015-04-16 17:02:40] பழனியப்பன், எப்போதும் இலவசமாகவே கொடுத்தால் வீட்டில் உலை வைப்பது எப்படி? 🙂
[2015-04-16 17:02:50] அதற்கு எழுத்தாளர்கள் ஒற்றுக் கொள்ள வேண்டுமே.
[2015-04-16 17:02:57] வணக்கம் உங்களின் முயற்சி வெற்றி பெறட்டும்
[2015-04-16 17:02:59] 🙂
[2015-04-16 17:03:01] @ravi dreams 🙂
[2015-04-16 17:03:08] நன்றி.
[2015-04-16 17:03:17] ஆமாம்..இலவசம் ஒரு வரம்பு வரை மட்டுமே இருக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து
[2015-04-16 17:03:29] இலவச நூல்கள், விலை வைத்த நூல்கள் எல்லாம் வரட்டும். எதை விற்பது, வாங்குவது என்பதை மக்கள் முடிவு செய்யட்டும். தமிழ் நூல்கள் நன்கு விற்று ஆசிரியர்கள், வணிகர்கள் அனà
[2015-04-16 17:03:32] தமிழ் செழிக்கும்
[2015-04-16 17:03:49] இல்லாவிட்டால் தமிழ் சோறு போடாது என்று பொய்யாகச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்
[2015-04-16 17:03:58] newshunt போன்று குறைந்த விலையில் விற்றால் நிறைய பேர் படிப்பர்
[2015-04-16 17:04:04] மேலும், தமிழ் சார்ந்த படைப்புகள் பொருளீட்டுபவையாக இருத்தல் அவசியம்.
[2015-04-16 17:04:54] என் நூல் இனி பிரச்சினை நூதனப் பிரச்சினை. drm இல்லாவிட்டால் நூல்களைத் தர மறுக்கிறார்கள்.
[2015-04-16 17:05:10] முதலில் என்ன என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை வரிசைப் படுத்தவும்
[2015-04-16 17:05:22] மிக சரியாக கூறினீர்கள்.
[2015-04-16 17:05:27] சிலர் ஏற்கனவே தங்களை அச்சில் கொண்டு வந்த பதிப்பங்களுக்கு நன்றி காட்டுவதாக நினைத்து மின்னூல்கள் கொண்டு வராமல் இருக்கிறார்கள்
[2015-04-16 17:05:36] சரி போகட்டும் என்று விட்டு விட்டேன்
[2015-04-16 17:05:38] @ரவி – உங்களிடம் இன்னும் விரிவாக பேச விழைகிறேன்.
[2015-04-16 17:05:42] விற்பனை பணம் என்பதெல்லாம் இப்பொழுது வேண்டாம்
[2015-04-16 17:05:45] இந்த வகையில் ஒரு பெரும் மன நிலை மாற்றம் தேவைப்படுகிறது
[2015-04-16 17:05:53] நல்லது, தமிழ் சோறு போடாது என்பதை மாற்றுவோம்
[2015-04-16 17:05:57] 🙂
[2015-04-16 17:06:19] சங்கர், கண்டிப்பாகத் தொடர்பில் இருப்போம்
[2015-04-16 17:06:38] தமிழ் மொழி மூலமும் பணம் செய்யலாம் என்று புரிந்தால் மேலும் மேலும் தரமான படைப்புகளும் தமிழில் வர வழி சமைக்கும். அதுவரை pet projects ஐத்தான் பலரும் எழுதப்போகின்றார்கள்.
[2015-04-16 17:07:06] பிரதிலிபி தளம் பார்த்தேன். உலாவி அடிப்படை வாசிப்பான்கள் அயர்ச்சியூட்டுவன. அதில் எப்படி ஒரு முழு நூலைப் படிக்க முடியும் என்று தெரியவில்லை. ஒரு செயலியாக வந்தாலà¯
[2015-04-16 17:07:21] இப்பொழுது , எனக்கு உதவி தேவை படுவது, முக்கியமாக எழுத்தாளர்களை தொடர்பு கொள்வதில். வெறும் ஒரு வர்த்தக நோக்கம் தாண்டி, இதனை ஒரு community ஆக உருவாக்கினால் மட்டுமே, நெடு
[2015-04-16 17:07:31] முதலில் யார் யாருக்கு எந்த வேலை தெரியும் அதை எப்படி தமிழுக்குப் பயனுள்ளதாக மாற்றுவது என்று திட்டமிடவும்
[2015-04-16 17:07:44] அட, வருக பொள்ளாச்சி நசன் ஐயா
[2015-04-16 17:07:53] நீங்கள் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி
[2015-04-16 17:08:06] இது தான் சரியாக இருக்கும்
[2015-04-16 17:08:13] வணக்கம்
[2015-04-16 17:08:23] அனைவருக்கும் வணக்கம்
[2015-04-16 17:08:41] வணக்கம் ஐயா வருக!
[2015-04-16 17:08:50] தன் வலியும் துணை வலியும் நோக்கிச் செயல்
[2015-04-16 17:08:57] எனத் திட்டமிடுவோம்
[2015-04-16 17:09:02] அதுதான் சரியாக இருக்கும்
[2015-04-16 17:09:45] நான் தமிழ் கற்பித்தல் தொடர்பாக இயங்குவேன்
[2015-04-16 17:10:07] ஒவ்வொருவரும் தங்களின் பணியைத் திட்டமிடுவோம்
[2015-04-16 17:10:46] கணினி நுட்பம் தெரிந்தவர்கள் செய்ய வேண்டியன நிறைய உள்ளன
[2015-04-16 17:10:48] வணக்கம் பொள்ளாச்சி நேசன், வணக்கம்…உங்களைப் பற்றி சீனி அறிமுகம் கொடுத்தார்.
[2015-04-16 17:10:56] மிக்க மகிழ்ச்சி
[2015-04-16 17:11:14] எப்படியாவது சிறப்பாகச் செய்ய முன்னெடுப்போம்
[2015-04-16 17:12:10] நான் என்னிடம் உள்ள மிக பழைமையான தமிழ் நூல்களை SCAN செய்து மின்னூலாக்கித் தருகிறேன்
[2015-04-16 17:12:33] 30 நாள்களில் நாள் ஒன்றுக்கு 10 நிமிடங்கள் சொல்லிக் கொடுத்தால் போதும் யாரை வேண்டுமானாலும் நான் தமிழ்ச் செய்தித்தாளைப் படிக்க வைப்பேன்
[2015-04-16 17:12:55] மருத்துவம் சம்பத்தப்பட்டவை
[2015-04-16 17:13:02] பழனியப்பன் ஐயா தங்களிடம் உள்ள நூல்களின் பட்டியலை எடுக்க வேண்டும்
[2015-04-16 17:13:17] ஏனெனில் நிறைய பிடிப் ஆக்கப்பட்டுள்ளன
[2015-04-16 17:13:25] செய்ததையே செய்ய வேண்டாம்
[2015-04-16 17:13:33] அது நேர வீணடிப்பாக அமையும்
[2015-04-16 17:14:10] அப்படி ஆக்கப் படாத சிலவற்றை மட்டும் மாற்றுகின்றேன்
[2015-04-16 17:14:12] எனது தளத்தில் உலக அளவில் பாதுகாக்கப்பட்ட நூல்களின் பட்டியலைப் பார்க்கவும்
[2015-04-16 17:14:41] 12 ஆயிரம் நூல்கள் 30 ஆயிரம் இதழ்கள் பலரால் செய்யப்பட்டு விட்டன
[2015-04-16 17:14:58] ஆம் அதுதான் சரியாக இருக்கும்
[2015-04-16 17:15:21] இன்றைய முதன்மையான தேவை ஓசிஆர் செய்வதுதான்
[2015-04-16 17:15:36] தமிழுக்கான ஓசிஆர் மிகப் பெரிய வேலையை செய்யும்
[2015-04-16 17:15:48] செய்பவர்களுக்குப் பணம் வேண்டுமானாலும் தரலாம்
[2015-04-16 17:15:56] தரமான ஓசிஆர் உருவாக்க வேண்டும்
[2015-04-16 17:16:11] அதற்கு நல்ல நண்பரைத் தேட வேண்டும்
[2015-04-16 17:16:35] ocr முயற்சிகள் தொடங்கிவிட்டன
[2015-04-16 17:16:52] மிக்க நன்றி அந்த பட்டியலைப் பார்த்து எனது plan & list of books ஐ தருகிறேன்
[2015-04-16 17:16:56] அதற்கு நாம் வலூவூட்டுவோம்
[2015-04-16 17:17:05] பிரச்சனைகளுக்கு உதவுவோம்
[2015-04-16 17:17:12] நான் இணைந்து அதனை ஆக்குவோம்
[2015-04-16 17:17:13] @ஸ்ரீனி – OCR il நாங்கள் இணையலாமா?
[2015-04-16 17:17:27] “பெரும் தரவு” பற்றி சிறிய காட்டுரைகளை தமிழில் எழுதிவருகிறேன்….!!
[2015-04-16 17:17:37] ஓசிஆர் முயற்சிக்கு உதவ தயார்
[2015-04-16 17:17:56] அது வந்தால் பிடிஎப் அனைத்தையும் ஒருங்குறியில் மாற்றி தேடு பொறி அமைத்து சங்க இலக்கியங்களையே கலக்கலாம்
[2015-04-16 17:18:15] ஆராய்ச்சி யாளர்களே தேவையில்லை
[2015-04-16 17:18:26] வித்தை காட்டலாம்
[2015-04-16 17:18:41] முழுமையான ஓசிஆர் உருவாக்க வேண்டும்
[2015-04-16 17:19:02] கருத்தளவில் நான் இயங்குபவர்களோடு ஒத்துழைக்க அணியமாக உள்ளேன்
[2015-04-16 17:19:18] மகிழ்ச்சி
[2015-04-16 17:20:28] சீனி-ஓசிஆர் திட்ட பக்கம் எதாவது இருந்தால் பகிருங்களேன்
[2015-04-16 17:20:33] தமிழ் கற்பிக்க உதவும் 32 அட்டைகளை 13 மொழியில் மொழி பெயர்த்து விட்டேன், உலக மொழிகள் அத்தனையிலும் மொழிபெயர்த்து , ஒரு மொழிக்கு 10 பேர் எனத் தமிழ் படிக்க வைத்தால் போத
[2015-04-16 17:20:34] http://printalert.wordpress.com/2014/04/28/training
[2015-04-16 17:21:06] http://booksofasia.com/PDFs/From%20Conversion%20to%20Subversion%20-%20250%20years%20of%20the%20printed%20book%20in%20India%20_%20030814B.pdf
[2015-04-16 17:21:09] kbalavignesh@gmail.com க்கு ஆர்வமுள்ளோர் மின்னஞ்சல் அனுப்புக
[2015-04-16 17:21:30] பொள்ளாச்சி நேசன் ஐயா உங்களுடையது தளத்தில் இருந்து நான் ஒரு சிறிய mobile app அமைக்க முடிவெடுத்துள்ளேன்..!! அதற்கு உங்கள் அனுமதி வேண்டும்
[2015-04-16 17:21:48] அப்படி என்றால் என்ன
[2015-04-16 17:21:53] எனக்குத் தெரிய வில்லையே
[2015-04-16 17:21:57] நான் என்ன செய்ய வேண்டும்
[2015-04-16 17:22:00] இந்த கோப்பில் இந்தியாவில் வெளியிட்ட அரிய புத்தகங்கள் பற்றிய தகவல்கள் உள்ளன.. அவற்றில் பல தமிழ் புத்தகங்கள் உள்ளன.
[2015-04-16 17:22:21] ஓசிஆர் இணைப்பு பார்த்தேன்
[2015-04-16 17:22:24] 250 years of the printed book in India
[2015-04-16 17:22:37] அவருடன் நான் பேசுகிறேன்
[2015-04-16 17:22:50] நன்றி
[2015-04-16 17:23:00] எப்படியாவது உருவாக்குவோம் எனது ஸ்கைப் ஐடி pollachinasan1951
[2015-04-16 17:23:36] இதுவரை தமிழில் வெளியான மென்பொருள் பட்டியல் தயாரிக்க எண்ணம்.
[2015-04-16 17:23:43] https://docs.google.com/forms/d/134C3-sUQy2V-v4ovcMmVDBa5X_fL-673rOKcJCenE20/viewform
[2015-04-16 17:23:49] இந்தியாவில் வெளியிட்ட புத்தகங்களில் தமிழ் மட்டும் பார்ப்போம்
[2015-04-16 17:23:53] இந்த படிவத்தை நிரப்பி உதவுக
[2015-04-16 17:24:40] ocr வளர்ச்சிக்கு @Pratilipi_Sankar உதவ இயலுமா?
[2015-04-16 17:24:47] அந்த இணைப்பு பாருங்க
[2015-04-16 17:25:05] இன்னும் சிலர் இணைந்தால் விரைவில் முடிக்கலாம்
[2015-04-16 17:25:06] பொள்ளாச்சி நேசன் ஐயா நான் உங்களுடையது தளத்தை முழுமையாக பார்த்தேன்…!! மிகவும் அருமை
[2015-04-16 17:25:16] http://booksofasia.com/ உள்ள தமிழ்ப்புத்தகங்களை யாராவது பட்டியல் ஆக்க இயலுமா
[2015-04-16 17:26:16] மிக்க மகிழ்ச்சி எனது தளத்தில் இப்பொழுது புதியதாக தமிழம் பண்பலை தொடங்கி உள்ளேன் . அது தமிழ் உணர்வை மக்களிடம் ஆக்கும்
[2015-04-16 17:26:39] 24 மணி நேரமும் பாடல்கள் பாடும்
[2015-04-16 17:26:47] தமிழராக மாற்றும்
[2015-04-16 17:27:12] நன்றி பொள்ளாச்சி நேசன் அண்ணா..
[2015-04-16 17:27:17] 🙂
[2015-04-16 17:27:35] நல்ல பல செயல்கள் செய்துள்ளீர்கள்
[2015-04-16 17:28:07] என் பெயர் நடேசன் என்னை யாரும் டே என்று அழைக்கக்கூடாது என்று டே எடுத்து நசன் ஆக்கினேன் 1985 இல் அதுவே நிலைத்து விட்டது
[2015-04-16 17:28:31] நாம் செய்ய வேண்டியன நிறைய உள்ளன
[2015-04-16 17:28:36] இணைந்து செய்வோம்
[2015-04-16 17:28:46] தொடர்ந்து செய்வோம்
[2015-04-16 17:28:49] மகிழ்ச்சி ஐயா
[2015-04-16 17:29:05] அவரவர் பணியை வரையறை செய்து கொண்டு
[2015-04-16 17:29:09] இயங்குவோம்
[2015-04-16 17:29:29] அடுத்த அமர்வுக்குள் எப்படியாவது பணியை நிறைவாகச் செய்ய உறுதி எடுப்போம்
[2015-04-16 17:29:32] சரிதானே
[2015-04-16 17:29:33] மிக்க மகிழ்ச்சி ஐயா
[2015-04-16 17:29:44] இது வெற்றிக்குப் படியாக அமையும்
[2015-04-16 17:29:55] சரி ஐயா…!!
[2015-04-16 17:30:20] அடுத்த அமர்வுக்குள் நான் 1. தமிழ் மென்பொருள் பட்டியல், 2, ocr பணி விவரம் 3. தமிழ் 32 அட்டைகளுக்கான செயலி
[2015-04-16 17:30:26] செய்வேன்
[2015-04-16 17:30:36] மிக்க மகிழ்ச்சி
[2015-04-16 17:30:50] நீங்களும் செய்ய விரும்பும் பணிகளைப் பட்டியலிடுக
[2015-04-16 17:31:09] ஓசிஆர் குறித்து முதலில் என்னெ ன்ன முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன என்பதை தொகுப்போம்
[2015-04-16 17:31:09] 32 அட்டைகளுக்கான செயலியை செய்யும் பொழுது என்னை இணைக்கவும்
[2015-04-16 17:31:17] ஆம் ஐயா
[2015-04-16 17:31:17] தொடர்ந்து உரையாடலைக் கவனித்து மகிழ்ந்தேன்
[2015-04-16 17:31:22] கல்வி சார்ந்து செய்ய வேண்டும்
[2015-04-16 17:31:29] எழுத்துணரி தொடர்பாக பலர் துண்டு துண்டாகப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்
[2015-04-16 17:31:38] இதில் ஒரு தொடர்பாடலை உருவாக்க வேண்டும்
[2015-04-16 17:31:42] விரைவில் அனுப்புகிறேன்
[2015-04-16 17:31:54] ஒருவர் ஒருவர் கை கோர்க்கும் போது வேலை இலகுவாகிறது 🙂
[2015-04-16 17:32:03] தமிழ் வளர்ச்சிக் கழகம் கொடையாக கொடுத்த 20 தொகுதி கலைக்களஞ்சியங்களை மின்னுரைகளாக கொண்டு வரும் பணியை முடுக்கி விட எண்ணி உள்ளேன்
[2015-04-16 17:32:11] Palaniappan: ocr பற்றியும் தொகுக்கிறேன்
[2015-04-16 17:32:16] அடுத்த மாத அமர்வுக்குள் இதனை முன்னெடுத்து விவரங்களைத் தருகிறேன்
[2015-04-16 17:33:06] தமிழ் தெரியாத ஒருவரை இணைத்தால் அவருக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க நான் உதவுவேன். வேற்று மொழி நண்பரை நாம் திரட்டுவோம்
[2015-04-16 17:33:20] 30 நாள்களில் அவரை படிக்க வைப்போம்
[2015-04-16 17:33:32] இது பெரிய அதிர்வை ஏற்படுத்தும்
[2015-04-16 17:33:48] விருப்பம் இருப்பவர்கள் மின் அஞ்சல் செய்யவும்
[2015-04-16 17:33:59] இந்திய விக்கிப்பீடியா சமூகங்களில் நிறைய பன்மொழி ஆர்வலர்கள் இருக்கிறார்கள்
[2015-04-16 17:34:05] அவர்களில் ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன்
[2015-04-16 17:34:12] நன்றி அதில் Project Management & Testing, பணி செய்ய விளைகின்றேன்
[2015-04-16 17:34:24] ஸ்கைபில் வந்தால் நான் பேசுவேன்.
[2015-04-16 17:34:35] சரி
[2015-04-16 17:34:37] மகிழ்ச்சி இரவி…அகராதி பணிகளுக்கு உதவி வேண்டினால் தயங்காமல் சொல்லுங்கள்.
[2015-04-16 17:34:50] அட்டையை நடத்துவது பற்றி இப்பொழுது காணொளி தளத்தில் இணைத்துள்ளேன்
[2015-04-16 17:34:54] pollachinasan: உங்கள் தளத்தை creative commons உரிமையில் வெளியிடுங்க
[2015-04-16 17:35:14] அப்படி என்றால் என்ன என்று தெரியவில்லையே
[2015-04-16 17:35:17] Palaniappan: நன்றி
[2015-04-16 17:35:36] எனது வெளிநாட்டு நண்பர்களிடம் கேட்கிறேன் @பொள்ளாச்சிநேசன் அய்யா.
[2015-04-16 17:35:51] pollachinasan: அது பற்றி மின்னஞ்சல் அனுப்புகிறேன்
[2015-04-16 17:36:00] ஐயாவுக்கு நான் தொடர்பு கொண்டு கிரியேட்டிவ் காமன்சு பற்றி விளக்குகிறேன்
[2015-04-16 17:36:08] சரி ravidreams
[2015-04-16 17:36:13] இப்போது வெளியூர் பயணமாக இருப்பதால் விடை பெறுகிறேன்
[2015-04-16 17:36:17] pollachinasan@gmail.com
[2015-04-16 17:36:25] தொடரும் உரையாடலை சீனி ஆவணப்படுத்துகிறீர்களா
[2015-04-16 17:36:35] நான் நாக்பூர் இருக்கிறேன், எனது நண்பர்களுக்கு நான் தமிழ் கற்றுக்கொடுக்கிறான்…. 😉
[2015-04-16 17:37:23] ஜெகதீசுக்கு நான் உதவுகிறேன் மின் அஞ்சல் செய்யுவும்
[2015-04-16 17:37:28] மிக நல்ல செயல் ஜெகதீசன்
[2015-04-16 17:37:41] ravidreams: செய்கிறேன்
[2015-04-16 17:37:52] ravidreams: டாடா
[2015-04-16 17:38:06] நன்றி மீண்டும் சந்திப்போம்
[2015-04-16 17:38:11] வணக்கம்
[2015-04-16 17:38:48] வணக்கம் எல்லோருக்கும். மீண்டும் சந்திப்போம்
[2015-04-16 17:39:18] சென்று வாருங்கள் இரவி..
[2015-04-16 17:39:24] Jagadeesan: https://www.youtube.com/watch?v=AoMXExkhsEQ
[2015-04-16 17:39:26] சரி பொள்ளாச்சி நேசன் ஐயா…
[2015-04-16 17:39:31] இங்கே பாருங்க
[2015-04-16 17:40:20] நன்றி ஸ்ரீனி..!!
[2015-04-16 17:42:13] அனைவருக்கும் நன்றி
[2015-04-16 17:42:55] சந்திப்பை முடிக்கலாமா?
[2015-04-16 17:43:25] கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி
[2015-04-16 17:49:24] நன்றி..

திசம்பர் 16 உரையாடல்

9:01:01 PM → shrini joined
9:04:21 PM வணக்கம் maran
9:05:53 PM வணக்கம் Viruba
9:06:05 PM சற்று நேரம் காத்திருக்கலாம்
9:07:10 PM → viruba and Thangamani-arun joined ⇐ Viruba quit ↔
viruba_ popped in
9:11:01 PM hi
9:11:40 PM வணக்கம்
9:11:56 PM வணக்கம்
9:13:02 PM கைப்பேசி மூலம் இணைந்துள்ளேன்
9:15:16 PM வணக்கம் அருண்
9:15:41 PM மாறன். முதல் முறை சந்திக்கிறோம் என நினைக்கிறேன்
9:16:11 PM அறிமுகம் செய்துகொள்ள வேண்டுகிறேன் @maran
9:19:14 PM peyar.in க்கான ios செயலி இங்கே –
https://itunes.apple.com/us/app/peyar-tamil-names/id946080132
9:19:35 PM மூல நிரல் – https://github.com/kishorek/Peyar-iOS
9:21:42 PM இந்த வார இறுதியில் மலேசியப் பள்ளிகளுக்காக
பாடத்திட்டம் உருவாக்கப் போகிறோம்
9:21:56 PM அருண், இளந்தமிழ் சென்னை வருகின்றனர்
9:24:20 PM ஆம்
9:24:38 PM http://www.kaniyam.com/list-of-required-software-for-tamil/
9:24:55 PM இங்கே தமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின்
பட்டியல் உள்ளது
9:25:06 PM மேலும் ஏதாவது சேர்க்க வேண்டுமா?
9:25:24 PM → Shanmugamp7 joined
9:25:46 PM சனவரி மாதத்தில் பொது அறிவிப்பு வெளியிட்டு
திட்டத்தை தொடங்கலாம்
9:25:56 PM வணக்கம் Shanmugamp7
9:26:45 PM → thangamaniarun joined ← Thangamani-arun left
9:28:03 PM கணினிக்கு வந்துட்டேன்
9:28:37 PM சீனி இவ்வர இறுதியில் சென்னை வரலாம் என
யோசனை செய்துக்கொண்டிருக்கின்றேன
9:28:43 PM *இவ்வார
9:29:36 PM நீங்கள் சற்றுமுன் அனுப்பிய URLஐ மீண்டும்
அனுப்புங்கள்
9:29:47 PM thangamaniarun: வருக
9:29:56 PM 🙂
9:30:15 PM peyar.in க்கான ios செயலி இங்கே –
https://itunes.apple.com/us/app/peyar-tamil-names/id946080132
9:30:27 PM மூல நிரல் – https://github.com/kishorek/Peyar-iOS
9:30:34 PM → ArunC joined
9:30:39 PM http://www.kaniyam.com/list-of-required-software-for-tamil/
9:30:49 PM இங்கே தமிழுக்கு தேவையான கட்டற்ற மென்பொருட்களின்
பட்டியல் உள்ளது
9:32:56 PM வௌ்ளிக்கிழமை ஸ்ரீனியில் உரை த.இ.க வில் உள்ளது
9:33:07 PM ஸ்ரீனியின்
9:35:05 PM ஆம் 😉
9:35:35 PM அங்கு சந்திப்போம்
9:35:57 PM
http://tamilvirtualacademy.blogspot.in/2014/12/blog-post.html
9:36:10 PM வணக்கம் shrini 🙂
9:36:51 PM ஞாயிறு அன்று விருபா இணையதளத்தில் ஒரு தமிழ்
மின்–அகராதி இணைக்கவுள்ளேன்
9:38:04 PM ஓ. என்ன அகராதி ஐயா?
9:38:35 PM 2 நாள் இறுதிக்கட்ட வேலைகள் உள்ளன
9:38:52 PM நல்லது
9:39:14 PM 100 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சில் வௌிவந்த நிகண்டு
ஒன்றை மின்–அகராதியாக்கியுள்ளேன்
9:39:29 PM ஓ. மகிழ்ச்சி
9:39:34 PM மிக்க மகிழஙச்சி
9:39:48 PM என்ன scanner வருடி வைத்துள்ளீர் ?
9:40:30 PM → singaporebala joined
9:40:47 PM வணக்கம் singaporebala
9:41:19 PM வணக்கம்..
9:41:24 PM
http://www.epson.com/cgi-bin/Store/jsp/Product.do?sku=B11B200211
9:41:27 PM வணக்கம்
9:41:34 PM வணக்கம்
9:43:25 PM thangamaniarun: மோசில்லா பணிகள் எப்படி உள்ளன?
9:43:44 PM இன்னும் 15 நிமிடங்களே உள்ளன
9:44:07 PM தமிழ் சார்ந்து நீங்கள் செய்யும் பணிகளை பகிருங்களேன்
9:44:23 PM இதோ
9:45:28 PM நான் மொசில்லா திட்டங்களான பயர்பாக்ஸ்
உலாவி firefox OS மற்றும் இணையப்பக்கங்களை மொாியாக்கம் செய்து வருகிறேன்
9:45:40 PM இங்கு காணவும் http://mozilla.locamotion.org/ta/
9:46:11 PM ⇐ ArunC quit
9:46:27 PM மேலும் அண்மையில் Telegram என்றி கைப்பேசி
அரட்டைச் செயலியை மொழிபெயர்த்து வருகிறேன்
9:46:44 PM நல்லது
9:47:07 PM மகிழ்ச்சி
9:47:22 PM லிப்ரெஓபிஸ் திட்டத்தில் புதியதாக 8000
சரங்கள் வந்துள்ளன்
9:47:25 PM magento க்கும் தமிழாக்கம் தேவை
9:47:48 PM → Selin joined
9:47:51 PM
https://translations.documentfoundation.org/ta/libo_ui/
9:48:02 PM ஓ சரி.
9:48:50 PM அனைவருக்கும் வணக்கம். வேலை நிமித்தமாக தாமதமாக
கலந்து கொள்ள நேரிட்டதற்கு வருந்துகிறேன்,
9:49:16 PM வணக்கம் Selin
9:49:47 PM வணக்கம்…தொடருங்கள்
9:50:16 PM திரைக்கணினிக்கு தேவையான முக்கிய
மென்பொருட்கள் மொழியாக்கம் ெசய்ய வேண்டும்
9:50:33 PM தமிழில் வணிகத்திற்கு தேவையான மென்பொருள் உள்ளதா?
9:50:46 PM ஆதில் VLC இயக்கி
9:50:59 PM ⇐ singaporebala quit
9:51:00 PM ஆம் குனு cash
9:51:05 PM இருப்பு, விற்பனை, ரசீது போன்றவற்றை செய்ய
9:51:37 PM குனுகேஷ் பண மேலாண்மை மட்டுமே
9:51:46 PM இது சிறிய நிறுவனங்களுக்கு பயன்படும்
9:51:55 PM ஆம்
9:52:00 PM billing software தமிழில் வேண்டும்
9:52:10 PM டேலி மாதிரியா
9:52:12 PM ?
9:52:17 PM நல்ல திட்டம்
9:52:24 PM இருக்கு சீனி
9:52:30 PM என்ன இருக்கு ?
9:52:40 PM ஆனால் பணம் கொடுத்தால் தமிழில் கிடைக்கும்
9:52:54 PM POS மாதிரியான
9:53:06 PM ஓ. இணைப்பு தருக
9:53:27 PM தற்போது ஒரு தனி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது
9:54:38 PM ஆனால் இணையத்தில் இல்லை
9:54:57 PM இணைப்பு இருந்தால் தாருங்கள் தங்கமணி
9:55:02 PM சரி, விவரங்கள் மின்னஞ்சல் அனுப்புக
9:55:16 PM இணைய தகவல் எதுவும் இல்லை
9:55:21 PM ஆம்
9:55:38 PM நான் உங்களிடம் மூன்று விடயங்கள் பற்றி பேச வேண்டும்.
9:56:03 PM Selin: ?
9:56:22 PM → ArunC and Ravidreams joined
9:56:56 PM ௧. இங்குள்ள கிரீன்விச் பல்கலைகழகத்தில் மாதா மாதம்
இந்நிகழ்வை நடத்த நமது தமிழ் பேராசிரியர் ஒருவர் ஒரு இடம் பெற்று தருவதாக
சொல்லியுள்ளார்
9:57:00 PM மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசின் கணியன்
பூங்குன்றன் தமிழ்க் கணிமை விருது பெறுவதற்கு இவ்வாறான ஒரு மென்பொருள்
வந்ததாக ஞாபகம்
9:57:06 PM I மன்னிக்கவும்
9:57:35 PM வணக்கம் அருண், மற்றும் இரவி.
9:57:37 PM Selin: மகிழ்ச்சி
9:57:44 PM இறுதி நேரத்தில் தான் வர முடிந்தது
9:58:03 PM viruba : மேலும் தகவல் கிடைக்குமா?
9:58:15 PM Selin: தொடர்க
9:58:15 PM ௨.. நமது குழுவிற்கு ஒரு பெயர் சூட்டி அதை நம்மைப்
போன்ற ஆர்வமுள்ளவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
9:58:48 PM முதலில் இருந்து இருப்பவர் யாராவது உரையாடல்
தொகுப்பை மின்மடலில் அனுப்ப முடியுமா
9:59:08 PM நினைவில் இருந்ததைச் சொல்லியுள்ளேன், தமிழ்
வளர்ச்சித்துறையில் கடந்த ஆண்டுகளில் பங்குபற்றியவர்கள் பட்டியல்
கிடைத்தால், அறியலாம்
9:59:48 PM ௩..எனக்கு தெரிந்த ஒரு பெண் தன்னார்வலர், இலங்கையில்
போரில் பாதிப்படைந்த குழந்தைகளின் படிப்பிற்காக சில கல்விக்கூடங்களை
கட்டியுள்ளார். அவை சுமார் 30 கூடங்கள்.
9:59:53 PM நான் அனுப்புகிறேன்
10:00:23 PM நமது கல்வியை, மற்றும் அறிவை அந்த குழந்தைகளுக்கு
சென்று சேர்க்க நாம் முயல்வோமா?
10:00:51 PM Selin: அந்த குழந்தைகளுக்கு எப்படி உதவலாம்?
10:01:10 PM Shrini, எனக்கும் அனுப்புங்கள்
10:02:02 PM → ArunC1 joined ⇐ ArunC quit
10:02:10 PM இங்கிருந்தே செய்வதெண்டால், நாம் ஒரு கையேடு
தயாரிக்கலாம், அவர்கள் அதை அச்சிட்டு அக்குழந்தைகளுக்கு கற்றுதருவர்.
10:02:44 PM கையேட்டில் என்ன தகவல்கள் வேண்டும்
10:02:47 PM அங்கு சென்றும் ஒரு வாரம் தங்கியும் நாம் செய்யலாம்,
அவை பிற்காலத்தில் பார்ப்போம்.
10:03:00 PM tamilirc.WordPress.com தளத்தில் உரையாடல்
தொகுப்புகள். உள்ளன
10:03:06 PM https://groups.google.com/forum/#!forum/freetamilcomputing
10:03:27 PM இந்த குழுவில் இணைந்து கையேடு பற்றிய விவரங்கள் தருக
10:03:31 PM இதை நினைவில் வையுங்கள், மற்றபடி தொடர்ந்து பேசுவோம்…
10:03:48 PM அருண், உங்கள் பணி எப்படி செல்கிறது?
10:04:32 PM Selin: மின்னஞ்சல் குழுவில் எழுதுக. அங்கே பணிகளை
தொடங்குவோம்.
10:05:40 PM 10 மணி தாண்டி விட்டது
10:06:22 PM அனைவருக்கும் நன்றி
10:06:23 PM நான் சாப்பிடிக்ெகாண்டிருந்தேன் 🙂
10:06:47 PM சரி..
10:07:02 PM சீனி
10:07:03 PM இரவி, முகப்புதகத்தில் ஒரு பக்கம் துவங்குவோமா?
10:07:21 PM பல பக்கங்கள் உள்ளன
10:07:40 PM 🙂
10:08:39 PM இல்லை, இந்த குழுவிற்கு..
10:09:03 PM சீனி நீங்கள் முழுஅரட்டையையும் இரவிக்கு
வழங்க முடியுமா?
10:09:11 PM அல்லது ஒரு குழு மின்னஞ்சல் முகவரி இருந்தால்
என்னையும் இணையுங்கள்.
10:09:18 PM நான் வழங்குகிறேன்
10:09:27 PM https://groups.google.com/forum/#!forum/freetamilcomputing
10:09:31 PM நன்றி
10:09:32 PM இங்கே சேர்க
10:09:37 PM அடுத்த மாதம் 16 வரை, ஒரு தொடர்பு இல்லாதது போல் உணர்கிறேன்.
10:10:05 PM பெரும்பாலும் எல்லா தமிழ் கணிணி ஆர்வலர்களும் இங்கே உள்ளனர்
10:10:21 PM நன்றி சீனி..இதோ இணைகிறேன்.
10:11:25 PM நன்றி
10:11:55 PM எனக்கும் முழு அரட்டை வேண்டும் சீனி
10:11:59 PM இது மாதாந்த உரையாடலாக இருந்தால் போதுமே
10:12:45 PM ஆம். இங்கு மாதாமாதம் உரையாடலாம்
10:12:45 PM ஏற்கனவே பல் குழுக்களில் களங்களில் இயங்கத்
10:12:58 PM தானே செய்கிறோம்
10:13:09 PM விடை பெறுகிறான்
10:13:17 PM நன்றி
10:13:33 PM நன்றி வணக்கம்
10:13:37 PM அனைவருக்கும் நன்றி
10:13:40 PM நன்றி இரவி
10:13:53 PM மீண்டும் சந்திப்போம்
10:14:03 PM விடை பெறுகிறேன்,
10:14:32 PM ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நவம்பர் 16 உரையாடல்

* Now talking on #tamilirc

வணக்கம் 🙂

* Loaded log from Sun Nov 16 20:56:37 2014

* Now talking on #tamilirc
வணக்கம்
* ArunC has quit
* ArunC has joined #tamilirc
* You are now known as thangam_arun
தொடங்கலாமே
அனைவருக்கும் வணக்கம்
சரி
வணக்கம்.
எனது அறிமுகம்: பெயர்: செலின் ஜார்ஜ், இங்கிலாந்திலிருந்து கலந்துகொள்கிறேன்.
வணக்கம். நான் சீனி. சென்னையிலிருந்து
நான் அருண், பெங்களுரிலிருந்து.
* Viruba has joined #tamilirc
நாண் அருண் பெங்களூர்
பொதுவாக என்ன செய்கிறீர்கள் என ஒர் அறிமுகம்
அனைவருக்கும் வணக்கம், நான் விருபா, சென்னையிருந்து….
வருக
பொதுவாக என்ன செய்கிறீர்கள் என ஒர் அறிமுகம் கொடுங்களேன்
நான் FreeTamilEbooks.com, kaniyam.com க்கு உதவி புரிகிறேன்
நான் மென்பொருள் துறையில் வேலை செய்கிறேன்.
பொதுவாக, மென்பொருள் தயாரிப்பு, அதைப்பற்றி படிப்பது.
நான் 2005 இல் இருந்து தமிழ்ப்புத்தகத் தகவல் திரட்டு ( http://www.viruba.com ) நடாத்தி வருகிறேன்
மகிழ்ச்சி
🙂
நான் மொசில்லா பயர்பாக்ஸ், பயர்பாக்ஸ் ஓஎஸ், உபுண்டு போன்ற திற மூல மென்பொருட்களை தமிழாக்கம் செய்து வருகிறேன்
நல்லது
நல்லது
🙂 நன்று.
மகிழ்ச்சி அருண் 🙂
விருபா உங்கள் இணையமும் அருமை
நன்றிகள்
கடந்த இரு சந்திப்புகளிலும் என்னால் சரியாக கலந்து கொள்ள முடியவில்லை
ஞாயிறு மிகவும் வசதியாக உள்ளது
பரவாயில்லை
எனக்கும் இதுதான் முதல் சந்திப்பு
இது ஒரு தொடக்கம் தான்
அடுத்து என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?
சீனி கடந்த சந்திப்பு பற்றி சுருக்கமாக சொல்லுங்களேன்
* Sundar has joined #tamilirc
shrini?
peyar.in ன் ஆன்டிராயடு
செயலி, உருவாக்கத்தில் உள்ளது
மகிழ்ச்சி 🙂
கடந்த வாரத்திற்கு பிறகு அதில் முன்னேற்றம் ஏதும் நடந்தததா?
https://build.phonegap.com/apps/1150459/share
வாருங்கள் சுந்தர்!
SFRADIO என்று ஒரு ஆண்டராய்ட் செயலியை எனது ஒய்வு நேரத்தில் வெளியிட்டுள்ளேன்
நன்றி அருண் :_
இங்கு பெறலாம்
அனைவரும் நலமா?
நலமே
நலம் சுந்தர்
வணக்கம் சுந்தர்
* ravidreams has joined #tamilirc
சீனி iOS தளத்திற்கு பெயர்.இன் செயலியை உருவாக்க திட்டம் ஏதும் உள்ளதா
வணக்கம் இரவி
அனைவருக்கும் வணக்கம்
நன்றி, சீனி இடையூறுக்கு மன்னிக்கவும். தொடருங்கள்.
முதன்முறையாக வந்திருக்கும் சுந்தர், அருண்(கள்), குமரேசன் ஆகியோரை வரவேற்கிறேன் 🙂
ஆம். ios ம் தரலாம்
வருக இரவி அவர்களே
🙂
வணக்கம் இரவி
இரவி நீங்க தொடர்ந்து நடத்துங்க
நான் நடத்த எல்லாம் ஒன்னும் இல்ல
போன கூட்டத்துக்கும் என்னால் வர முடியவில்லை 😦
சீனி இதற்கான மூலங்கள் எங்க வைத்துள்ளீர்கள்?
பெயர்.இன் தளத்தின் செயலி குறித்து பேச்சு ஓடுகிறது என நினைக்கிறேன். உங்கள் உரையாடலைக் கவனிக்கிறேன்.
ஆம்
github ல் உள்ளது
url சிறிது நேரத்தில் தருகிறேன்
ஒரு ஆதங்கம்… வரவர மக்கள் சல்மகேஷ், ஷாருகேஷ் நு பெயர் வெக்கறாங்க… ரொம்ப வருத்தமா இருக்கு..
ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களுக்கான மூலங்கள்?
ஆம்
ஒரே மூலம் தான்
phonegap ல் செய்வதால் ஒரே மூலநிரல், பல பொதிகள்
பெயர்.இன் பார்த்துக்கொண்டிருக்கிறேன்…
brb
நல்லது
* Sundar has quit (Quit: Page closed)
அப்படி என்றால் பயர்பாக்ஸ் இயங்கு தளத்திற்கு உருவாக்க முடிந்தால் நல்லது
ஆதரவு உள்ளதா
இல்லை
ஆகா!
இன்று நளாஸ் ஆப்பக்கடையில் தமிழில் உணவுப் பட்டியல் கேட்டு நான் எழுதிய கோரிக்கை. இது போல நீங்களும் கேட்கலாமே.
https://pbs.twimg.com/media/B2krgbzCUAAhfVu.jpg:large
சரி
அருமை.
அருமை சீனி.
கை
எழுத்தும் அருமை
😉
நல்ல முயற்சி
நல்லது
கடந்த இரு மாதங்களாக பெரும் அளவு நுட்பம் குறித்தே பேசுகிறோம்
இது நுட்பக்காரர்களுக்கான உரையாடலாக மட்டும் போய் விடக்கூடாது 🙂
இது போல பலரும் கேட்டால், மாற்றங்கள் வரலாம்
மகிழ்ச்சி சீனிவாசன்…அழகாக கோரியுள்ளீர்கள்.
எனவே, சீனி பகிர்ந்தது போல் தங்கள் அனுபவங்களைப் பகிரலாமே
* Sundar (67fc19d6@gateway/web/freenode/ip.103.252.25.214) has joined #tamilirc
நேற்று, நான் கோவையில் இந்஀ிய ஀ொழிற் கூட்டமைப்பு நட஀்஀ிய ஒரு மாநாட்டில் பேசினேன். வேற்று மொழிக் காரர்களும் வந்஀ிருந்஀஀ால் ஆங்கில஀்஀ில் ஀ான் பேச வேண்டி இருந்஀à
ஆனால், தொடக்கத்தில் வணக்கம் சொல்லி தமிழில் சில நேரம் பேசினேன்
சரியாக தோன்றவில்லையே
அருமை
2 நாள் நிகழ்வில் நான் மட்டுமே தமிழில் பேசியதாக கூறி வந்திருந்தவர்கள் மகிழ்ந்தும் ஏக்கத்துடனும் வாழ்த்தினார்கள்
அதன் பிறகு, கேள்வி நேரத்தின்போது பலர் தமிழில் பேசத் தொடங்கி விட்டார்கள்
இது போல தமிழ் ஒலிக்கக் கூச்சப்படும் அவைகளில் நாம் முன்முயற்சி எடுக்க வேண்டும்.
அண்மைச்செய்திகளில் கண்ட முக்கிய கட்டுரை – http://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-courses-find-more-takers-among-dalits/article6600392.ece
கண்டிப்பா
கண்டிப்பாக..
அண்ணா பல்கலைக்கழக஀்஀ில் Carte Blanche நிகழ்வில் என்னை ஒருமுறை சிறப்பு விருந்஀ினனாக அழை஀்஀ிருந்஀ார்கள். நுட்பியலாளர்களுக்கு஀் ஀மிழ்சார் வாய்ப்புக்களைப்பற்றி (வேறெனà¯
நல்ல வரவேற்பிருந்தது.
குறிப்பாக நமது கையெழுத்துகள் தமிழில் வரவேண்டும்.
பேச்சிலும் தமிழ் அதிகம் வேண்டும்
குறிப்பாக தொலைபேசி எண்
முகவரி, போன்றவற்றை தமிழில் பேச வேண்டும்
ஆமாம்
ஆம், செய்யவேண்டும். சோம்பல் தான் கேடு. கொஞ்சம் கொஞ்சமாக எல்லா இடங்கிளலும் முழுக்க தமிழ்மயமாகிக்கொண்டிருக்கிறேன் 🙂
பிற முக்கிய செய்திகள். கூகுளில் தமிழ் கையெழுத்தை உணரும் செயலி – https://www.facebook.com/photo.php?fbid=10153414775088569&set=a.10153414778348569.1073741831.576438568&type=1
கூகுளில் தமிழ் வழி குரல் தேடல் விரைவில் கிடைக்கும் – http://indianexpress.com/article/technology/technology-others/google-kickstarts-indian-language-internet-alliance-focus-first-on-hindi/
சரியாக சொன்னீர்கள்
பயனுள்ள செய்தி இரவி
ஏற்கனவே பலரும் அறிந்த செய்திகளாக இருக்கும் என்றாலும் ஆவணப்படுத்தலுக்காக இங்கு பதிகிறேன்
இப்போதுதான் பார்க்கிறேன்
மகிழ்ச்சி
நேற்றைய ஒரு சந்திப்பில், தமிழர் உலகம் என்ற அமைப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவர்
தங்கம் அருண்.. பயர்பாக்சில் உங்கள் தமிழ் பணிகள் பற்றி விவரிக்க முடியுமா? ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருவரும் தத்தம் பணிகளை விவரிப்பது பயனுள்ளதாக இருக்கும்
@ArunC //ஒரு ஆ஀ங்கம்… வரவர மக்கள் சல்மகேஷ், ஷாருகேஷ் நு பெயர் வெக்கறாங்க… ரொம்ப வரு஀்஀மா இருக்கு.. // போன வாரம் முழுக்க ஒரு வாசகர் என்னை விடாமல் ஀ொலைப்பேசியில் ஀ுர஀்஀à
cbse பாடங்களுக்கு தமிழில் வீடியோ பாடங்கள் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று வேண்டினார்
கண்டிப்பாக
பலருக்கும் சுருக்கமான, புதுமையான பெயர்கள் தேவைப்படுகிறது. இப்படி நிறைய பெயர்களை உருவாக்கி பெயர்.இன் தளம் மூலம் பரப்ப வேண்டும்
தமிழ் திரைப்படங்களில் வரும் அனைத்துப்பெயர்களும் தமிழில் இருந்தால் வரி விலக்கு தரலாம் என்று கூட ஒரு முறை எண்ணினேன் 🙂
http://www.valaitamil.com/baby_names.php
தமிழ்பாரதி அவர்கள் தமிழ் பெயருக்காக ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்.
அப்பெயர்கள் பெயர்.இன் ல் உள்ளனவா?
பயர்பாக்ஸ் உலாவி தமிழ்படுத்தும் பணிகள் இங்கே நடைப்பெற்று வருகிறது http://mozilla.locamotion.org/ta/
பெயர்.இன் தரவுத்தளம் இற்றைப்படுத்தப்பட வேண்டும்
அங்கு பல்வேறு திட்டங்களும் உள்ளன்
உங்களால் முடிந்தால் சிறிய அளவிலோ பெறிய அளவிலோ தமிழாக்க செய்து உதவ முடியும்
நல்லது, அருண். பயர்பாக்சு தொலைப்பேசி வந்த பிறகு தமிழ் பதிப்புக்கான ஆதரவு குறித்து பொதுமக்களிடம் இருந்து உங்களுக்கு ஏதேனும் கருத்துகள் வந்தனவா
http://thamizhagam.net/thamizhagam-elibrary/thamizhagam-elibrary.html#
https://raw.githubusercontent.com/poogel77/peyar-new இங்கு பெயர் செயலிக்கான மூல நிரல் உள்ளது
இல்லை இரவி
தமிழ்பரிதி அவரிகளின் தமிழ் பெயர்கள் புத்தகம் மேலே உள்ள தளத்தில் உள்ளது.
உங்களைத் தவிர வேறு யாரும் தகவல் கொடுக்கவிலலை
ஓ.. நான் எல்லாம் பொதுமகள் இல்லையே ::(
அருண், என்னிடம் ஒரு பயர்பாக்சு கைபேசி உள்ளது.
தமிழ் அதில் இல்லை.
பயர்பாக்ஸ தளம் தமிா் படுத்தப்பட்டு வருகிறது
https://www.mozilla.org/ta/firefox/new/
எந்த பதிப்பு?
நான் இங்கு ஐக்கிய குடியிருப்பில் வாங்கியதால் தமிழ் இல்லை என்று நினைக்கிறன்.
இருக்கலாம்
தமிழை அதில் சேர்க்க என்ன செய்யவேண்டும் என்று சொல்லுவீர்களா? பிறகு சொன்னால் கூட போதும்.
சரி நான் சோதித்துவிட்டு கூறுகிறேன்
கோப்புகள் அதிக இடம் பிடிப்பதால் அதை தவர்த்திருக்கலாம்
ஆம்.
நாடு இந்தியா என தெர்வுச்செய்தீர்களா?
இல்லை.
thangam_arun: சிறு குறிப்பு. தமிழ்ப்படுத்த என்பதற்குப்பதிலாக இந்த இடத்தில் தமிழில் வரத்தொடங்கியுள்ளது எனலாம்.
இங்கிலாந்து என்றே தேர்ந்தெடுத்தேன்.
மீட்டமைத்து மாற்றிப்பாருங்கள்
ஆம் அருண், பயர்பாக்சு உட்பட பல பன்னாட்டு நிறுவனத் தளங்கள் தமிழில்வரத் தொடங்கியுள்ளது நல்ல செய்தி
சரி சுந்தர்.
கூகுள் தன் சேவைகளை முற்றிலும் தமிழில் தரத் தொடங்கியுள்ளது.
கண்டிப்பா
அருண், நான் அதை பிறகு செய்கிறேன்.
கூகுள் இன்னமும் ஆணட்டராய்டு இயங்கு தளத்தை மட்டும் தமிழில் வழங்கவில்லை
செய்திவிட்டு தெறியப்படுத்துங்க
சரி அருண் 🙂
ஆம், கூகிளில் தமிழ் அடிப்படை மொழியாகும் நாளுக்காய் காத்திருக்கறேன்.
transifex.com தளத்திற்கு mobile client இருந்தால்
எளிதில் பலரும் பங்களிக்கலாம்
மேலும் VLC இயக்கி தமிழில் ஆணட்ராய்டு இயங்க தளத்தில் வந்துவிட்டது
கூகுளின் அடுத்தடுத்த பதிப்புகளில் தமிழ் கிடைக்கும் என்று தெரிகிறது
சரி
இருந்தால் நல்லது 🙂
பதிவிறக்கி சோதித்து பார்க்கவும்
உரையாடல் முடியும் நேரத்தை நெருங்குகிறோம். சீனி, அனைத்து உரையாடல்களையும் கண்ட அனுபவத்தில் அடுத்த மாதக்கூட்டங்களுக்கு உங்கள் பரிந்துரைகள் என்ன
முதல் கூட்டத்தில் நிறைய இலக்குகள் வைத்தோம். ஆனால், நிறைவேற்ற முடியவில்லை
http://www.videolan.org/index.ta.html
சனி, ஞாயிறுகளில் வைத்தால் இன்னும் பலர் கலந்து கொள்ளலாம் என்று சிலர் தெரிவித்தார்கள்
ஆனால், எந்த நாளில் வைத்தாலும் யாருக்காவது சிக்கலாக இருக்கும்
அதுவும் இல்லாமல் வார இறுதி நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் போக்கும் கூடிவருகிறது
எனவே, வழமை போல் 16ஆம் தேதியே தொடரலாம் என்று நினைக்கிறேன்
இங்கு மெட்வே தமிழ் சங்கங்கத்தில் வழங்கும் சுழற்கோப்பைகளில் தமிழை கடந்த மூன்று வருடங்களாக பயன்படுத்துகிறோம்.

ஆமாம் அதை எல்லாம் பார்த்து பார்த்து வைக்க இயலாது
இந்திய நேரம் 9 மணி என்பது எனக்கு மாலை 3.30 மணி
அலுவலகத்தில் இருப்பேன்.
அருண், vlc தளத்தைத் தமிழில் காண மகிழ்ச்சி
ஆனாலும் வேலை முடிந்து வந்து என்ன பேசியுள்ளீர்கள் என்று பார்க்கிறேன்.
செலின், உங்கள் தமிழ் சங்கச் செய்திகண்டுமகிழ்ச்சி
மலேசிய சிங்கப்பூர் மக்கள் பங்கெடுக்க வாய்ப்பு குறைகிறது
நன்றி இரவி
ஆம், பல்வேறு நேர வலயங்களில் இருப்பவர்களுக்கும் உகந்த நேரம் வைப்பது பற்றி யோசிக்க வேண்டும். இதற்கு முன்னால் வைத்தால் இந்தியா, இலங்கையில் உள்ளவர்கள் வேலை முடித
செய்து 2 மாதங்கள் ஆகின மறந்துட்டேன்
vlc தமிழை இப்போதே தரவிரக்குகிறேன்.
நல்லது
அப்புறம் தமிழ் நாட்காட்டிகள் குறைந்துவிட்டன
எல்லாம் ஆங்கில நாட்காட்டிகளாகவே வலம் வருகின்றன.
வீடுகளில் தொடர்நது பயன்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்
செலின், நாட்காட்டியே காலாவதியாகி வருகிறதே
🙂
நான் முன்பெல்லாம் மக்களுக்குத் தமிழ் தட்டச்சு தெரியவில்லையே என்று வருந்தி வந்தேன்
சித்திரை, வைகாசி என தமிழ் மாதங்களை முதன்மை படுத்தி, ஆங்கில மாதங்களை சிறிய எழுத்துகளில் போட்டு நாம் ஒரு PDF விடிவில் நாட்காட்டி
தயாரித்தால் எப்படி வரவேற்பு இருக்குமா?
ஆனால், வருங்காலம் பேச்சில் இருந்து எழுத்தாகும் காலமாக இருப்பதால் தொலைநோக்கான பிரச்சினைகளை மட்டும் கருத்தில்கொள்வோம்
* linuxkathirvel has joined #tamilirc
ஆமாம் இரவி, உங்கள் புத்தகங்களில் அந்த ஆதங்கம் தெரிந்தது.
அனைவருக்கும் வணக்கம்.
வணக்கம் நண்பரே
ஆனால் இப்போது உங்கள் போன்றோரின் கடின உழைப்பால் நிலைமை பரவாயில்லை.
சென்னையில் ஒரு நாள் கூடி, கணிணி நுட்பங்களை தமிழில் எழுதும் நிகழ்ச்சி நடத்தலாம் என்று எண்ணம்
சரி இரவி.
வாழ்த்துகள் சீனி
முதன்முதலாக இந்த தமிழ் உரையாடலில் நுழைகிறேன். ஆகையால் தங்கள் அனைவரின் உரையாடலையும் படித்து கொண்டிருக்கிறேன்.
சீனி, சவீதா பொறியியல் கல்லூரியில் பேசி இடம் பெற்று தர வாய்ப்புள்ளது.
linuxkathirvel இணைந்து எழுதுவதாய் கூறியுள்ளளார்
அதன் மேலாளர் மிகவும் ஆர்வமுள்ளவர்.
ஓ மகிழ்ச்சி. சவீதா கல்லூரி தொடர்புகளை அனுப்புக.
மேலும் தமிழ் விக்கி கருத்தரங்கு சென்னையில் நடத்தினால் சொல்லவும்.
* bangbang has quit (Client Quit)
சீனி, உங்கள் திட்டத்தை விளக்கி எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
புத்தாண்டுக்கு 4-5 நூலைகள் வெளியி எண்ணம்
மகிழ்ச்சி
https://groups.google.com/forum/#!forum/freetamilcomputing
இக்குழுவில் இணைந்தால் பல்வேறு தமிழ் கணிமைச் சார்ந்த விவர/விவாதங்கள் கிடைக்கும்
தமிழ் அகரவரிசைப்படுத்தல் குறைபாடற்ற இணையதளமாக விருபா இணையம் உள்ளது என்பதை இங்கு அனைவருக்கும் அறியத்தரவிரும்புகிறேன்.
தகவலுக்கு நன்றி அருண், விருபா.
நல்லது அருண், குமரேசன்
செலின், இப்போதைக்கு விக்கி கருத்தரங்கு திட்டம் ஏதும் இல்லை
சரி இரவி.
புது மென்பொருட்கள் உருவாக்கப் போட்டி திட்டமும் உள்ளது
அதற்கு நிறைய களப்பணி செய்யும் ஆள்வளம் வேண்டும். இப்போதைக்குச் சாத்தியம் இல்லை
வருங்காலத்தில் செய்தால் உங்கள் தொடர்புகளைப் பெற்றுக் கொள்கிறேன்
விரைவில் அறிவிக்கிறேன்
இது போன்ற அறிமுகங்களை இந்த உரையாடல் தருவது மகிழ்ச்சி
சரி… சவீதா கல்லூரியில் தமிழ் மன்றம் உள்ளது.
அடுத்த கூட்டத்துக்கு தமிழ் தொடர்பான மனவரைபடம் செய்து முடிக்கிறேன்
தமிழில் உள்ள இணையதளங்களின் / நுட்பியல் தன்மை பற்றி உரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யவேண்டும்
நேரம் முடிகிறது
நல்லது விருபா. உங்கள் அக்கறைக்கு நன்றி. நீங்கள் சுட்டியதைவைத்து மீடியாவிக்கி மென்பொருளில் திருத்தம் கொண்டுவர வழு அறிக்கையைப் பதிந்துள்ளேன்.
செய்வோம், குமரேசன்.
அடுத்த உரையாடலில் இது பற்றி விரிவாக உரையாடுவோம்.
விக்கி பயிலரங்கு பயிற்சி ஏதேனும் கல்லூரி மாணவர்களுக்கு அளிக்க முடிந்தால் சொல்லுங்கள் இரவி.
ஆனால் அதற்குப் போதிய வாக்குகள் கிடைக்க ஆவன செய்யவேண்டும்
செலின், இதுகுறித்து தனிப்பட உங்களுடன் உரையாடுகிறேன்
வாக்குகளை வைத்து மட்டும் அவர்கள் வழுக்களைத் தீர்ப்பதில்லை
உரையாடலில் கலந்துகொண்டது மகிழ்ச்சி. அடுத்தமுறை சந்திப்போம்.
அடுத்த முறை சந்திப்போம்
ஆம், அவர்கள் முன்னுரிமை சிக்கலின் தீவிரத்தைப் பொருத்தது.
சரி இரவி.
நன்றி
நான் முற்றிலும் அந்த இடத்திற்குப் புதியவன், சுந்தர் கேட்டதால் நான் இணைந்து வாக்களித்தேன்
வணக்கம் 🙂
அடுத்து என்று IRC சந்திப்பு?
வாக்களித்தது நல்லதுதான் விருபா. வீணல்ல, அதையும் கணக்கில் கொள்வார்கள்.
சீனி இவ்வாரத்தில் கட்டற்ற மென்பொருள் பட்டியலை அனுப்பி வைக்கிறேன்
சீனி பாடத்திட்டம் பற்றி கூறவில்லையா
சீனி பாடத்திட்டம் உருவாக்கம் பற்றி கூறவில்லையா
நாம் வாட்ஸ்ஆப் மூலம் ஒரு குழு நமக்குள் துவங்கலாம்.
ஏதேனும் உடனுக்குடன் பேச..
அது நல்ல யோசனை
\q
* Sundar has quit ()
உங்கள் கைபேசி எண்ணை தாருங்கள்
சரி இத்துடன் கூட்டத்தை முடிக்கலாமா?
WhatsAppஇல் சேர்க்கிறேன்.
Selin: என்னுடைய கைப்பேசி எண்ணை தனியாக அனுப்பியுள்ளேன்.
விடைபெறுகிறேன்
சரி அருண்
* Viruba has quit (Quit: Page closed)
பாடத்திட்டம் அடுத்த வாரம்.
* ravidreams has quit (Ping timeout: 246 seconds)
விடை பெறுகிறேன்
மிண்டும் சந்திப்போம்.
* ArunC has quit ()
விடைபெறுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்
நன்றி
* Selin has left #tamilirc

அக்டோபர் 16 உரையாடல்

அக்டோபர் 16 உரையாடல்:

8:00:58 PM <•Guest56975> வணக்கம்
9:01:45 PM <shrini> வணக்கம்
9:01:59 PM <shrini> வருக Guest56975
9:02:15 PM <shrini> வணக்கம் prnakkeeran
9:02:15 PM <•Guest56975> எதைப் பற்றிப் பேசப் போகிறோம்?
9:02:55 PM <shrini> தமிழுக்காக நாம் செய்யும் செயல்கள் பற்றி
9:03:35 PM <•Guest56975> ரொம்ப பொதுவா இருக்கே! 🙂
9:04:43 PM <shrini> அவரவர் செய்யும் செயல்களை பட்டியலிட்டு
9:04:50 PM <thangamani_arun> வணக்கம்
9:04:57 PM <shrini> அவற்றின் வளர்ச்சியை பேசலாம்
9:05:12 PM <•Guest56975> தமிழுக்காக என்பதைவிட தமிழர்க்காக என்றால் சரியாக இருக்கும்…
9:05:45 PM <shrini> அதுவும் சரியே
9:05:52 PM <thangamani_arun> 🙂
9:06:26 PM ⇐ prnakkeeran quit: Page closed
9:07:05 PM <•Guest56975> நக்கீரன் ஐயா போயிட்டாரே?
9:07:09 PM <•Guest56975> ஹ்ம்ம்..
9:07:33 PM <thangamani_arun> இணைப்பு துண்டிப்புனு நினைக்கிறேன்
9:08:00 PM <•Guest56975> அப்படியிருந்தா நல்லதுதான்…
9:08:04 PM <•Guest56975> 🙂
9:08:24 PM <thangamani_arun> ஒ ஓ
9:08:30 PM <•Guest56975> எங்க நம்ம அழச்சவரைக் காணலையே!
9:09:09 PM <•Guest56975> இரவி வராறா?
9:09:10 PM <gurulenin> மாலை வணக்கம்..
9:09:16 PM <shrini> அவர் இன்று விடுமுறை
9:09:20 PM <•Guest56975> வணக்கம்.
9:09:25 PM <shrini> வணக்கம் இலெனின்
9:09:55 PM <shrini> அருண்
9:10:16 PM <shrini> Guest56975: தங்கள் பெயர் என்ன?
9:10:20 PM → prnakkeeran joined
9:10:26 PM <thangamani_arun> அனைவருக்கும் வணக்கம்
9:10:49 PM <thangamani_arun> @Guest56975 — இரவி
9:10:53 PM <thangamani_arun> ?
9:11:09 PM <prnakkeeran> vanakkam
9:11:21 PM <shrini> வணக்கம் ஐயா
9:11:54 PM <•Guest56975> இன்று அனானி.
9:12:44 PM <shrini> சரி
9:12:45 PM <prnakkeeran> tamil valarchikku seiyavendia panigal enna
9:13:29 PM <thangamani_arun> @Guest56975: எனக்கு தெரியும், மலேசியா நண்பருனு நினைக்கிறேன்
9:14:36 PM <shrini> அனானியாகவே இருக்கட்டுமே
9:14:51 PM <thangamani_arun> ம்ம்
9:14:57 PM <prnakkeeran> oru pattiyal thayaarippoma
9:14:59 PM <•Guest56975> தமிழ் வளர்ச்சி என்று பேசினால், நாம் குழுவாக என்ன செய்யலாம் என்றுபற்றிதான் பேச வேண்டி வரும். அது உத்தமம் போன்ற அமைப்புகளின் செயல்பாட்டில் போய் நிற்கலாம்…
9:15:44 PM <shrini> சென்ற மாத அமர்வில்
9:15:56 PM <shrini> peyar.in தளத்தை
9:16:00 PM <prnakkeeran> illai,enna thevai enbathai mudalil ariyavendum
9:16:21 PM <thangamani_arun> சீனி சொன்னபடி, அவரவர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என் கூறவும்
9:16:26 PM <shrini> மென்பொருளாக மாற்ற
9:16:37 PM <shrini> முயற்சி செய்கிறோம்
9:16:40 PM <thangamani_arun> *என
9:17:02 PM <prnakkeeran> athan pirage yar enna seiyya vendum enbathai theermanikkalam
9:17:06 PM <shrini>  https://build.phonegap.com/apps/1124758/share
9:17:20 PM <shrini> இங்கு பதிவிறக்கம் செய்யலாம்
9:17:32 PM <shrini> மெதுவாகவே வேலை செய்கிறது
9:17:40 PM <shrini> இன்னும் திருத்த வேண்டும்
9:17:43 PM <thangamani_arun> ஆண்ட்ராய்டு ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கா சீனீ
9:17:46 PM <thangamani_arun> ?
9:18:06 PM <shrini> ஆம்
9:18:15 PM <shrini> இணைப்பை பார்க்கவும்
9:19:05 PM → manikk joined
9:19:52 PM <thangamani_arun> பதிவிறக்கம் செய்துவிட்டேன்
9:19:56 PM <•Guest56975> இன்று தமிழகத்தில் உள்ள பல பல்கலைகளின் வலைத்தளங்களுக்குச் சென்று சில தகவல்களைத் தேட வேண்டியிருந்தது. எல்லாத் தளங்களும் ஆங்கிலத்திலேயே இருக்கக் கண்டேன். ஏன்?
9:20:20 PM <shrini> வருக மாணிக்கம்
9:20:39 PM <prnakkeeran> tva site is in tamil
9:20:45 PM <shrini> ஆம் Guest56975
9:21:07 PM → KishoreMR joined
9:21:21 PM <•Guest56975> அரசு பல்கலைகள்கூட ஆங்கில மொழியிலான தளங்களையே வைத்திருக்கின்றனர். இது அறியாமை. இன்னும்கூட 20ஆம் நூற்றாண்டில் இத்தளங்கள் வாழ்கின்றன.
9:21:23 PM <manikk> வணக்கம் தல
9:21:33 PM <shrini> அவற்றை தமிழில் மாற்ற அவர்களை கேட்க வேண்டும்
9:21:58 PM <•Guest56975> இதற்கு த.வ.க. ஒரு விதிவிலக்கு.
9:22:02 PM <thangamani_arun> இது அந்தந்த நிர்வாகம் உணர்ந்து செயல்படு வேண்டும்
9:22:42 PM <shrini> பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்கலாம்
9:23:30 PM <•Guest56975> தமிழ்நாட்டு மாணவர்களை மட்டும் நம்பியிருக்கும் பல்கலைகள் இதற்கு பொருத்தமானதாக இருக்கும்.
9:23:51 PM <shrini> Guest56975: நீங்கள் இந்த பணியை மேற்கொள்ள முடியுமா?
9:23:55 PM <thangamani_arun> கல்வி நிலையங்களே ஆர்வப்பட வேண்டும் இல்லையென்றால் இது மீண்டும் ஆங்கில வழியிலே மாற வாய்ப்புண்டு
9:24:09 PM <thangamani_arun> Guest56975: சரியே
9:24:19 PM <•Guest56975> ஒரு சில பல்கலைகள் தமிழில் தளங்களை அமைக்கத் தொடங்கிவிட்டால், காலப்போக்கில் பல முன் வரலாம்.
9:24:31 PM <shrini> ஆம்
9:24:53 PM <thangamani_arun> அதற்கான தேவையை உருவாக்க வேண்டும்
9:25:04 PM <thangamani_arun> எனவே நிலையான மாற்றம் உண்டாகும்
9:25:24 PM <shrini> குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தர ஒரு மென்பொருள் வேண்டும்
9:25:40 PM <•Guest56975> தமிழக அரசால் நடத்தப்படும் பல்கலைகளைக் கேட்க முடியுமா?
9:25:41 PM <thangamani_arun> இல்லையென்றால் இது ஒரு பயனற்ற செயல்திட்டமாகிவிடும்
9:25:41 PM <shrini> அருண் மாணிக்கம்
9:25:54 PM <shrini> செய்ய இயலுமா ?
9:26:05 PM <shrini> அணில்
9:26:14 PM <shrini> ஆடு
9:26:14 PM <shrini> இலை
9:26:28 PM <shrini> இவற்றின் படங்கள்
9:26:28 PM <shrini> ஒலிகள்
9:26:54 PM <shrini> சேர்க்க வேண்டும்
9:27:16 PM <shrini> html5
9:27:16 PM <shrini> கொண்டு செய்யலாமா?
9:27:16 PM <thangamani_arun> சீனி ஓசியார் திட்டத்திற்கா
9:27:37 PM <shrini> இல்லை
9:27:38 PM <manikk> haxe
9:27:49 PM <shrini> குழந்தைகள் தமிழ் கறக
9:27:51 PM <manikk> and openfl
9:28:08 PM <shrini> ஒரு பள்ளி ஆசிரியர் கேட்டுருக்கிறார்
9:28:27 PM <manikk> செய்யலாம் தல
9:28:40 PM <shrini> இணைய தளமாகவும்
9:29:03 PM <shrini> zip கோப்பாகவும் தரலாம்
9:29:04 PM <manikk> haxe and openfl மூலமாக செய்யலாம்
9:29:06 PM <prnakkeeran> tva kalvi thittangalai paarungal.enna maatram seiyalam enru kurungal
9:29:44 PM <shrini> ஆம். த.இ.க தளத்தை மாதிரியாகக் கொள்ளலாம்
9:30:10 PM <manikk> த.இ.க?
9:30:14 PM <shrini> manikk: தாங்கள் இதை வழிநடத்துமாறு வேண்டுகிறேன்
9:30:39 PM <shrini> தமிழ் இணையக் கல்விக் கழகம்
9:31:08 PM <shrini> வணக்கம் KishoreMR
9:31:55 PM <shrini> Guest56975: பல்கலைக்கழகங்களுக்கு மடல் அனுப்பும் பணியை தாங்கள் செய்ய இயலுமா ?
9:32:48 PM <KishoreMR> வணக்கம்!
9:33:15 PM <shrini> gurulenin: வரைகலையில் ஏதேனும் செய்யலாமா?
9:33:35 PM <prnakkeeran> thamizh kalvi,min noolagam.tamil software development,tamil computing enra panigalai tva seithukondirukkirathu
9:33:39 PM <shrini> தமிழில் நிறைய meme
9:34:12 PM <gurulenin> வரைகலையில் எந்த மாதிரி ?
9:34:37 PM <shrini> தற்போது நிறைய குட்டி குட்டி படங்கள்
9:35:07 PM <shrini> ஆங்கில எழுத்துகளில் தமிழ் வார்த்தைகளை எழுதி வருகின்றன
9:35:29 PM <shrini> அதே போல் தமிழில் நிறைய உருவாக்கி உலாவ விடலாம்
9:36:10 PM <gurulenin> முயற்சிக்கலாம்..
9:36:27 PM <shrini> prnakkeeran: ஐயா. தமிழில் உள்ள வேர்ச்சொற்கள் தொகுப்பு கிடைக்குமா?
9:36:33 PM <manikk> தல குட்டி படங்கள்னா? எந்த மாதிரி சொல்லுரீங்க?
9:37:14 PM <shrini> Tamil meme என்று தேடுக
9:37:14 PM <thangamani_arun> அரட்டை செயலிகளில் உள்ள மாதிரி சில படங்கள்
9:37:20 PM <prnakkeeran> tva sol pirappu agara mudaliyai parungal
9:37:22 PM <shrini> ஆம்
9:38:48 PM <shrini> prnakkeeran: பார்க்கிறேன்
9:39:15 PM <shrini> ஒரு தமிழாசிரியரிடம் பேசினேன்
9:39:44 PM <shrini> தற்கால உரைநடைக்கு corpus
9:40:00 PM <shrini> செய்ய வேண்டினேன்
9:40:36 PM <shrini> சக ஆசிரியருடன் இணைந்து செய்வதாக உறுதி அளித்தார்
9:41:14 PM <shrini> சென்னையில் ஓரிரு நாள் பட்டறை நடத்தலாம்
9:42:00 PM <shrini> corpus-Sathia.rhcloud.com
9:42:23 PM <shrini> இங்கு அதற்கு ஒரு மென்பொருள் உருவாக்கி வருகிறோம்
9:42:41 PM <shrini> பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்
9:45:35 PM <prnakkeeran> sanga ilakkiya corpus onru uruvakka muyandrikondirukkirom
9:46:01 PM •Guest56975 was voiced (+v) by •Guest56975
9:46:45 PM <shrini> ஆம். அதேபோல் தற்கால உரைநடைக்கும் corpus தேவை
9:46:47 PM <shrini> இன்னும் 15 நிமிடங்களே உள்ளன
9:47:03 PM <prnakkeeran> source code-um kodutthirukkirom
9:47:25 PM <shrini> thangamani_arun: நீங்கள் செய்து வரும் பணிகள் பற்றி கூறுக .
9:47:27 PM <•Guest56975> prnakkeeran – தமிழ் மென்பொருள் உருவாக்குவதாகச் சொன்னீர்களே … அவை என்ன?
9:49:01 PM <shrini> பணிகளை பட்டியலிடலாமா?
9:49:18 PM <shrini> peyar.in செயலி – சீனீ
9:49:23 PM ⇐ manikk quit
9:49:42 PM <shrini> 2. corpus மென்பொருள் – சீனி
9:50:04 PM <shrini> 3. meme உருவாக்கம் – gurulenin
9:50:47 PM <prnakkeeran> tamil ocr,text to voice voice to text,translation
9:51:00 PM <shrini> 4. தமிழ் கற்க மென்பொருள் – thangamani_arun மாணிக்கம்
9:51:34 PM <•Guest56975> அவரவர் ஆங்காங்கு செய்து வரும் பணிகளை ஒரு பட்டியலாகத் தயாரித்து அருண் சில காலத்திற்கு முன்னர் தந்தார் அல்லவா?
9:51:49 PM <shrini> 5. பல்கலைக்கழக தளங்களை தமிழில் வெளியிட மடல் அனுப்புதல்
9:52:17 PM <shrini> Guest56975: மடல் அனுப்ப இயலுமா?
9:52:27 PM <•Guest56975> இயலாது 😦
9:52:46 PM <shrini> ஆம். அருண் பட்டியல் தயாரித்தார்
9:52:46 PM <shrini> அதை மேம்படுத்த வேண்டும்
9:53:14 PM <shrini> thangamani_arun: பட்டியலை மேம்படுத்த வேண்டுகிறேன்
9:53:26 PM <shrini> Guest56975: சரி.
9:53:52 PM <•Guest56975> மடல் அனுப்பினால் மட்டும் போதாது என்று நினைக்கிறேன். அவர்களோடு பேசிப் பார்க்க வேண்டும். ஏன் இன்னும் ஆங்கிலத்தில் தருகின்றனர் என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
9:54:09 PM <shrini> prnakkeeran: வேர்ச்சொல் பட்டியல் பற்றி தங்கள் தளத்தில் பார்க்கிறேன்
9:54:42 PM <shrini> அங்கு இல்லையெனில் பட்டியல் தயாரிக்க உதவ இயலுமா?
9:55:11 PM <prnakkeeran> aarvamullavargal thangal karuthukalai pathivu seiyya oru thalam erpadutha mudiyuma?
9:55:13 PM <shrini> Guest56975: ஆங்கிலத்தில் தரட்டும்
9:55:27 PM <shrini> தமிழிலும் தர கேட்க வேண்டும்
9:55:52 PM <shrini> prnakkeeran: செய்யலாம்
9:56:27 PM <shrini> prnakkeeran: தேவை பற்றி விரிவாக தனிமடல் எழுதவும்
9:56:40 PM <shrini> இன்னும் சில நிமிடங்களே உள்ளன
9:57:10 PM <shrini> இங்கு பட்டியலிட்ட பணிகளை செய்து
9:57:13 PM <shrini> அடுத்த மாதம்
9:57:31 PM <shrini> வளர்ச்சி பற்றி விவாதிக்கலாம்
9:57:55 PM <prnakkeeran> antha thalathil,thevaikalai kuralam,thangal panigalai pagiralaam
9:57:56 PM <•Guest56975> prnakkeeran – த.இ.க. தற்போது மேம்படுத்தி வரும் மென்பொருட்களின் பட்டியலையும் அவற்றிற்கான வலைத்தளங்களையும் உங்கள் தளத்தில் தந்தால் சிறப்பாக இருக்கும்.
9:58:58 PM <prnakkeeran> Tharugirom
9:58:58 PM <shrini> அனைவருக்கும் நன்றி
9:59:03 PM <•Guest56975> எ-டு – சொர்ஸ்போர்ஜ்
9:59:11 PM <KishoreMR> we can use change.org to create petition for tamil interface in university website and make people sign the petition which in turn send mails to all vice-chancellors or persons concerned.
9:59:15 PM <prnakkeeran> nanri
9:59:32 PM ⇐ gurulenin quit
9:59:48 PM <shrini> ஒவ்வொரு மாதமும் 16ம் தேதி இரவு 9-10 இங்கு சந்திப்போம்
10:00:22 PM <shrini> KishoreMR: நல்ல யோசனை
10:00:33 PM <•Guest56975> அவ்வாறு தருவதால், ஆர்வலர்கள் அத்திட்டங்களில் இணைந்துகொள்ளலாம்; கருத்துப் பரிமாறிக்கொள்ளலாம்; தேவையற்ற ‘டுப்லிகேஷனையும்’ தவிர்க்கலாம்.
10:00:45 PM ⇐ prnakkeeran quit
10:00:59 PM <•Guest56975> சந்திப்போம்.
10:01:16 PM ⇐ •Guest56975 quit
10:01:19 PM <shrini> நன்றி அனானி Guest56975
10:01:55 PM <shrini> நன்றி thangamani_arun KishoreMR
10:02:10 PM <KishoreMR> நன்றி

கடந்த கால உரையாடல்கள்:

செப்டம்பர் 16 உரையாடல்

செப்டம்பர் 16 உரையாடல்

[21:00] <+ravishankar> வணக்கம் சண்முகம், சாம் விசய், மணிவண்ணன்
[21:01] <+ravishankar> பாலா, சிவா, சாந்தக்குமார்
[21:01] <+ravishankar> இது எந்த சிவா 🙂
[21:01] <+ravishankar> இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்கு வரவேற்கிறேன் 🙂
[21:01] வணக்கம் 🙂
[21:01] வணக்கம் நண்பர்களே…
[21:02] == samvijay has quit [Quit: Page closed]
[21:02] <+ravishankar> முதலில், இந்த உரையாடலின் நோக்கத்தைச் சொல்லி விடுகிறேன்.
[21:02] <+ravishankar> தமிழ் மொழி வளர வேண்டும் என்று பலர் உழைக்கிறார்கள். இவர்களிடையே ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாமல், என்ன செய்கிறார்கள் என்று மற்றவர் அறியாமல் இருக்கிறார்கள். அதே வேளை, தமிழ் ஆர்வம் உடைய பலருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைக்கும் பாலமாக ஓர் உரையாடலை முன்னெடுக்க விரும்புகிறேன். இது தங்கள் எண்ணங்கள், செயற்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு தொடர்ந்து தங்கள் முன்னேற்றங்களை அறியத் தரும் வளர்முகக் களமாக இருக்கும்.
[21:02] <+ravishankar> ஓரிரு நாள் முன்பு தமிழ் வளர்ச்சி தொடர்பாக முகநூலில் ஒரு குழு உரையாடல் ஓடியது. அதன் தொடர்ச்சியாகவே இந்த உரையாடல்
[21:02] == gurulenin has joined #tamilirc
[21:03] <+ravishankar> இன்று சரியாக 9 தொடங்கி 10 மணி வரை உரையாடுவோம். மாதம் ஒரு நாள் இப்படிக் கூடலாம். இதே 16ஆம் தேதி கூடலாம். அல்லது இரண்டாவது, மூன்றாவது சனி இப்படி ஏதாவது ஒரு நாள்
[21:03] 😐
[21:03] <+ravishankar> உங்கள் கருத்து என்ன?
[21:03] == mayu has joined #tamilirc
[21:03] <+ravishankar> வெவ்வேறு நேர வலயங்களில் இருப்பவர்கள் வசதிக்காக ஒரு சில மாதங்கள் காலை வேளையிலும் கூடலாம்
[21:03] வணக்கம்.
[21:04] == shrini has joined #tamilirc
[21:04] இத்தகைய உரையாடலை ஆவணப்படுத்துவோம்.
[21:04] ஸ்ரீனி
[21:04] <+ravishankar> ஆம், குறிப்பிட்ட ஒரு மணி நேர உரையாடலை மட்டும் படியெடுத்து வலையில் ஓர் இடத்தில் ஆவணப்படுத்துவோம். வெளிப்படைத்தன்மை, வரலாற்றில் இருந்து கற்றல் ஆகியவை அவசியம்.
[21:05] <+ravishankar> ஒவ்வொரு மாதமும் கூடும் இலினக்சு பயனர் குழுமங்கள் போல் இது தொடர்ந்து பல ஆண்டுகள் செல்ல வேண்டும் என்பதே கனா 🙂 தலைவர், செயலாளர், பதவிகள், அமைப்பு இல்லாத மெய்நிகர் கூடல் 🙂
[21:06] <+ravishankar> ஒவ்வொருவரும் நாளைய தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்கிறோம் என்று பகிர்ந்து கொள்ளலாம். உதவிகள் தேவைப்படின் கோரலாம். பயனுள்ள தகவலைப் பரிமாறலாம்.
[21:06] தொடர்ந்து செயல்படுவோம். எத்தகைய முடிவை எட்டப் போகிறோம் எம்மாதிரி செயல்பட வேண்டும் போன்றவற்றைப் பேசலாம்.
[21:06] <+ravishankar> எடுத்துக்காட்டுக்கு, தமிழ் வளர்ச்சி என்றால் தமிழ் வழிக் கல்வி என்பது தவிர்க்க முடியாத ஒரு புலம். ஆனால், பலரும் குடும்பச் சூழல், வாழிடம் காரணமாக தங்கள் பிள்ளைகளைத் தமிழ் வழியில் சேர்க்க முடியாது என்று மயங்குகிறார்கள்.
[21:07] <+ravishankar> ஆனால், இவர்களும் தமிழ் வழிக் கல்விக்கு உதவ முடியும். தமிழ் வழிப் பிள்ளைகளுக்கான செயலிகள், நூல்கள் முதலியவற்றை உருவாக்கி உதவ முடியும்.
[21:07] <+ravishankar> இது போன்று பரந்துபட்ட, hub and spoke மாதிரிகளை உருவாக்க வேண்டும்.
[21:08] <+ravishankar> அதே போல் பொத்தாம் பொதுவாக பேசிக் கலையாமல் ஏதேனும் ஒரு சிறு பணியைப் பொறுப்பேற்று அடுத்த கூடலில் என்ன முன்னேற்றம் என்று இற்றைப்படுத்தலாம்
[21:08] வணக்கம்
[21:08] ஏற்கனவே இதுபோன்ற கற்றல் செயலிகள் தமிழில் இருக்கிறதா இரவி?
[21:08] == jophine has joined #tamilirc
[21:09] வணிக முறையில் அமைக்கப்பட்ட சில ஐபாட் செயலிகளைக் கண்டிருக்கின்றேன்
[21:09] == senni has joined #tamilirc
[21:10] <+ravishankar> வணக்கம் சாம் விசய், சீனி.
[21:10] <+ravishankar> கற்றல் செயலிகள் நிறைய உள்ளன. என் மகளுக்கு ஆண்டிராய்டு, ஐபேடில் போட்டுத் தந்துள்ளேன்
[21:11] <+ravishankar> இதையே கூட ஒரு பக்கத்தில் ஆவணப்படுத்தலாம். பயனுள்ள 10 தமிழ் கற்றல் செயலிகள் என்பது போன்று. செய்வோம்.
[21:11] <+ravishankar> இலவச செயலிகளே நிறைய கிடைக்கின்றன
[21:11] அவற்றைப் பற்றிப் பதிய வேண்டும்
[21:11] <+ravishankar> ஒன்றாம் வகுப்பு படிக்கும் அக்கா மகனுக்கு இவற்றைப் பயன்படுத்திய பிறகு தமிழ் பாடத்தில் நல்ல முன்னேற்றம்
[21:11] வணக்கம்
[21:11] அமெரிக்காவில் மலிவு விலையில் கல்வி குப்புசாமி என்பவர் நிறைய செயலிகளை உருவாக்கிக் கொண்டிருந்தார். யாரும் வாங்காததால் முடங்கி விட்டது.
[21:12] ஓ
[21:12] தமிழ் என்றாலே இலவசம் என்ற கருத்தும் மாறவேண்டும்.
[21:12] எனது மகளுக்கும் ஐபேடில் போட்டுத் தந்துள்ளேன். ஆனால் சமீபகாலங்களில் எதையும் பார்க்கவில்லை நான்.
[21:12] என்ன மாதிரி மென்பொருள் வேண்டும்
[21:12] தமிழில் சந்தைகள் உருவாகாமல் தமிழ் சோறு போடாது.
[21:12] == Dineshkumar has joined #tamilirc
[21:12] என்று பட்டியலிட்டால்
[21:13] கட்டற்ற மென்பொருட்களாக உருவாக்கலாம்
[21:13] == esakkiraj has joined #tamilirc
[21:13] ஆங்கில இலக்கணம் கற்க பல செயலிகள் இலவசமாகவும் விலைக்குறிப்போடும் கிடைக்கின்றன. அது போல தமிழ் இலக்கணம் எளிமையாகக் கற்க செயலிகள் உருவாக்கப்பட்ட வேண்டும்
[21:13] தமிழ் சோறு போடவில்லையென்றால் தமிழில் ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழும்.
[21:13] பொதுவாக இந்தச் செயலிகள் என்ன செயற்பாடுகளைக் கொண்டிருக்கின்றன?
[21:13] <+ravishankar> சீனி, நிறைய விளையாட்டுகள் தமிழ் இடைமுகப்புடன் வேண்டும்
[21:13] கட்டற்ற மென்பொருள்கள் சந்தையின் ஒரு பகுதி மட்டுமே.
[21:13] நான் அறிய எழுதுதல் உச்சரிப்பு அடக்கம்
[21:13] <+ravishankar> உடனே பல்லாங்குழி போன்று தமிழர் விளையாட்டு தான் என்றில்லை. உலகம் முழுக்க பித்துப் பிடிக்கிற angry birds மாதிரி விளையாட்டுகளைத் தமிழ் இடைமுகப்புடன் உருவாக்கினால்
[21:13] என்னென்ன விளையாட்டுகள்?
[21:14] <+ravishankar> தமிழருக்கு வணிகமும் ஆச்சு, தமிழுக்குப் பயன்பாடும் ஆச்சு
[21:14] முழு தேவைகளை விளக்கி பட்டியலிட்டால்
[21:14] சில யூடியூப் வீடியோக்கள் மற்றும் ஐடியூன்ஸில் சில விளையாட்டுகள் கற்றல் தொடர்பாக சில மட்டுமே நான் அறிந்தது. விளையாட்டுகள் தமிழில் மிகச் சரியான உச்சரிப்போடு குழà®
[21:14] கட்டற்ற மென்பொருட்களாகவோ
[21:14] விலைக்கோ
[21:14] உருவாக்க முடியும்
[21:15] ரஜினி படத்தோடு முத்து போன்ற படத்தின் அடிப்படையில் விளையாட்டுகளைத் தமிழ் இடைமுகத்தோடு செய்தால் ஜப்பானிலும் விற்கலாம்.
[21:15] <+ravishankar> ஆம், தேவை உள்ளது. எப்படி உருவானாலும் சரி
[21:15] கட்டற்ற மென்பொருளெனில் பரவலாகச் சேரும்.
[21:15] == thamiziniyan has joined #tamilirc
[21:15] <+ravishankar> வருக தமிழினியன்
[21:15] நன்றி
[21:15] <+ravishankar> இசக்கிராசு, குரு இலெனின்
[21:16] ஆண்ட்ராய்டில் தமிழ் விக்கிப்பீடியா/விக்கிமேற்கோள் ஆகியவற்றில் பங்களிக்க எதாச்சும் செயலிகள் இருக்கின்றனவா?
[21:16] சங்கப்பாடல்களை படக்கதையாக செய்தால் மாடு மேய்க்கிற மாதிரியும் ஆச்சு மச்சானுக்குப் பெண்ணு பார்க்கிற மாதிரியும் ஆச்சு. குறிப்பாய் தமிழர் தொன்மை பேசும் பாடல்கள்.
[21:17] == siva has quit [Quit: Page closed]
[21:17] விக்கி காமன்ஸ் இருக்கிறது. நான் பயன்படுத்துகிறேன். தமிழ் தொடர்பாய் தெரியவில்லை.
[21:17] <+ravishankar> விக்கிப்பீடியாவுக்கான பொதுவான ஆண்டிராய்டு, ios செயலி உள்ளது.
[21:17] <+ravishankar> அதில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தாவி தொகுக்கலாம்.
[21:18] <+ravishankar> சிறு தொகுப்புகள் செய்ய எளிமையான இடைமுகப்பு உண்டு.
[21:18] <+ravishankar> https://www.youtube.com/watch?v=F3xBP9Smfdw&list=PLdHjGnZiGV2Xb6VRNss1CsDgBUz6j452S பார்த்தீர்களா?
[21:18] <+ravishankar> எழுத்தாளர் சொக்கன் தன் மகளுக்கு இந்திய விடுதலைப் போரைப் பற்றித் தமிழில் விளக்குகிறார்
[21:18] <+ravishankar> khan academy போல இத்தகைய ஆக்கங்களை தமிழிலும் தரலாம்
[21:19] <+ravishankar> பாலா, சங்கப்பாடல்கள் தொடர்பாக.. உண்மையில் தமிழார்வத்தில் புகும் பலர் இவ்வாறு தமிழர் ஆர்வப் புலங்களில் தான் செயற்படுகின்றனர்.
[21:19] இப்போது தான் பார்க்கிறேன். நல்ல முயற்சி இரவி.
[21:20] <+ravishankar> என்னுடைய ஆசை என்னவென்றால், தமிழ் ஒரு இடைமுக மொழியாக இருக்கிறதே என்பதே உறுத்தாமல் எல்லா அறிவும் தமிழ் வழியாகப் பெற வேண்டும்
[21:20] ஆம். பல வகை mindmap வேண்டும்
[21:20] == ninju has joined #tamilirc
[21:20] khan academy போல இத்தகைய ஆக்கங்களை தமிழிலும் தரலாம் !
[21:21] வணக்கம். தாமதத்திற்கு மன்னிக்கவும்
[21:22] <+ravishankar> ஆண்டிராய்டு ஒன் போன்ற மலிவு விலைக் கருவிகள் வருகை கடைக்கோடி மனிதன் வரை நுட்பத்தைக் கொண்டு சேர்க்கும். அவர்கள் அன்றாடத் தேவைக்கான செயலிகள், அறிவு மூலங்களை உருவாக்க வேண்டும்
[21:22] khan academy தமிழிலும் மொழிபெயர்த்து வருகிறார்கள்.
[21:22] <+ravishankar> எடுத்துக்காட்டுக்கு, என் மாமா விக்சனரி பக்கமே வராதவர். ஆனால், அவரது செல்பேசியில் விக்சனரி செயலியை வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்
[21:22] <+ravishankar> khan academy தமிழில் வருவது நல்ல செய்தி
[21:22] <+ravishankar> வணக்கம் நிஞ்சு
[21:23] இன்று தான் விக்சனரியைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறேன்.
[21:23] <+ravishankar> சீனி, mindmap விசயத்தைக் குறித்துக் கொள்வோம். நிச்சயம் இதனைச் செய்ய வேண்டும்.
[21:23] இரவி விக்சனரி செயலிக்குத் தொடுப்புத் தர முடியுமா?
[21:23] அதிக அளவு தமிழ்ச் செயலிகளை உருவாக்க வேண்டும் என்கிறீர்கள். யாரைக் குறிவைத்து இரவி? தெளிவாகச் சொன்னால் மேற்கொண்டு இன்னும் குறிப்பாய் உரையாடலாம்.
[21:23] வணக்கம் ரவி.
[21:24] விக்கிப்பீடியா செயலியில் இருந்து விக்கிமேற்கோளில் தொகுப்புகளைச் செய்ய முடியவில்லை. அதற்கும் ஏதேனும் குறுக்கு வழி இருக்கா?
[21:24] தமிழ் கூறும் இளைய உலகத்தை குறி வைத்து உருவாக்க வேண்டும்.
[21:25] <+ravishankar> மயூ, விக்சனரி செயலிக்கான இணைப்பு – https://play.google.com/store/apps/details?id=com.sathish.TamilWiki
[21:25] <+ravishankar> இணையம் இருந்தால் தான் வேலை செய்யும். அலுவல் முறை சாரா செயலி.
[21:25] babycenter.com போல தமிழில் ஒரு தளம் வேண்டும்
[21:26] நன்றி இரவி
[21:26] <+ravishankar> பாலா, குறிப்பாக யாரைக் குறி வைத்தும் என்றில்லை. தமிழை மட்டுமே வைத்துச் செயற்படக்கூடிய சாமானியர்களின் அன்றாடத் தேவைகள் என்ன என்று இனங்கண்டு அதற்கு முன்னுரிமை தரலாம்
[21:26] <+ravishankar> ஏன் எனில் ஆங்கிலமும் நன்றாக அறிந்தும் தமிழ் பக்கம் போகிறவர்கள் நம்மைப் போல் சிலர் தான் 😦
[21:26] == senni [Quit: Page closed]
[21:27] ஓ.. சரி.
[21:27] <+ravishankar> கண்டிப்பாக சீனி. http://hwgo.com/intl/ta/index.html தளம் மகளிரின் வழமையான (stereotype என்றாலும்) தேவைகளில் இருந்து தொடங்குகிறது
[21:28] சாமானியர்களின் தேவை என்னென்ன?
[21:28] இரவி என்ன மாதிரியான செயலிகள் தேவையென்று பட்டியல் போட முடியுமானால் தன்னார்வல செயலி வடிவமைப்பாளர்களை கேட்டுப்பார்க்க முடியும்.
[21:28] <+ravishankar> ஆங்கிலம் – தமிழ் அகராதி நிச்சயம் ஒரு சாமானியனின் தேவை
[21:28] குறிப்பாக அண்மையில் விவசாயிகளுக்கான செயலி ஒன்றை தயாரித்தார்
[21:28] அது போல
[21:28] <+ravishankar> அதற்கு உருப்படியான செயலி இல்லை. விக்சனரிக்கு அலுவல் முறை செயலி கொண்டு வர விக்கிமீடியா மூலம் முனையலாம்
[21:29] <+ravishankar> சீனி சுட்டிக்காட்டிய மகப்பேறு நலத் தகவலும் ஒரு சாமானியரின் தேவை தான்.
[21:30] <+ravishankar> எங்கள் இரு பிள்ளைகளையும் பெற்ற போது நாங்கள் babycentreஏ குடியாக கிடந்தோம். சில வேளை மருத்துவர் கூட இவ்வளவு இணையம் மேயாதீர்கள் என்று திட்டினார் 🙂
[21:30] <+ravishankar> தரமான இத்தகைய தகவல் தமிழில் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும்.
[21:30] <+ravishankar> உழவுத் தகவலும் இவ்வாறே
[21:30] தமிழ் சார்ந்த செயலிகளை விரிவான விளக்கங்களுடன் பட்டியலிட வேண்டும்
[21:30] பொதுவாகத் தமிழில் எத்தகைய செயலிகளை சாமானிய மக்கள் எதிர் நோக்குகின்றனர் என்கிற தரவுகள் உண்டா. உண்டெனில் அதன் வரிசைப்படி முக்கியத்துவம் கொடுப்பது நலம்.
[21:30] தமிழில் நல்ல பெயர்கள் சொல்லும் கைப்பேசி செயலியைத் தயாரித்தால் என்ன?
[21:30] <+ravishankar> இப்போதைக்கு நினைவுக்கு வரும் விவரங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அடுத்தடுத்த கூடல்களில் குறித்த விசயம் பற்றி விரிவாகப் பேசுவோம்.
[21:31] யாராவது பட்டியலிட உதவ முடியுமா?
[21:31] <+ravishankar> http://www.peyar.in/
[21:31] நல்ல தமிழ்ப்பெயர்கள் வைக்க வேண்டும் என்று பலர் இப்போது விரும்புகிறார்கள்.
[21:31] <+ravishankar> இது நானும் நண்பன் கார்த்திக்கும் உருவாக்கிய தளம்
[21:32] <+ravishankar> ஆனால், இத்தளத்தை இற்றைப்படுத்த வேண்டும். காலாவதியான பெயர்களை விட்டு இக்காலத்துக்கு ஏற்ற top 10, popular 10 போன்ற பெயர்களை எடுப்பாக காட்ட வேண்டும்,
[21:32] <+ravishankar> கவின், முகில் என்று பலரும் விரும்பி வைக்கும் பெயர்களை முன்னிலைப்படுத்த வேண்டும்
[21:32] <+ravishankar> தற்போது ஒவ்வொரு நாளும் என் வலைத்தளத்துக்கு நல்ல தமிழ் பெயர் சொல்லுங்கள் என்று கேட்டு ஆட்கள் வருகிறார்கள்
[21:33] <+ravishankar> சீனி, இந்த உரையாடலை படி எடுத்து ஒரு இடத்தில் போட்டு பணிகளைப் பிரித்துக் கொண்டு அடுத்த கூடலில் முன்னேற்றத்தை அலசுவோம்.
[21:33] <+ravishankar> இன்னொன்று நான் கவனித்தது… மக்கள் நேரடியாக இணையத்தில் இருந்து செயலிகளைப் பதிவிறக்குவதை விட, தங்கள் நண்பர்களின் செயலிகளை அப்படியே அவர்களிடம் இருந்து படி எடுத்துக் கொள்கிறார்கள்
[21:33] ம்
[21:33] ஆமாம். இந்த வழக்கம் தற்போது பல பெற்றோர்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. அதை மையமாகக் கொண்டு ஒரு செயலி உருவாக்கினால் நன்றாக இருக்கும்.
[21:33] இத்தகைய தளங்களுக்கு எவ்வளவுபேர் வருகிறார்கள்? எங்கிருந்து வருகிறார்கள்?
[21:33] <+ravishankar> எனவே, அதிகம் இணையம் தேவைப்படாதவாறும் செயலிகள் இருக்க வேண்டும்,
[21:34] தமிழ் பெயர்கள் தொடர்பான செயலிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் எனத் தோன்றுகிறது.
[21:34] <+ravishankar> எந்தத் தளத்தைக் கேட்கிறீர்கள் மணிவண்ணன்
[21:34] ஒவ்வொருவரும் ஒரு பணியை செய்வதாக அறிவிக்கலாம்.
[21:34] <+ravishankar> என் தளத்துக்கு வருபவர்களின் தரவுகளில் இருந்து tamil baby names என்பது அதிகம் தேடப்படும் ஒரு சொல்.
[21:35] பெயர் மற்றும் தமிழ்ச் செயலிகள் தளங்கள்
[21:35] <+ravishankar> ஆனால், உருப்படியாய் வழி காட்ட தளம் இல்லை. வடமொழிப் பெயர்களையும் சேர்த்து தமிழ் பெயராக பரிந்துரைக்கும் தளங்களே நிறைய
[21:35] அடுத்த சந்திப்பில் பணிகளின் நிலையை பேசலாம்
[21:35] == pattapeyar has joined #tamilirc
[21:35] இரவி ‘ட்வீட்டர்’ மாதிரி தட்டச்சிடுங்கள். அடிக்கடி உங்கள் வாக்கியத்தின் வாலைக் காணவில்லை. 🙂
[21:35] <+ravishankar> தமிழ் செயலிகளுக்கான வரவேற்பை கூகுள் play store தரவுகளைப் பார்த்தால் தெரியும்,
[21:36] <+ravishankar> மொக்கையான செயலிகள் கூட ஆயிரக்கணக்கில் நிறுவப்பட்டுள்ளன
[21:36] <+ravishankar> காசு கேட்டால் பக்கம் வர மாட்டார்கள் என்பது வேறு செய்தி 🙂
[21:36] 🙂
[21:36] தமிழை ஊடுமொழியாகக் கொண்டு சில விளையாட்டுகளைத் தயாரிக்க வேண்டும். டெம்பிள் ரன், காண்டி கிரஷ் போல
[21:36] <+ravishankar> ஓ.. சிறிய சொற்றொடர்களாக எழுதுகிறேன்
[21:36] <+ravishankar> சரியாகச் சொன்னீர்கள் நிஞ்சு
[21:37] ஆமாம் இந்திய சந்தையைப் பொறுத்தவரையில் பணம் கொடுத்து வாங்கும் செயலிகளை யாரும் நிறுவுவதில்லை
[21:37] <+ravishankar> வாங்க பட்டப்பெயர், jophine
[21:37] இலவச செயலிகளை நிறுவி சாதனை புரிகின்றார்கள்
[21:37] நீங்கள் http://www.peyar.in/ தளத்தை செயலியாக மாற்றி கூகுள் play store இல் வெளியிடலாமே அடுத்த சந்திப்புக்குள். இந்த கூடிப்பேசும் முயற்சிக்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டுமே
[21:37] குழந்தைகளுக்குப் புதிய, வேறுபட்ட முறையில் தமிழைச் சொல்லிக்கொடுக்கும் செயலிகளை உருவாக்கலாம்.
[21:37] விளம்பரம் போடுவதே தமிழ் செயலி மூலம் பணம் செய்ய வழி
[21:37] <+ravishankar> யாராவது செயலி செய்ய உதவினால் தரவுத்தளத்தைத் தருகிறோம்
[21:37] வணக்கம்
[21:37] <+ravishankar> அத்தளம் திறந்த ஆக்க முயற்சி தான்
[21:38] செயலிகள் செய்வோரை நான் பிடித்து தருகிறேன்
[21:38] துவக்கம் என்று சொல்வது தவறு. தொடக்கம் என்பதே சரி. துவக் என்றால் என்று தான் பொருள்.
[21:38] நாம் முயற்சி செய்து பார்க்கலாம்.
[21:38] பட்டியலும் விளக்கமும் வேண்டும்
[21:38] sorry
[21:38] துவக்கம் என்று சொல்வது தவறு. தொடக்கம் என்பதே சரி. துவக் என்றால் “To touch” என்று தான் பொருள்.
[21:38] இனி துவக்கத்தை தொடக்கம் என்று எழுதத் தொடங்கிவிடுகிறேன்
[21:38] 🙂 🙂
[21:39] குழந்தைகளுக்குப் புதிய, வேறுபட்ட முறையில் தமிழைச் சொல்லிக்கொடுக்கும் செயலிகளை உருவாக்கலாம்.
[21:39] <+ravishankar> நன்றி சீனி.
[21:39] பெரும்பாலான இலவசச் செயலிகள் விளம்பரங்களை நம்பியிருக்கின்றன. நம்மை உளவு பார்க்கின்றன.
[21:39] <+ravishankar> இது வேறயா? 🙂
[21:40] என்ன உளவு?
[21:40] <+ravishankar> செயலிகள் செய்ய போட்டிகள் கூட நடத்தலாம். ஆனால், புரவலர்கள் தேவை. பிற்காலத்தில் பார்க்கலாம். google summer of code மாதிரி தமிழுக்கு என்று கோடைக்கால போட்டி
[21:40] பன்னாட்டு உளவு நிறுவனங்கள் இலவச விளையாட்டுச் செயலிகளைப் பரப்புகின்றன.
[21:40] <+ravishankar> சுவற்றில் எறியும் பந்துகளைப் போல யோசனைகளை விட்டு எறிவோம் 🙂 யாராவது பிடித்து முன் தொடர்வார்கள் என்ற நம்பிக்கையில் 🙂
[21:41] <+ravishankar> என் அனுபவத்தில் பல திட்டங்கள் இவ்வாறு விளையாட்டாக பேசி தொடங்கியவை தாம்
[21:41] இன்னும் 20 நிமிடம் இருக்கிறது. அடுத்த கூடலுக்கு முன் நாம் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட முடியுமா இரவி. நண்பர்களும் அது தொடர்பாய் கருத்துச் சொல்லலாம்.
[21:41] நிறைய நிரலாளர்கள் ஆர்வமாக உள்ளனர்
[21:41] <+ravishankar> 1. mind map. இதனைத் தொடர்ந்து இற்றைப்படுத்தி வரலாம்.
[21:41] <+ravishankar> 2. ஏற்கனவே கிடைக்கும் நல்ல தமிழ் செயலிகள் பட்டியல்
[21:41] <+ravishankar> 3. peyar.in தளத்தைச் செயலியாக தர முனைதல்
[21:41] என்ன செய்ய வேண்டும் என்று சொல்லத்தான் ஆள் இல்லை.
[21:42] நாம் பட்டியலிட்டால்
[21:42] போதும்
[21:42] சுவற்றில் அல்ல ரவி. சுவரில்
[21:42] <+ravishankar> சரி, சுவரில் 🙂
[21:42] சொல் விளையாட்டுகளும் தமிழில் தேவை
[21:42] ரவி அல்ல. இரவி 🙂
[21:42] Hangman, crossword puzzle போன்றவை
[21:42] இன்னொரு முக்கியமான செய்தி.
[21:43] <+ravishankar> 4. babycentre, உழவர் தகவல் போல் சாமானியர்களுக்கு அதிகம் அன்றாடம் தேவைப்படும் அறிவுப் புலங்களை இனங்காணல்
[21:43] புதியனவற்றுக்கு எந்தளவுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டுமோ அதே அளவு பழமைக்கும் முன்னுரிமை தரப்பட வேண்டும்.
[21:43] <+ravishankar> 5. khan academy தமிழில் கிடைப்பது நல்ல செய்தி. TED கூட இவ்வாறு கிடைக்கிறது. இது போல் என்னென்ன முக்கியமான தளங்கள் தமிழில் கிடைக்கின்றன என்ற பட்டியல் உருவாக்க வேண்டும்
[21:44] peyar.in தளத்தைச் செயலியாக மாற்ற என்ன மாதிரி முன்னெடுக்க வேண்டும். யார் செய்வது?
[21:44] <+ravishankar> இப்போதைக்கு இந்த 5 பணிகள் போதும் என்று நினைக்கிறேன் 🙂
[21:44] <+ravishankar> அதற்குச் சீனி ஆள் பிடித்துத் தருகிறேன் என்றிருக்கிறார் 🙂
[21:44] TED-ல் தமிழ் ஆர்வலர்கள் மொழிபெயர்க்கலாம்.
[21:44] நமது பாரம்பரியத்தை விளக்கிச் சொல்லும் செயலிகளைத் தமிழில் உருவாக்க வேண்டும்.
[21:45] <+ravishankar> நிஞ்சு, இதில் முன்னுரிமை பின்னுரிமை எல்லாம் இல்லை. எல்லாவற்றையும் பேசுவோம். அவரவர் ஆர்வத்துக்கு ஏற்ப திட்டங்களை எடுத்துக் கொள்ளலாம்
[21:45] <+ravishankar> திட்டமிட்டு முறையாக எதையும் தவிர்க்கப் போவதில்லை
[21:45] கடைசி 15 நிமிடங்கள்…
[21:45] <+ravishankar> பாலா, குண்டு வெடிக்கப் போற மாதிரி இது என்ன அறிவிப்பு 🙂
[21:46] காலையில் அலுவலகம் பாஸ், மணி இங்கே 12:15 🙂
[21:46] தேர்வு அறையில் கூட இப்படித்தான் சொல்வார்கள்..
[21:46] <+ravishankar> 🙂
[21:46] 🙂
[21:46] <+ravishankar> யாராவது புதிதாக இங்கு வந்திருந்தால் https://www.facebook.com/groups/nugartamil/ உரையாடல்களைத் தொடருங்கள்
[21:47] <+ravishankar> இதன் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு, நுகர்வோர் உரிமை, அலுவல் மொழிச் சட்டம் ஆகியவற்றில் அனுபவம், ஈடுபாடு, நம்மைப் போன்ற ஆட்களுக்குக் குறைந்த செலவில் 🙂 வழக்கு நடத்தும் வழக்கறிஞர் விவரங்கள் தேவை
[21:47] <+ravishankar> யாராவது தெரிந்தால் எனக்கு அறிமுகப்படுத்துங்கள்.
[21:48] <+ravishankar> தமிழில் பாடல் வரிகளைத் தாருங்கள் என்ற வேண்டுகோளுக்கு ஏற்ப Think Music, Tiger audios ஆகியவை பாடல்களைத் தமிழில் தரத் தொடங்கியுள்ளன
[21:48] <+ravishankar> https://www.youtube.com/watch?v=O7DFE5ipiRs
[21:48] <+ravishankar> இவற்றைப் பரப்பி உதவுங்கள்
[21:48] நல்வினை வழக்கறிஞர் என ஒரு குழுமத்தைப் பேஸ்புக்கில் பார்த்த நியாபகம். அவர்கள் உதவக்கூடும்.
[21:48] <+ravishankar> இது போல் வேறு எங்கெல்லாம் கேட்கும் வாய்ப்பு இருக்கிறதோ கேளுங்கள்
[21:48] == esakkiraj has quit
[21:49] <+ravishankar> நல்வினை வழக்கறிஞர்.. அடடா என்ன ஒரு பெயர் 🙂
[21:49] == thamiziniyan has quit
[21:49] https://www.facebook.com/groups/453406141356664/?fref=ts
[21:50] <+ravishankar> அடுத்த சந்திப்பை அக்டோபர் 16 இதே நேரம் வைப்போமா இல்லை வார இறுதியில் வைப்போமா.. வார இறுதியில் என்றால் பல்வேறு பொழுதுபோக்கு, ஊர் பயணங்களும் இருக்கும்
[21:50] Sony நிறுவனம் இன்னும் அசைந்து கொடுக்கவில்லை.
[21:51] வாட்ஸ் ஆப் போன்ற அரட்டைச் செயலிகளைப் போன்று தமிழிலும் செயலி உருவாக்கினால்?…
[21:51] இடையே இரண்டு வாரம் கழித்து வைத்தால் என்ன?
[21:51] <+ravishankar> சோனியும் விரைவில் மாறக்கூடும். சில உறுதிப்படுத்தாத தகவல்கள் கிடைத்துள்ளன. பொறுத்திருப்போம் 🙂
[21:51] வாரம் ஒருமுறை இந்தக் கலந்துரையாடல் நடக்கக் கூடாதா?
[21:52] <+ravishankar> whatsapp போன்ற செயலி உருவாக்குவது எளிது. பரவலாக்குவது தான் கடினம். network effect
[21:52] அட நல்ல செய்தி 🙂 நானும் சோனி நிறுவனப் பக்கங்களில் பின்னூட்டமிட்டுள்ளேன். பார்க்கலாம்.
[21:52] <+ravishankar> அது போன்ற பரவலான செயலிகளில் தமிழ் இடைமுகப்பு பெறக் கோரலாம்.
[21:52] <+ravishankar> மாதம் ஒரு முறை என்றால் நாம் பேசிய செயற்பாடுகளைச் செய்ய நேரம் கிடைக்கும்
[21:52] அருமை பார்ப்போம் என்ன செய்கின்றார்களென
[21:52] <+ravishankar> இல்லாவிட்டால் தொடர் அரட்டையாகுமோ என்று அச்சம்.
[21:52] ஓ சரி.
[21:53] <+ravishankar> ஏற்கனவே இங்கு உள்ள எல்லாரும் பல பணிகளில் தலையை விட்டுக் கொண்டிருப்பவர்கள் தாம். எனவே, போதிய கால இடைவெளி இருப்பது நன்று.
[21:53] ம்ம்ம்…
[21:53] பட்டியலிட்ட பணிகளுக்கு
[21:53] <+ravishankar> நல்வினை குழுவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. தொடர்பு கொள்கிறேன்
[21:53] இந்த உரையாடலின் படியை எங்கு ஆவணப்படுத்துவீர்கள் இரவி? அதன் உரலி என்ன?
[21:54] ஆட்கள் பட்டியில் தேவை
[21:54] <+ravishankar> ஒரு wordpress.com தளத்தில் போட்டு விட்டுச் சொல்கிறேன்.
[21:54] யார் யார் என்னென்ன பணிகளை
[21:54] நல்லது. நுகர் தமிழ் குழுவில் அதன் இணைப்பைக் கொடுங்கள்.
[21:54] செய்யப் போகிறோம்
[21:54] <+ravishankar> 2, 5 நான் பொறுப்பு
[21:55] <+ravishankar> peyar.in செயலி குறித்து நானும் சீனியும் தொடர்பு கொள்கிறோம்
[21:55] == pattapeyar has quit
[21:55] <+ravishankar> மணிவண்ணன், நீங்கள் தமிழுக்கான தேவைகள் தொடர்பான mindmap உருவாக்க முடியுமா
[21:55] ஒரு சிறு கேள்வி. ted மொழிபெயர்ப்பு என்பது வாய் மொழியாகவா உல்லது எடுத்துகளாகவா?
[21:55] <+ravishankar> tedல் எழுத்து தான்
[21:55] எழுத்துகளாக..
[21:56] Ted ஐத் தமிழாக்கம் செய்ய மலேசியத் தமிழர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்.
[21:56] மலேசியத் தமிழர் அறக்கட்டளை ஒன்று செய்கிறது
[21:56] <+ravishankar> எடுத்துக்காட்டுக்கு, http://www.ted.com/talks/derek_sivers_how_to_start_a_movement?language=ta
[21:56] <+ravishankar> பாருங்கள்
[21:56] இந்த உரையாடல் தொடர்பான ஐ எல்லோருக்கும் அனுப்புங்கள்
[21:56] அது போலத் தமிழகத்திலும் செய்யலாம்.
[21:56] <+ravishankar> காசு கொடுக்கிறார்கள் என்றால் நல்ல விசயம் தான். இந்த பணி வாய்ப்பை ஆவணப்படுத்தலாம்
[21:57] http://www.ted.com/talks/browse?language=ta
[21:57] <+ravishankar> மணிவண்ணன் mindmap பொறுப்பேற்க முடியுமா
[21:57] @ravi இந்த உரையாடல் தொடர்பான MOM ஐ எல்லோருக்கும் அனுப்புங்கள்
[21:57] முயல்கிறேன். யாராவது துணை இருந்தால் நல்லது.
[21:57] <+ravishankar> மயூ, மகப்பேறு, உழவு போன்று பரவலாக தேவைப்படும் உள்ளடக்கங்கள் என்ன என்று நீங்கள் ஒரு பட்டியல் தர முடியுமா
[21:57] <+ravishankar> நீங்கள் தொடங்குங்கள்
[21:57] <+ravishankar> நாங்கள் தொடர்கிறோம் 🙂
[21:57] == Selin has joined #tamilirc
[21:58] <+ravishankar> இன்னும் இரு நிமிடங்களே
[21:58] <+ravishankar> இப்போதைக்கு அடுத்த சந்திப்பு அக்டோபர் 16 இரவு 9 மணி என்று வைத்துக் கொள்வோம்
[21:58] வணக்கம். செலின், இலண்டனில் இருந்து 🙂
[21:58] <+ravishankar> மற்ற விவரங்களை முகநூலில் ஒருங்கிணைக்கலாம்
[21:58] <+ravishankar> வணக்கம் செலின்
[21:58] நல்லது. உடன்படுகிறோம்.
[21:58] நன்றி ரவி இந்த முயற்சியை துவங்கியமைக்கு.
[21:58] <+ravishankar> வேறு யாரேனும் கூட இந்த உரையாடலை ஒரு படியெடுத்துக் கொள்ளுங்கள்
[21:58] <+ravishankar> சாளரத்தை மூடும் முன்
[21:58] <+ravishankar> நன்றி செலின்
[21:58] <+ravishankar> நான் விடைபெறுகிறேன்
[21:59] <+ravishankar> எல்லாருக்கும் இரவு, மாலை, காலை வணக்கங்கள் 🙂
[21:59] ravishankar: i will have a copy always
[21:59] <+ravishankar> நன்றி, சண்முகம்
[21:59] நன்றி
[21:59] சரி இரவி நான் அதை செய்கின்றேன்
[21:59] வணக்கம்
[21:59] நானும் தான் 🙂 விடைபெறுகிறேன் நண்பர்களே..
[21:59] hangout முறையில் தொடர்பு கொள்வோம்
[21:59] நன்றி இரவி
[21:59] ravi send the MOM
[21:59] அடுத்த முறை
[21:59] to all
[21:59] இரவு வணக்கங்கள்
[21:59] இரவு வணக்கத்தை நெடுந்துயிலாள் ஆட்கொள்க எனலாம்
[21:59] == gurulenin has quit [Quit: Page closed]
[21:59] my ID niranjanbharathi@gmail.com if needed